JEE Mains 2024: மாதிரித் தேர்வுகள் எவ்வளவு முக்கியம்? எப்போது தொடங்க வேண்டும்?

கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மைத் தேர்வு மிகவும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வாகும்இது இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சிலவற்றில் படிப்பதற்கான கதவைத் திறக்கிறது. இந்தத் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவதற்கு பல ஆண்டுகளாக நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்யும் ஆர்வமுள்ள பொறியாளர்களுக்கான தயாரிப்பு செயல்முறையின் இன்றியமையாத பகுதியாக மாதிரித் தேர்வுகள் உள்ளன. இந்த கட்டுரையில் மாதிரித் தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும்உங்கள் JEE முதன்மைத் தேர்வு தயாரிப்புத் திட்டத்தில் அவற்றைச் சேர்ப்பது எப்போது சிறந்தது என்பதை பற்றியும் பார்ப்போம்.

மாதிரித் தேர்வுகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது:

மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்விற்கான பயிற்சியைப் போன்றதுமாணவர்களுக்கு அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அளவிடவும்அவர்களின் நேர மேலாண்மை திறன்களை நன்றாக மாற்றவும் மற்றும் தேர்வு வடிவம் மற்றும் சூழ்நிலையுடன் வசதியாக இருக்கவும் வாய்ப்பளிக்கிறது. அவை தன்னம்பிக்கையை அதிகரிக்கவும்தேர்வு அழுத்தத்தைக் குறைக்கவும்சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் உதவும். எனவே, உங்கள் படிப்பு அட்டவணையில் மாதிரித் தேர்வுகளைச் சேர்ப்பது முழுமையான தயாரிப்புக்கு முக்கியமானது என்பது தெளிவாகிறது.

தயாரிப்பின் ஆரம்ப கட்டம்:

ஜே.. மெயின் தேர்வு வெற்றிக்கான பயணம் மாரத்தான் ஓட்டம் போன்றதுஸ்பிரிண்ட் (வேகமான) ஓட்டம் அல்ல. உங்கள் தயாரிப்பு கட்டத்தின் ஆரம்பத்திலேயே மாதிரித் தேர்வுகளைத் தொடங்குவதுஉங்கள் தற்போதைய புரிதல் நிலை குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்குவதோடுஅதிக கவனம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியவும் உதவும். ஆரம்ப கட்டத்தில் மாதிரித் தேர்வுகளைத் தொடங்குவதுஒரு அடிப்படையைத் தயாரிக்கவும்தேர்வு முறையைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது, மேலும் இலக்கு படிப்புத் திட்டத்தை உருவாக்குவதையும் எளிதாக்குகிறது.

உண்மையான தேர்வுக்கு 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பு மாதிரி தேர்வுகளை தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக2024 ஆம் ஆண்டில்ஜே.. மெயின் தேர்வின் முதல் கட்டம் ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ளதுஎனவே அதற்கான ஆரம்ப கட்டம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இருந்தது. எனவே முதல் அமர்வில் தேர்வு எழுத மாணவர்கள்தங்கள் ஆரம்ப கட்ட தயாரிப்பை முடித்துள்ளனர். இது மாதிரித் தேர்வுகளில் உங்கள் செயல்திறனின் அடிப்படையில் சுய ஆய்வு மற்றும் இலக்கு மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் போதுமான நேரத்தை அனுமதிக்கிறது.

தயாரிப்பின் நடுக் கட்டம்:

​​உங்கள் JEE முதன்மைத் தேர்வின் தயாரிப்பின் நடுக் கட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறதுஏனெனில் நீங்கள் உங்கள் திறன்களைக் கூர்மைப்படுத்தி உங்கள் உத்திகளைச் சரிசெய்யலாம். இந்த கட்டத்தில்நீங்கள் பாடத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் உங்கள் வழக்கத்தில் மாதிரித் தேர்வுகளை இணைத்துக்கொள்வதுஉங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடவும்பலவீனமான பகுதிகளை அடையாளம் காணவும்உங்கள் நேர மேலாண்மைத் திறனைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

உண்மையான தேர்வுக்கு சுமார் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்முழு நீள மாதிரி தேர்வுகளை தவறாமல் எழுதிப் பார்க்கவும். இது நீண்ட தேர்வுக்கான திறனை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல்உண்மையான தேர்வு நிலைமைகளின் யதார்த்தமான முன்னோட்டத்தையும் வழங்குகிறது. இந்தப் மாதிரித் தேர்வுகளில் உங்கள் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதுதலைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்உங்கள் படிப்பு நேரத்தை மிகவும் திறமையாக ஒதுக்கவும் உதவும்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை FA ( a ) மதிப்பீடு - IMPORTANT ANNOUNCEMENT

 IMG_20231125_083729

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை FA ( a ) மதிப்பீடு -  IMPORTANT ANNOUNCEMENT👇

Pdf - click here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி வேலை நேரம் - அட்டவணை School Working Hours - Schedule

 பள்ளி வேலை நேரம் - அட்டவணை School Working Hours - Schedule

அட்டவணையை Download செய்ய கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் 2023 - தேர்வானோர் விவரம் வெளியீடு - Selected Teachers pdf list

 கனவு ஆசிரியர் 2023 - தேர்வானோர் விவரம் வெளியீடு.

கனவு ஆசிரியர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

3ஆம் கட்ட தேர்வுகளில் 75 % -க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 தேர்வாகியுள்ளனர்.

கனவு ஆசிரியர் 2023 பட்டியலில் 41 முதுகலை , 162 இடைநிலை , 117 பட்டதாரி ஆசிரியர்கள் அடங்குவர்

380 பேரில் 90 % மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவிப்பு.

Selected Teachers List - Download here

கனவு ஆசிரியர் 2023

மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.

நிலை -1

இணையவழி MCQ  (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிலை - 2

மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.

நிலை 3

ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.

இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் தேர்வில் ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர்? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

TRB PRESS NEWS - CMRF 2023-24 EXAM HALL TICKET DOWNLOAD

 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி உத த்தொகைத் திட்டத்திற்கான ( CMRF ) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 4004 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் 24.11.2023 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

CMRF 2023-24 EXAM HALL TICKET DOWNLOAD | TRB PRESS NEWS - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வேலைவாய்ப்பு அறிவிப்பு

 நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Commissioner (Finance) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நவோதயா வித்யாலயா சமிதி காலிப்பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) காலியாக உள்ள Deputy Commissioner

(Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Commissioner (Finance) அனுபவம்:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்கள்,

பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Commissioner (Finance) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 15.12.2023 அன்றைய நாளின் படி, 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் NVS பணியாளராக இருப்பின் 02 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்படும்.

Deputy Commissioner (Finance) ஊதியம்:

இந்த NVS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NVS தேர்வு முறை:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Personal Interaction (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NVS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் applications.nvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்

Job Notification Click Here

Application link click here 

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News