BASELINE ASSESSMENT SURVEY CLASS 5

 BASELINE ASSESSMENT SURVEY CLASS 5


🪷 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை திறனாய்வு (Baseline survey) மேற்கொள்ள வேண்டும்.


நாட்கள்  26.06.230முதல் 05.07.23 வரை


பாடம்

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு.


♦️ சார்ந்த வகுப்பாசிரியர்கள் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். 


📌 *மதிப்பீடு  மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவை*


♦️ TNSED schools  செயலி  மூலம் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.


♦️ செயலியில் மதிப்பீடு மேற்கொள்ளும்  ஆசிரியரின் EMIS ID  மற்றும் password பயன்படுத்த வேண்டும்.


♦️செயலியில் Ennum Ezhuthum -  classroom details 5 ஆம்  வகுப்பை தேர்வு  செய்தல்  வேண்டும் .


♦️தங்களது  வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் EMIS students list ல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.( EMIS portal மற்றும் Tnsed செயலி இரண்டிலும் ) 


♦️தங்களது வகுப்பில் long absentees மாணவர்கள் இருப்பின் , அவர்கள் ஜுன் 30 க்குள் பள்ளிக்கு வருகை தர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் பள்ளிக்கு வருகை தந்த பின்னர் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை அம்மாணவனுக்கு today absent என்று குறிப்பிட வேண்டும். 


♦️ அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் CWSN என்று குறிப்பிட தேவையில்லை. ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலும் . அவர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். Home based மாணவர்கள் மற்றும் ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலாது. அவர்களுக்கு CWSN என்று குறிப்பிட வேண்டும். தங்களது பள்ளியின் சிறப்பு ஆசிரியரின் ஆலோசனை மற்றும் உதவியை பெறலாம்.


📌 குறிப்பு:

 ஒருமுறை long absent அல்லது CWSN என்று mark செய்த மாணவர்களுக்கு மீண்டும் மதிப்பீடு செய்ய இயலாது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.06.2023



Prepared by


✓ திருக்குறள்
✓ பழமொழி
✓ இரண்டொழுக்க   
     பண்புகள்
✓ பொது அறிவு
✓ நீதி கதைகள்
✓ இன்றைய செய்திகள்





School Morning Prayer Activities - 26.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.06.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம்:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.


பழமொழி :
A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம். --தாமஸ் அல்வா எடிசன்


பொது அறிவு :

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: சார்லஸ் பாபேஜ்

சதுரங்கம் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?


விடை: இந்தியா


English words & meanings :

 Disease –sickness. நோய். Entrance –a passage or gate to go inside a place. வாசல்


ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது. முறையான பயிற்சி அவசியம்.


நீதிக்கதை

பாலைவனத்தில்_பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன் குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.

குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில்
 தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா? தண்ணீர் வருமா?
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால், அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்
தாகமும் தணியும் உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்
தண்ணீரைக் குடித்து விடுவதே
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால்
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை
ஆனது ஆகட்டும் என்று......

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!தாகம் தீர வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்த்து.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை பிறருக்கும்
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்


இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!


இன்றைய செய்திகள் - 26.06. 2023

*26 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து சென்ற முதல் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியுடன் உற்சாக வரவேற்பு.

*பறவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில பறவை ஆணையம் அமைப்பு.

*எல்நினோ காலநிலை நிகழ்வு காரணமாக மீண்டும் உயிர்க்கொல்லி வைரஸ்கள் உருவாகும் அபாயம். கடுமையான வெப்பம் காரணமாக வெப்ப மண்டல நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.  

*செவ்வாய் கிரகத்தில் மாறிவரும் பருவநிலையை படம் பிடித்தது நாசா. சூரியனுக்கு அருகே செங்கோள் சென்ற போது எடுக்கப்பட்ட புற ஊதாக்கதிர் படம் வெளியானது. 

*தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவு அதிகபட்சமாக மதுரை புறநகர் பகுதியில் 104.4 டிகிரி பதிவானது. 

*TNPL : திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை.


Today's Headlines

*The first Indian Prime Minister to visit Egypt after 26 years and he was welcomed with the tricolor flag.

 * On behalf of the Tamil Nadu government to strengthen the protection of birds A State Bird Commission has been set up.

 *Risk of resurgence of life-killing viruses due to El Niño climate event.  The World Health Organization has warned that tropical diseases will develop due to extreme heat.

 *NASA captured the changing climate on Mars.  An ultraviolet image was released when the constellation passed close to the Sun.

 * 6 places in Tamilnadu crossed 100 degrees and the highest recorded temperature was 104.4 degrees in Madurai suburbs.

 *TNPL: 
Coimbatore beat Dindigul by 59 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ENNUM EZHUTHUM LESSON PLAN CLASS 1,2,3- MODULE 2





ENNUM EZHUTHUM LESSON PLAN CLASS 1,2,3- MODULE 2

CLASS- 4 & 5 - EE-LESSON PLAN EMPTY FORMAT &FA(A) & LEARNING OUTCOMES ATTACHED IN SINGLE FILE-107 PAGES-FOR ALL SUBJECTS


EE-ENNUM ELUTHUM 
CLASS- 4 & 5 - EE-LESSON PLAN EMPTY FORMAT &FA(A) & LEARNING OUTCOMES ATTACHED IN SINGLE FILE-107 PAGES FOR ALL SUBJECTS


எண்ணும் எழுத்தும் நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் ஆற்றங்கரை அரசுகள்முதல் பருவம்அலகு - 1துணைக் கருவிகள்

 எண்ணும் எழுத்தும் 


நான்கு வகுப்பு - சமூக அறிவியல் 

ஆற்றங்கரை அரசுகள்

முதல் பருவம்
அலகு - 1
துணைக் கருவிகள் தயாரித்து உள்ளேன்.

