School Morning Prayer Activities - 05.12.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:313


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.


விளக்கம்:


 பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.


பழமொழி :

He who hunts two hares loses both


பேராசை பேரு நட்டம்


இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார் – இத்தாலி


பொது அறிவு :


1. இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?


விடை: மேரி கியூரி


2. 20 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?


விடை: 19-ம் லூயி


English words & meanings :


 scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: ஆன்டி-பாக்டீரியா, பாக்டீரியா நுண்கிருமியால் உண்டாகும் தொற்று பாதிப்பை நீக்கி உதவுகிறதுபாரிஜாத மர இலைகளை பறித்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சியாடிகா வலி குறையும்..


டிசம்பர் 05 இன்று


கல்கி அவர்களின் நினைவுநாள்


கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.


நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்


நீதிக்கதை

தெனாலிராமனும் கத்தரிக்காயும்


ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.


ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.


வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார்.


தெனாலிராமன் "நீ பயப்படாதே!


எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை"என்றார்.அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அவன் மேல் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.


அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போனவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார்.


மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.


மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.


மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார் "தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா?" என்றார்.


தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.


மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தையும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை” என்று சாதித்தார்.


மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன்." என்றார்.


தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." என்று கூறினான்.


உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார், "இப்போது மாட்டிக்


கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.


மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டுவிட்டு 


 பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.


தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார்.


மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.


மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.


பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டுநடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியதுடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.


இன்றைய செய்திகள் - 05.12.2023


*கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் இன்றும் பொது விடுமுறை.


* விமான ஓடுபாதையில் இரண்டு அடிக்கு தண்ணீர்; சென்னையில் விமான சேவை நிறுத்தம்.


*மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடல்; கோவை - சென்னை இடையே ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு.


* தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி கொடுப்பார்- டி வில்லியர்ஸ் எச்சரிக்கை.


* 2029 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஸ் இந்தியாவில் நடத்த திட்டம்-  அஞ்சு ஜார்ஜ் தகவல்.


Today's Headlines


*Due to Heavy rain there is a Public holiday in four districts today.


 * Two feet of water on the runway–  Flight service stopped in Chennai.


 *Due to the Michang storm  14 tunnels are closed in Chennai;  Trains canceled between Coimbatore and Chennai - Southern Railway Notification.


 * Bumrah will put pressure on South African players- De Villiers warns.


 * Plan to host 2029 World Athletics Champions in India - Anju George Info.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Hindu Festivals List - 2024

 

.com/

இந்துக்கள் பண்டிகை - 2024


Hindu Festivals List - 2024 pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 புயல் மழை - நாளையும் (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : 

IMG-20231204-WA0020

⭕ ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

புயல் மழை - தறேபோது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

 கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : 


( 04 DEC 2023 , காலை 7.20 மணி நிலவரப்படி) 


⭕ செய்யாறு , வந்தவாசி ஆகிய வருவாய் கோட்ட ( திருவண்ணாமலை)    வட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ( திருவண்ணாமலை மாவட்டம்) 


சென்னை   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


காஞ்சிபுரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவள்ளூர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை- 


⭕ இராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 04.12.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2023




திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:312


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


விளக்கம்:


 நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.


பழமொழி :

Haste makes waste


பதறிய காரியம் சிதறிப் போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல்நலமும் செல்வமும் அறிவும் பெருகும் – இங்கிலாந்து


பொது அறிவு :


1. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை


விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்


2. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?


விடை: 11500


English words & meanings :


 implicit -being without doubt or reserve மறைமுகமாக . implode - burst inward வெடிப்பு


ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: இந்த பூக்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி, பூக்கள் பல்வேறு குணமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.


டிசம்பர் 04 இன்று


கடற்படை தினம் 


1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 


ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்


இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.


நீதிக்கதை


 ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறைய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு


அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சுஅப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய மீன் அதோட காலுக்கு அடியில வந்துச்சு


ஆனா அத பிடிக்காம அடுத்த பெரிய மீனுக்காக காத்துகிட்டு இருந்துச்சு


தொடர்ந்து காத்துகிட்டு இருந்த கொக்கு சாயந்திரம் வரைக்கு பெரிய மீனுக்காக காத்துக்கிட்டே இருந்துச்சு


சூரியன் மறைஞ்சதும் எல்லா மீனும் ஆத்துக்கு அடி பகுதிக்கு போய்டுச்சு,கடைசியா பசியில இருந்த கொக்கு அங்க இருந்த ஒரு நத்தய சாப்பிட்டு திருப்தி பட்டுக்கிடுச்சு


நீதி :- நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கிடனும் இல்லைனா சுமாரான முடிவுகளை நல்ல வாய்ப்புன்னு சொல்லி திருப்தி பட்டுக்கிட வேண்டியதுதான்.


