பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குக: அன்புமணி வலியுறுத்தல்

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் 29.11.2022-ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  


தமிழ்நாட்டில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 

போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம்  500 அரசு நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தரப்படுமா எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதலமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், WiFi வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக  அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


Click here for latest Kalvi News 

Breaking : TET Paper 2 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இறுதி விடைக் குறிப்புடன் வெளியீடு

TET Paper 2 - Exam Result Published 

.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -11 ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.022023 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது . இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர் . தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative key Answer ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in- ல் 22.02.2023 அன்று வெளியிடப்பட்டது.


 தற்காலிக விடைக்குறிப்பிற்கு 22.02.2023 முதல் 25.02.2023 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை ( Objections ) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது . ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வு விடைத்தாளினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன . தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்படுகிறது.

Click here for Result (Individual Query)

Click here for Mark list of all candidates

Click here for Final Key

Click here for Status of Objections

Click here for With-held Candidates List


Dear Candidate,

The Scorecard for TNTET Paper II is available for download in the Candidate Dashboard.

Please download the Scorecard by following the steps given below:

1.Go to https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ 

2.Login with your Registered User ID and Password

3.Go to Candidate Dashboard

4.Click here to download Scorecard

Regards

TRB 

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் - நம்ம School - நம்ம ஊரு பள்ளி உறுப்பினர் செயலரின் வழிகாட்டுதல்கள்!

 



பள்ளிக் கல்வித் துறை “ நம்ம School - நம்ம ஊரு பள்ளி " இணையதளம் மற்றும் சமூக பங்களிப்பு நிதி ( CSR ) , பொருட்கள் மற்றும் தன்னார்வ சேவைகள் பெறுதல் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான பதிவுகள் ஊக்கப்பபடுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு செயலரின் வழிகாட்டுதல்கள்!

SPD - School Needs Updation & Alumni.pdf - Download here...

Click here for latest Kalvi News 

எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!

 எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் , மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக் கேற்றவாறு முடிவு செய்து , தேர்வு நேரத்தில் சலுகைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Click here for latest Kalvi News 

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது பணியில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


அதில் கூறியதாவது; பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.


Click here for latest Kalvi News 

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

 சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். 

சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

Click here for latest Kalvi News 

வரும் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம்: முதல் பருவ மாநில அளவிலான பயிற்சி ஏப்.5-ல் தொடக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டிலும் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் முதல் பருவத்துக்கான மாநில அளவிலான பயிற்சி மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது.


இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


2022-23-ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான (2023-24) எண்ணும் எழுத்தும் திட்டம் பயிற்சி தொடர்பான தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கான முதல் பருவ பாடங்கள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.


இதைத்தொடர்ந்து, 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முதல் பருவத்துக்கான பயிற்சிகளை மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 5 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் ஏப்ரல் 4-ம் தேதி இரவு 8 மணிக்குள் வருகை புரிய வசதியாக அவர்களை பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து, மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஏப்ரல் 10 முதல் 12-ம் தேதி வரையும் அதன்பிறகு ஒன்றிய அளவிலான பயிற்சி ஏப்ரல் 24 முதல் 26-ம் தேதி வரையும் நடத்தப்படும்.


Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  

CEOs & DEOs அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் திடீர் மாற்றம் - பள்ளி கல்வி ஆணையர்

 


பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 28.03.2023 , 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால் 28.03.2023 அன்று நடைபெறுகின்ற கூட்டம் இரத்து செய்யப்படுகிறது தற்போது 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய இரு நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . 29.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மற்றும் 30.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) , APO's ( Elementary ) , DCs ( in DEO Elementary office ) , TamilNadu Education Fellows ( in DEO Elementary office ) ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் அலுவலர்கள் கலந்து கொள்வது சார்ந்து தகவல் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here for latest Kalvi News 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.


மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

Year End Submission Forms for Primary And Upper Primary Schools

Year End Submission Forms 2022 - 2023

கல்வி ஆண்டின் இறுதியில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய படிவங்கள்


Working Days - Download here

5+ - Download here

TRs Address - Download here

Teachers Leave Details - Download here

Census 2023 - Download here

Result Abstract - Download here

BEO Covering Letter - Download here

Free Book & Dress - Download here

Free Note Book - Download here

TC Request Letter - Download here

 EER 2023 - 2024 | Download here

Result 2023 - 2024 | Download here

 Click here for latest Kalvi News 

School Education - New Student Admission Form 2023 - 2024


பள்ளிக்கல்வித்துறை  - புதிய மாணவர் சேர்க்கை விண்ணப்பம்


School Education - New Student Admission Form 2023 - 2024 | Download here

Click here for latest Kalvi News 

EMIS POTENTIAL DROPOUT NEW UPDATE

 

EMIS POTENTIAL DROPOUT NEW UPDATE


நமது பள்ளியில் தொடர்ச்சியாக *3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு


காரணம்


மீண்டும் பள்ளிக்கு வருகை புரியும் தேதி


பதிவு செய்வதற்கான வழிமுறை


👇👇👇👇👇


Click here for latest Kalvi News 

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 


2022-23ல் மதிப்பீட்டுப்புலம் ( Assessment Cell ) வாயிலாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடிவினா நடத்திடத் தேவையான A4 sheet பேப்பர்கள் வாங்குதல் சார்ந்து நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கென EMIS தரவு தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுப்பு மற்றும் பள்ளிவாரியாக வினாத்தாள்கள் அச்சிட தேவையான A4 sheet பேப்பர்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மேற்காணுமாறு நிதியினை விடுவிக்க அனுமதி வேண்டப்படுகிறது

Assesment - A4 Sheet Proceedings.pdf - Download here

Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!

 எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!


°எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்!


°FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும்.


°மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)online வழியாக17-04-2023 முதல் 21-04-2023 வரை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும்.


°ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில்  TN-ATTENDANCE-EE ASSESSMENT ல் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் PDF வடிவில் கொடுக்கப்படும் போது அதனை download செய்து written exam வைத்து கொள்ளலாம். இம் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் online -ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை...


Click here for latest Kalvi News 

கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

 கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014ம் ஆண்டு கடற்கரை தூய்மை பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். மாமல்லபுரம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதனகோபால் என்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி கடலில் குதித்ததால் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.

தனது மகனின் மரணத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த மாணவரின் தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் தரப்பில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக எவ்வித தகவலும் தரவில்லை எனவும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் தகுந்த பாதுகாப்பை செய்திருப்போம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருப்போம் என தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி தரப்பில் மாணவர்கள் யாரும் கடலில் இறங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் 2 மாணவர்கள் குளித்தபோது அதில் மதனகோபால் என்ற மாணவரை காப்பாற்ற இயலவில்லை. இதற்காக கல்லூரியை பொறுப்பாக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிபதி உத்தரவில், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால் மாணவர் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

மாணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரி சுற்றுலா நிகழ்ச்சிகளை நடத்தும்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Click here for latest Kalvi News 

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு நகல்!

 HS HM Promotion Case Judgement:

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

HS HM Promotion Case Judgment Copy - Download here


Click here for latest Kalvi News 

ஆசிரியர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

ஒன்றிய அளவிலான பயிற்சி

24-04-2023

25-04-2023

26-04-2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது

SCERT Proceedings - Download here


Click here for latest Kalvi News 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET -;2 தேர்ச்சி அவசியம் - நீதிமன்ற தீர்ப்பின் நகல்.

 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2- ல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்.

Ennum Ezhuthum - Term 3 - Assessment Schedule & Dir Proceedings

 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு தொகுத்தறி தேர்வு தேதி & தேர்வுகள் நடத்துதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Assessment Proceedings for Term - III - 23.03.2023.pdf - Download here


Click here for latest Kalvi News 


கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை தொடங்கலாம்sc

 .

கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.


இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது.


இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.


தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.


Click here for latest Kalvi News 

Shaala Siddhi Format 2022 - 2023.pdf

Kendriya Vidyalaya Sangathan Admission Notice 2023-2024.

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.


05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி, உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.


Click here for latest Kalvi News 

8வது வகுப்பை இந்திய இராணுவக் கல்லூரியில் படிக்கலாம்... பெற்றோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

 டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2023 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 " என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

காசோலை மூலமாக (By sending Demand Draft):- கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடுன் அவர்களுக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல் பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576) உத்தரகாண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இணையவழி மூலமாக (online payment) : இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின் ) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2011 க்கு முன்னதாகவும் 01-07-2012 - க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01-01-2024- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில்(Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in பார்க்கவும் என்று தெரிவித்துள்ளது.


Click here for latest Kalvi News