🔸 கிரீடம் 
🔹சொல் அட்டைகள் 
🔸 படங்கள் 

A4 வடிவில் எந்தவித watermark இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE- PLACE VALUE , STD 1-3, MATHS, UNIT -3- TT PRIMARY TLM.

ENNUM ELUTHUM NOTES OF LESSON | CLASS 4&5 - JUNE 4Th Week E/M

ENNUM EZHUTHUM NOTES OF LESSON RECORD

 

ENNUM EZHUTHUM NOTES OF LESSON RECORD



CLASS- 4 & 5 - EE-LESSON PLAN EMPTY FORMAT &FA(A) & LEARNING OUTCOMES - ALL SUBJECTS - 107 PAGES - PDF


கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் - SCERT Proceedings

 

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் சார்பு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 002/இஇ-சிதி/ பிசி/ 2023, நாள்: 22-06-2023


SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் : வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனரிடம் அளித்துள்ள மனு:பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம், 2019 - 20ல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. 


அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருகிறது.எனவே, மாணவர்கள் நலன் கருதி, தியரியில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண் வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவர்களுக்கு, 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. 

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து, 7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறிவியல் வினாத்தாளில் அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண்கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை, இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


RTE - இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்காக மாநில அரசு செய்யும் செலவினம், வகுப்பு வாரியாக அரசிதழில் வெளியீடு!

 




இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆண்டுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்காக மாநில அரசு செய்யும் செலவினம், வகுப்பு வாரியாக அரசிதழில் வெளியீடு!

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply

 

மசூதியில் தொழுகைக்கு செல்லக்கூடிய முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை புத்தகம் பத்தி 1 - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு | தெரிவிக்கப்படுகிறது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


6,7,8-ஆம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகமா?


எண்ணும் எழுத்தும் திட்டம் , ஒரு விளம்பரத்திட்டம் . 4 , 5 வகுப்புகளுக்கே இந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கக் கூடாது. 6 , 7 , 8 வகுப்புகளுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிடுகிறார்களாம் ! CRC க்கு பதில் CPD என்கிறார்கள்.


 மாணவர்களின் கல்வி நலனை காக்க வீதிக்கு வந்து போராடினால் தான் கைவிடுவார்கள் . என்றால் , மக்கள் - அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.


 சுயநிதி பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்லத் திட்டமிட்டு செயல்படுவோரை அடையாளம் காட்டுவோம். 


வா . அண்ணாமலை , தேசியச் செயலாளர்- ஐபெட்டோ , மூத்தத் தலைவர் - தமிழக ஆசிரியர் கூட்டணி .


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


தலைமையாசிரியர்கள் TNSED parent app-ல் தன்னார்வலர்கள் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

 தலைமையாசிரியர்கள் TNSED parent app-ல் தன்னார்வலர்கள் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பதை குறித்த வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்

 

23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்:


*பள்ளி செல்லா குழந்தைகளை PARENT TNSED APP மூலமாக தெரிந்து கொண்டு, அந்த மாணவர்களை சேர்க்க அவர்களின் பெற்றோர் மற்றும் அந்த மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்க்க வேண்டும்


 *10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து அந்த மாணவர்களின் படிப்பை தொடரவும், அல்லது ITI போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த படிப்பை அரசு தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்


*சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு விருது வருகின்ற சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை SMC உறுப்பினர்களிடம் தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டை ஊக்கவிக்கவேண்டும்


 *5,8,10 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள்  அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவேண்டும்


*10,11,12 போன்ற வகுப்புகளை சேர்ந்த துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்


*பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்களா? என்பதை உறுதி செய்தல்; சேராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல்


 *நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், மறுதேர்விற்கு விண்ணப்பித்த தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர்க்கல்விக்கு செல்லாத மாணவர்கள் விவரங்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தல்


 *1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருவதை உறுதி செய்தல்


 *மேலும் பள்ளியின் தேவை சேர்ந்து திட்டமிடுதல்


 *முந்தைய தீர்மானத்தின் தற்போதைய நிலை பற்றி விவரித்தல்


*பள்ளியின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை விவாதித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் எடுத்து நிறைவேற்றுதல்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching " 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பயிற்சியில் அரசு நடத்துதல் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு . - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE Proceedings - Download here...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள்!


ள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 2706.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக சுட்டிட கூட்ட அரங்கில் சாலை D மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) toneand ascondi அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் அலுவலர்கள் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

All CEO's Meeting Agenda June 2023 - Download here 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED PARENTS APP NEW UPDATE VERSION - 0.10

 

TNSED PARENTS APP NEW UPDATE VERSION - Version 0.10 / 22.06.2023


What's new

CSR MODULE FEATURE ADDITION AND PDF DOWNLOAD FEATURE ADDITION ADDED.BUT FIXING & PERFORMANCE IMPROVEMENTS


TNSED PARENTS APP NEW VERSION 0.10 UPDATE LINK

👇👇👇👇👇

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News