மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் - CEO Proceeding

 மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Click here to download pdf file


மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள்  மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


Click here to download pdf file

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.11.2022


திருக்குறள் 

பால்: அறத்துப்பால்


அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பழமொழி :

"A light heart lives long. 
மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."

இரண்டொழுக்க பண்பாடு 

.1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.

பொன்மொழி 

"உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ்

பொது அறிவு 

1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?

 வெள்ளி .

 2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ? 

லைகா.

English words - meanings

Zoo pathology - study of animal diseases. Noun. விலங்குகள் நோய் குறித்த படிப்பு

 
ஆரோக்கிய வாழ்வு

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் பிரச்சனை  பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, நாவல் பழ விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பொடியை தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

NMMS
__________டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. விடை :பழவேற்காடு

நீதிக் கதை

ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். 




ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். 

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


செய்திகள் : 14.11.2022

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 108 இடங்களில் கனமழை பெய்தது - புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16-ம் தேதி உருவாகிறது.

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2-வது முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் ஆபத்து - ‘நேச்சர் மெடிசின்’ இதழில் ஆய்வுத் தகவல்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து.

2024 -2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்.





English News 

In Tiruvannamalai District water released excessively from both Sattanur dam and kuppanaththam dam. Due to this there is flooding both in Thenpennai and Seyyaru rivers. So government gave warning to the people living in the banks.

In Mayiladuthurai district 16, 000 were people were made to stay in the relief camps and nearly 45,826 hectare crops were affected by flood water by Minister K. K. S. S. R. Ramachandran 

There will be showers of rain for 4 days in TN as per the weather forecast 
In a single day there is a record of heavy rain in 108 places and another depression will form on 16th
 
The Draft Report for State Education Policy will be submitted to TN government within 6 months 

According to "Nature Medicine" Magazine if a person gets affected second time by 'Corona' there is a danger of losing lives
In Australia the variant omicron XPP is spreading fast. The health officers warned this as 4th wave. So the Australian government made many restrictions.

England won T-20 World Cup 2nd time by defeating Pakistan

ICC released the list of countries which are going to play for the period of 2024 - 2027 for under 19

Asian boxer Shiva Dabah won the gold medal.

BEO's School Annual Inspection New Form

  


BEO's School Annual Inspection New Form - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 



பள்ளிப் பார்வை" செயலியில் அலுவலர்கள் வகுப்பறையை உற்றுநோக்கி பதிவிடும் தகவல்கள்

 


"பள்ளிப் பார்வை" செயலியில் அலுவலர்கள் வகுப்பறையை உற்றுநோக்கி பதிவிடும் தகவல்கள்


Palli Paarvai - TNSED Administrators App - New User Manual - Download here

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

கனமழை: 14.11.2022 - பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 கனமழை: மயிலாடுதுறை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


- மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பு

சமூக முன்னேற்ற உறுதிமொழி ( 14.11.22 ) அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும்.

 அனைத்துத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், அனைத்துக் குழந்தைகளும், 14.11.22 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுத்தல் வேண்டும்.



ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய பள்ளிக்கல்வித்துறை ஆணை!!!

 தமிழ்நாடு அமைச்சுப்பணி - மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...




அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

IMG-20221112-WA0002

Children's Film 14.11.2022 at School - Gubbachigalu Movie Download Link

 14.11.22 அன்று அனைத்து நடுநிலை,உயர்நிலை,மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம்

Gubbachigalu சிறார் திரைப்படம் 272 MP download link

👇👇👇👇👇👇

Children's Film 14.11.2022 at School - Gubbachigalu Movie Download Link - Click here

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Rain Flash : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 12.11.2022

 கனமழை - 12.11.2022 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :


கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று 28 மாவட்டங்களுக்கு நாளை ( 12.11.2022 ) விடுமுறை அறிவிப்பு 

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 

 

* மதுரை

* சிவகங்கை 

* ராணிப்பேட்டை

*ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் ) 

* திருப்பத்தூர்

* கோவை

* திண்டுக்கல் 

* தேனி

* திருவண்ணாமலை 

* கள்ளக்குறிச்சி

* தருமபுரி

+ தஞ்சாவூர் 

* புதுக்கோட்டை 

* கரூர்

* சேலம்

* பெரம்பலூர்

* திருச்சி

* செங்கல்பட்டு

* நீலகிரி

* வேலூர்

* திருவாரூர்

* மயிலாடுதுறை

* அரியலூர் 

* விழுப்புரம் 

* காஞ்சிபுரம் 

* கடலூர் 

* சென்னை 

* திருவள்ளூர் 

ஆகிய மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை 

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ITK - ILLAM THEDI KALVI - Remedial Teaching - Training Videos

 ITK - illam Thedi Kalvi - Remedial Teaching - Training Videos 


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வர்களுக்கு நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான வீடியோ பாடப்பொருள்.

