School Morning Prayer Activities - 10.10.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.10.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :274


தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


விளக்கம்:


தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.


பழமொழி :

Distance lends enchantment to the view


இக்கரைக்கு அக்கரை பச்சை


இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


ஒவ்வொரு குழந்தையிலும் அற்புதங்களும் மகிமையும் இருக்கிறது. அவர்களின் மகிமையை மலரச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில்தான் நமது மகிமை அடங்கியிருக்கிறது. - அமித் ரே


பொது அறிவு :


1. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?


விடை: 1947


2. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ


English words & meanings :


 acoustic - relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans". Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 


வாழைப்பூ: ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். 


அக்டோபர் 10 இன்று

உலக மனநல நாள்


உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


குறள் :


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.


குறள் விளக்கம் :


வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.


குறளுக்கான கதை.  


அமுதன் அந்த கிராமத்தில் ஆசிரியர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் ஆசிரியரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

ராமு என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய இவன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும்

ஆசிரியர்க்கு கிடைக்கிறதே?என்று ராமு ஆசிரியரின் மீது பொறாமை கொண்டான். ஆசிரியரை எங்கு கண்டாலும், ராமு வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் ஆசிரியர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ராமு தன் தோட்டத்திலிருந்து பறித்த

புசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். ராமு உடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.ராமுவையும், அவனது தோழர்களையும் கண்ட ஆசிரியர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, அமுதன்

பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர். ஆமாம் ராமு. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி

ஆசிரியர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில்சொல்லுங்கள்

விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு ராமு! எனக்கு நேரமாகிறது என்றார் ஆசிரியர். என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்துப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ளவேண்டும் என்று திமிராகப் பேசினான் ராமு.

ஆசிரியர் ஒரு கணம் யோசித்தார். ராமு இந்த புசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் ஆசிரியர்.

இதை கேட்ட ராமுவும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து

போனார்கள். அட ஆசிரியர் நம்மை மடக்கிவிட்டாரே?

பூசணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை

கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியமா?பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த ராமு, தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான்.

அதன்பின் அவன் ஆசிரியரிடம் வம்பு செய்வதே இல்லை!


இன்றைய செய்திகள் - 10.10.2023


*இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இஸ்ரேல் ராணுவம்.


* 2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


*சாதிக்க தடை இல்லை: உச்சநீதிமன்றத்தை அதிர வைத்த பெண் வழக்கறிஞர் சாரா சன்னி.


* ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் பயன்பாட்டுக்கு வருகிறது.


*5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு.


* சென்னை போட்டியில் அபாரம் தங்கப்பதக்கம் வென்ற விராத் கோலி.


*வில்யங், ரவீந்திரா, டாம் லாதம் அபாரம் -நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு.


Today's Headlines


*Israel-Hamas war echo: Israel army has brought the Gaza border under its control.


 * The 2023 Nobel Prize in Economics has been announced for Claudia Goldin.


 *No barrier to achievement: Sara Sunny, the woman lawyer who rocked the Supreme Court.


 * Private gold mining is coming into use in Andhra Pradesh.


 *5 State Assembly Election Dates declared.


 * Virat Kohli won the gold medal in the Chennai tournament.


 *William, Ravindra, Tom Latham AWESOME - New Zealand piled up 322 runs against the Netherlands.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

YOUTH & ECO CLUB செயல்பாடுகளை EMIS-ல் பதிவேற்றம் செய்ய ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி அறிவிப்பு மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

 


IMG_20231007_090550

YOUTH & ECO CLUB  செயல்பாடுகளை EMIS-ல் பதிவேற்றம் செய்ய ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி அறிவிப்பு மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

SPD Proceedings - Download 


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த வழக்கு

 


1500x900_1551589-5454565

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-


நான் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி சுமார் 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் உள்ளது. மேலும் மதிய உணவு திட்டத்தில் பயன் பெறுவதற்காகவே ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.


ஆனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்ட கடலோர பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை.


மீன்பிடிக்க செல்கின்றனர்


கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏழ்மையின் காரணமாக மீனவ சமுதாய குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவ மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகும்.


எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழக அரசு காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


அரசாணை


இந்த மனு நீதிபதிகள் சுந்தர், கலைமதி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என அரசாணை உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் தனியார் பள்ளியாக இருந்தாலும் அரசு நிதி உதவியில்தான் இயங்குகிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


விளக்கம் பெற உத்தரவு


அதனைத்தொடர்ந்து, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - நன்கொடை வாயிலாக பங்கேற்க முன் வந்த முன்னாள் மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த SPD செயல்முறைகள்.

 

IMG_20231006_213836

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - நன்கொடை வாயிலாக பங்கேற்க முன் வந்த முன்னாள் மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த SPD செயல்முறைகள்.


SPD Proceedings - Download 


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நாளை ( 07.10.2023) - பள்ளி முழு வேலை நாள் - CEO Proceedings

 

திருவள்ளூர் மாவட்டத்தில் 07.10.2023 நாளை அன்று அரசு / அரசு நிதிஉதவி / நகராட்சி / ஆதிதிராவிடநல நடுநிலைப் பள்ளிகள் , உயர் / மேல்நிலைப்பள்ளிகள் முழு வேலை நாளாக ( செவ்வாய்கிழமை பாடவேளை ) செயல்படும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .





🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CPS Account Slip 2022 - 2023 Published

 IMG_20231006_165106

2022-2023 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.


இதில்  I hereby confirm......  is correct என்றும் I do not agree... என்ற option கொடுக்கப்பட்டு உள்ளது. 


http://www.cps.tn.gov.in/public/index.php



🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE Training -06.10.2023- Quiz Direct Link

10, 12 பொது தேர்வு எப்போது?

 0207

பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.


பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை, கல்வியாண்டு துவங்கும் முன்பே, வெளியிடப்பட்டு வந்தது. இந்தக் கல்வியாண்டு(2023---24), நான்கு மாதம் நிறைவு பெற்றும், இன்னும் அட்டவணை வெளியிடப்படவில்லை.


அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கிறது. பொதுத்தேர்வுக்கு பின் தேர்தலா, தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வா என்ற கேள்வி மாணவ, மாணவியர், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.


தலைமை ஆசிரியர்கள், 'மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த கல்வித்துறை உத்தேசித்துள்ளது.


இருப்பினும் அதிகாரபூர்வமாக தேதி விபரம் அறிவிக்கவில்லை,' என மாணவர்களிடம் கூறி வருகின்றனர். பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர், ஆசிரியர், பெற்றோரிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

October 2023 - Then chittu Magazine

 

IMG_20231004_152807

Then Chittu Magazine Collections

October 2023 - Then chittu Magazine ( Date : 01.10.2023 to 15.10.2023 ) - Download here


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings

 


IMG_20231005_185921

6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20231005_191419

6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings - Download here


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிக் கல்வித்துறை & தொடக்கக் கல்வித்துறை இணைந்து ( 4.10.2023 ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

 IMG_20231005_111648

பள்ளிக் கல்வித் துறை - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் 


 DSE & DEE Proc for School cleanliness Proceedings - Download here


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings

 

IMG_20231005_185921


6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20231005_191419


6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings - Download here


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

3, 6, 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS ) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்

 IMG_20231005_214851


27047 பள்ளிகளுக்கு -3, 6மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்

It has been planned to conduct the State Educational Achievement Survey ( SEAS ) , 2023 for the sampled students of sampled schools of grades 3 , 6 and 9 in all districts on 3rd November , 2023. In this regard , the following personnel are to be involved responsibilities are also furnished .

State Educational Achievement Survey (SEAS), 2023- Identification of Personnel and Their Roles and Responsibilities- Sent Reg ...


இணைப்பு


SPD Proceedings - Click here

School Details - Click here

Students Details - Click here





🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அனைத்து பள்ளிகளிலும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளிகளில் இறைவணக்க நேரத்தின்போது வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். வரும் 11-ம் தேதி முதல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.

பெரும்பாலும் வெண்புள்ளிகள் 13 வயதில இருந்து 40 வயதுக்குள்ளதான் தொடங்கும். பள்ளியில படிக்கும் மாணவனுக்கு வெண்புள்ளி வரும்போது டீன் ஏஜ்ல இருப்பான். அந்த வயசுல வெண்புள்ளிகள் பற்றின உண்மைகள் தெரியாததுனால, தடுமாற்றத்தால மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கு. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அவங்களுக்கோ, சக மாணவர்களுக்கோ, உறவினர்களுக்கோ வெண்புள்ளி வந்தால் இயல்பாகவே இதைப் புரிஞ்சுக்க முடியும். மன உளைச்சலில் இருந்து வெளியில் வர முடியும்.


ஒரு மாணவன் 10 பேர்கிட்ட இந்தத் தகவலைக் கொண்டுபோய் சேர்க்கணும் என்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியும். வெண்புள்ளி இருக்கிறவங்களுக்கு என்னதான் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினாலும், மற்றவங்க விமர்சனங்கள் அவங்களைப் பாதிக்குது. இதனால் வெண்புள்ளி இருக்கிறவங்க இயல்பாகவே வெளியே போகத் தயங்கும் நிலை இருக்கு. இந்தச் சூழ்நிலையை மாற்றி வெண்புள்ளி இருக்கிறவங்களும் இயல்பாக வெளியில் செல்லும் நிலையை ஏற்படுத்தணும்.


உலகம் முழுக்க ரெண்டு சதவிகிதம்பேர் வெண்புள்ளி பாதிப்பில் இருக்கிறதாகவும். இந்தியாவில் இதன் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் இருப்பதாகவும் சொல்றாங்க. இந்த மக்களுடைய மன நலனைப் பாதுகாக்க இந்தப் பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.


🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Department of Treasuries and Accounts IFHRMS Modules and Sub Modules- recent updates- Advisory 1/2023 -communicated - Reg

 IMG_20231004_201001

Department of Treasuries and Accounts IFHRMS Modules and Sub Modules- recent updates- Advisory 1/2023 -communicated - Reg 

 This is to inform that the following advisory is being issued to ensure error free efficient and user friendly transactions in Integrated Finance and Human Resources Management System ( IFHRMS ) .

 advisory Letter - Download here

🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 4,5th Std - Term 2 - Module 1 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Term 2 Lesson Plan

October - 2023


Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 1 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 1 Lesson Plan - E/M - Download here


Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 2 - Module 1 Lesson Plan - T/M & E/M

Term 2 Lesson Plan

October - 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 1 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 1 Lesson Plan - E/M - Download here


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொடர் மழை காரணமாக இன்று ( 4.10.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.

 

rain%20holiday%20kalviseithi

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News