பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 


2022-23ல் மதிப்பீட்டுப்புலம் ( Assessment Cell ) வாயிலாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடிவினா நடத்திடத் தேவையான A4 sheet பேப்பர்கள் வாங்குதல் சார்ந்து நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கென EMIS தரவு தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுப்பு மற்றும் பள்ளிவாரியாக வினாத்தாள்கள் அச்சிட தேவையான A4 sheet பேப்பர்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மேற்காணுமாறு நிதியினை விடுவிக்க அனுமதி வேண்டப்படுகிறது

Assesment - A4 Sheet Proceedings.pdf - Download here

Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!

 எண்ணும் எழுத்தும் 3ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!


°எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்!


°FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும்.


°மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)online வழியாக17-04-2023 முதல் 21-04-2023 வரை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும்.


°ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில்  TN-ATTENDANCE-EE ASSESSMENT ல் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் PDF வடிவில் கொடுக்கப்படும் போது அதனை download செய்து written exam வைத்து கொள்ளலாம். இம் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் online -ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை...


Click here for latest Kalvi News 

கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

 கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கடந்த 2014ம் ஆண்டு கடற்கரை தூய்மை பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். மாமல்லபுரம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதனகோபால் என்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி கடலில் குதித்ததால் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.

தனது மகனின் மரணத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி உயிரிழந்த மாணவரின் தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாநில அரசுகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியோர் தரப்பில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக எவ்வித தகவலும் தரவில்லை எனவும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் தகுந்த பாதுகாப்பை செய்திருப்போம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருப்போம் என தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி தரப்பில் மாணவர்கள் யாரும் கடலில் இறங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் 2 மாணவர்கள் குளித்தபோது அதில் மதனகோபால் என்ற மாணவரை காப்பாற்ற இயலவில்லை. இதற்காக கல்லூரியை பொறுப்பாக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நீதிபதி உத்தரவில், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால் மாணவர் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

மாணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரி சுற்றுலா நிகழ்ச்சிகளை நடத்தும்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Click here for latest Kalvi News 

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு நகல்!

 HS HM Promotion Case Judgement:

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

HS HM Promotion Case Judgment Copy - Download here


Click here for latest Kalvi News 

ஆசிரியர்களுக்கு 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 2023- 24 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

ஒன்றிய அளவிலான பயிற்சி

24-04-2023

25-04-2023

26-04-2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது

SCERT Proceedings - Download here


Click here for latest Kalvi News 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET -;2 தேர்ச்சி அவசியம் - நீதிமன்ற தீர்ப்பின் நகல்.

 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2- ல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்.

Ennum Ezhuthum - Term 3 - Assessment Schedule & Dir Proceedings

 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு தொகுத்தறி தேர்வு தேதி & தேர்வுகள் நடத்துதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 17.04.2023 முதல் 21.04.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Assessment Proceedings for Term - III - 23.03.2023.pdf - Download here


Click here for latest Kalvi News 


கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை தொடங்கலாம்sc

 .

கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.


இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது.


இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.


தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.


Click here for latest Kalvi News 

Shaala Siddhi Format 2022 - 2023.pdf

Kendriya Vidyalaya Sangathan Admission Notice 2023-2024.

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது.


05.04.2023 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி, உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.


Click here for latest Kalvi News 

8வது வகுப்பை இந்திய இராணுவக் கல்லூரியில் படிக்கலாம்... பெற்றோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

 டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2023 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 " என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

காசோலை மூலமாக (By sending Demand Draft):- கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடுன் அவர்களுக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல் பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576) உத்தரகாண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இணையவழி மூலமாக (online payment) : இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின் ) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2011 க்கு முன்னதாகவும் 01-07-2012 - க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01-01-2024- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில்(Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in பார்க்கவும் என்று தெரிவித்துள்ளது.


Click here for latest Kalvi News 

2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

 National Curriculum Framework for the Foundational Stage: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும். இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (அங்கன்வாடி மையங்கள் மூலமாக கற்றல் நடைபெறும்) 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும்.

இந்த 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான தேசியப் பாடத்திட்ட கற்பித்தல் கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கியது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், நாட்டிலுள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில், நர்சரி வகுப்பு முதல், இரண்டாம் வகுப்பு வரையில் ஐந்து வகுப்புகளுக்கு இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அமல்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது . நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த புதிய கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடதிட்டங்களை தனியார் பதிப்பகங்கள், பாடபுத்தகங்களாக அச்சிடலாம். இதை பின்பற்றி தனியார் பதிப்பகங்கள், பாட புத்தகங்களை தயாரித்து வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அந்தந்த மாநில மொழி பாடம், இந்தி , ஆங்கிலம் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

SCHOOL - SMC/SNA ACCOUNT NEW UPDATE

 💥SMC/SNA ACCOUNT NEW UPDATE


🟪 PRIMARY


🟢 1.6.1.11.7 என்ற component code -யில் Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.10 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....


🟨 UPPER PRIMARY


🟢 1.6.1.11.7 என்ற component code -யில் *Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.60  SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....


🟢 F.03.08 என்ற component code- யில் LEP Class IX - XII என்ற component name - யில் ₹.1392 வரவு வைக்கப்பட்டுள்ளது...



▪️LEP - Learning Enhancement Program / Remedial Teaching


இதுபோன்று நமது பள்ளியின் SNA Account- யில் வரவு வைக்கப்படும் தொகை விரவங்களை component code , name wise தெரிந்து கொள்வது எப்படி?


கீழே உள்ள காணொளி யை காணவும்

👇👇👇👇👇👇👇👇👇



Click here for latest Kalvi News 

NMMS - திறன் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

 

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.


எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.


இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Click here for latest Kalvi News 

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு - 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 

நடைபெறவுள்ள ஏப்ரல் பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum Class Room - Inspection Form

 

எண்ணும் எழுத்தும் வகுப்பினை உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளும்  போது வகுப்பறையில் இருக்க வேண்டிய தகவல்கள்


எண்ணும் எழுத்தும் கள ஆய்வு படிவம்.


Ennum Ezhuthum Class Room - Inspection Form - Download here

Click here for latest Kalvi News 

கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் தேதி அறிவிப்பு

 கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் 31.03.2023 தேதி நடைபெறும் என அறிவிப்பு


Click here for latest Kalvi News 

வினாத்தாள் வெளியாவதை தடுக்க புதிய முயற்சி!

  6 முதல் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கி, தேர்வன்று பள்ளிகளிளேலே பிரிண்ட் எடுத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பபட்டுள்ளன. வெளி இடங்களில் பிரிண்ட் எடுப்பதன் மூலம் வினாத்தள் லீக் ஆவதை தடுக்க கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

Click here for latest Kalvi News 

Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF

 


தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் ( Pdf )  


 Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here


Click here for latest Kalvi News 

தமிழக பட்ஜெட் 2023 - 2024 | கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

 

எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?


* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி


* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி 


* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி


தமிழக பட்ஜெட் 2023 - 2024 |  கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் 

* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்

* திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்


TN BUDGET - EDUCATION ANNOUNCEMENT - Download here pdf


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்

 எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்


Ennum Ezhuthum Celebration Invitation - Download here


Click here for latest Kalvi News 

TRB - 4136 கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

 

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Colleges of Education forthe year 2023-2024


Total Vacancies 4136

Trb notification 18.03.23 - Download here



Click here for latest Kalvi News 

வானவில் மன்றம் ( Vanavil Mandram ) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 

வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 Rainbow Forum - Winners List - Download here...

Click here for latest Kalvi News