Tamil

1. Tamil_Chapter_01 - Download here

2. Tamil_Chapter_02 - Download here

3. Tamil_Chapter_03 - Download here

4. Tamil_Chapter_04 - Download here

5. Tamil_Chapter_05 - Download here

English


English Full Video Link - Click here

1. English_Chapter_01 - Download here

2. English_Chapter_02 - Download here

3. English_Chapter_03 - Download here

4. English_Chapter_04 - Download here

5. English_Chapter_05 - Download here

Maths


1. Maths_Chapter_01 - Download here

2. Maths_Chapter_02 - Download here

3. Maths_Chapter_03 - Download here

4. Maths_Chapter_04 - Download here

5. Maths_Chapter_05 - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

குறுவளமைய கலந்தாலோசனை கூட்டம்(CRC) 26.11.2022 அன்று நடைபெறும்

 


குறுவளமைய கலந்தாலோசனை கூட்டம்(CRC) 26.11.2022 அன்று நடைபெறும்.


26.11.2022 சனிக்கிழமை அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும் SCERT இயக்குநரின் செயல்முறைகள்.


1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும்.


4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு Spoken English


CRC - Chief Facilitator training - Reg..pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி

 தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,

தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் குறித்த பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட தகவல் தொகுப்பு....

 


 

1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் குறித்த பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட தகவல் தொகுப்பு....

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


Learning Outcomes Detail - Download here


1 To 10th Std Learning Outcomes - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

2023 NR Proceeding - instruction to all HMs

 


10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பெயர்ப் பட்டியல் தயாரித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 2023 NR Proceeding - instruction to all HMs.pdf - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

12.11.22 CRC meeting postponed.

 

மாநிலக் ஒருங்கிணை கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக் ( CRC ) கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Ennum Ezhuthum - November 3rd Week Lesson Plan ( Module - 5 )

 

Ennum Ezhuthum - November 3rd Week Lesson Plan ( Module - 5 )


Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

கனமழை - 29மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022



1) திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

2)காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

3)செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு




4) ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

5) சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


6) வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

7) திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

8) தஞ்சை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

9) நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

10) மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

11) அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


13) சேலம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


14) ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது*

15) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது..



16) திருவண்ணாமலை,  நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 


17) நாமக்கல் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை 

18) சிவகங்கை மாவட்ட பள்ளி விடுமுறை*


19) பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை 





20) புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை

21) திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 

22) அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

23) மதுரை மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

24) கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

25) திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை


26) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

27) தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை




28) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவிப்பு

29) தர்மபுரி மாவட்ட பள்ளி கல்லூரி விடுமுறை

30) புதுச்சேரி காரைக்கால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2022


 திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

பழமொழி :

Be still and have thy will.

அமைதியாய் இரு. விரும்பியதை பெறுவாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.

பொன்மொழி :

சிக்கல் என்னவென்றால், உங்களுக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். --ஜாக் கோர்ன்ஃபீல்ட்

பொது அறிவு :

1. நீராவிக்கு உந்து சக்தி உண்டு என்பதை கண்டறிந்தவர் யார்? 

ஜேம்ஸ் வாட்.

 

2. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
பாதரசம்

English words & meanings :

Urology - study of urine and it's tracts. Noun. சிறுநீர் மற்றும் அதன் பாதை குறித்த அறிவியல் படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

தொண்டை வலிக்கு முலேத்தி தேநீர் அதிசயங்களை செய்யும். ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு சிறிய துண்டு முலேத்தி வேரைச் சேர்க்கவும். இந்த கொதிக்கும் கலவையில் துருவிய இஞ்சியைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், ஒரு கோப்பையில் கலவையை வடிகட்டி, ஒரு தேநீர் பையைச் சேர்த்து சாப்பிடலாம்.

NMMS Q :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து ____________மீட்டர் உயரமுடைய பெரும்பாறை ஒன்றில் அமைந்துள்ளது 

விடை : 70

நவம்பர் 09


அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்
அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிக்கதை

புள்ளிமான்கள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. 

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள். 

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. 

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது. 

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும். 

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

09.11.22

* தமிழகத்தின் 17வது காட்டுயிர் காப்பகம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் அமைத்து அரசாணை வெளியீடு.

* 10 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

* தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள்: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்.

* தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு.

* பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடக்கம் - 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர்.

* அண்டத்தின் 'வைல்ட் டிரிப்லெட்' எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை  நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: 12 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா.

* கேலோ இந்தியா கைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

Today's Headlines

* Tamil Nadu's 17th Wildlife Sanctuary: An GO is issued to set it at Dharmapuri, Krishnagiri.

*  Chief Minister M. K. Stalin has issued the Tamil Nadu Aerospace and Defense Industry Policy to provide employment to 1 lakh people in 10 years.

* 5093 relief camps are on standby: Information from Tamil Nadu Disaster Management Department.

 * The Government of Tamil Nadu has issued an ordinance to set up an expert committee to enact laws for the implementation of social justice principles at all levels in Tamil Nadu government affairs.

* To abolish Anti-terrorist financing action: India-led international conference will be held in Delhi next week under the heading of India 

 * Climate Change Summit kicks off - More than 100 world leaders gathered in Egypt

*  NASA's Hubble Space Telescope has captured a picture of two galaxies known as the 'Wild Triplet' of the universe.

 * Asian Boxing Championship: India secures 12 medals

 * KELO India Volleyball: Tamil Nadu Women's Team Champion.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்