இன்றைய செய்திகள் - 04.12.2023


*மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி; தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி;


* புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை.

*மிச்சாங் புயலால் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்; வானிலை ஆய்வு மையம்.


* காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு; தமிழக அரசு.


* மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் ரபேல் நடால்.


Today's Headlines


*BJP won in Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh;  Congress won in Telangana;


 * Storm warning : General public prohibited from visiting Chennai beaches.


 *There will be strong winds on the ground at the speed of 50 to 60 kilometers per hour due to typhoon Michong;  Meteorological Centre.


 * Public holiday announcement for Kanchipuram, Chennai, Tiruvallur, Chengalpattu districts today;  Tamil Nadu Govt.


 * Rafael Nadal returns to the tennis field.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்


மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம்

 

IMG-20231202-WA0027_wm

இளம் வயதில் மாரடைப்பு - குஜராத் அமைச்சர் அதிர்ச்சி தகவல் ! கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் , இதில் 80 % பேர் 11 -25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டோர் தகவல் ! மாரடைப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க , சுமார் 2 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அண்மைக் காலமாக இளம் வயதினர் திடீர் திடீர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போல், இளைஞர்கள் பள்ளி, கல்லூரி, திருமணம் போன்ற நிகழ்வுகளில் நடனமாடும்போது உயிரிழந்தனர்.

மேலும் சில இளைஞர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழந்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இதனால் இது போன்ற சம்பவங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்வதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.


பின்னரே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி ICMR என்று சொல்லப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில், உயிரிழப்பு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என்று தெரியவந்தது.

இருப்பினும் அண்மைக்காலமாக இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொண்டபோது, உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் தான் என்றும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் குபேர் டிண்டோர் (Kuber Dindor) பேசியதாவது, "கடந்த 6 மாதங்களில் குஜராத்தில் மட்டும் மாரடைப்பு காரணமாக 1,052 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலாக, சுமார் 80% பேர் 11 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தினமும் 108 ஆம்புலன்சுக்கு மாரடைப்பு காரணமாக அழைப்பு வருகிறது. கிரிக்கெட் விளையாடும்போது, கார்பா நடனமாடும்போது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதை நாம் அறிகிறோம். இதனால் தற்போது மாநில அரசு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.

அதன்படி இதுபோன்ற திடீர் மாரடைப்பு மாணவர்களுக்கு ஏற்படும்போது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்க சிபிஆர் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் 2 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது வரும் டிசம்பர் 3 (நாளை) முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்" என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தசரா பண்டிகையின்போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கார்பா நிகழ்ச்சியில் நடனமாடியபோது, ஒரே நாளில் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதோடு, 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC

 IMG_20231202_230541

பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC  தகவல்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சென்னை துறைமுக பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் வேலை

 


IMG_20231203_093832

சென்னை துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Post Graduate Teacher (PGT) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.


சென்னை துறைமுக பள்ளி காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியான அறிவிப்பின் படி, Post Graduate Teacher (PGT) பணிக்கு என 03 பணியிடங்கள் சென்னை துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ளது.


Post Graduate Teacher கல்வி தகுதி:

Post Graduate Teacher (PGT) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.Com / M.Sc (Physics) / MA (Tamil) + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


Post Graduate Teacher வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Fresher ஆக இருப்பின் 40 வயதுக்குள் உள்ளவராகவும், ஓய்வு பெற்ற ஆசிரியராக இருப்பின் 64 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.


Post Graduate Teacher சம்பளம்:

Post Graduate Teacher (PGT) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.


Post Graduate Teacher தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Graduate Teacher விண்ணப்பிக்கும் முறை:

Post Graduate Teacher (PGT) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் secy@chennaiport.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


Download Notification PDF


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IT Calculation Statement Format - FY 2023 - 2024

 

.com/

IT Calculation Statement Format - FY 2023 - 2024

புதிய வருமான வரி படிவம்👇

IT Calculation Statement Format - FY 2023 - 2024 | Download here

* Aadhaar Number Link Bank Account - Model Form for Scholarship Students - Download here

* Festival Advance Form - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

டிசம்பர் 2023 - துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு - Download Link

டிசம்பர் 2023 - துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.


Click here to DOWNLOAD HALL TICKET FOR DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2023


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Notes of Lessons for 6,7,8,9,10 Std ( 04.12.2023 to 08.12.2023) December 1st week

 .com/

 English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X standards ( 04.12.2023 to 08.12.2023) the December the 1st week for Government of Tamil Nadu State Board School Teachers.


** 6th Std Notes of Lesson - Revision 


* 7th Std Notes of Lesson - Revision


* 8th Std Notes of Lesson - Revision


* 9th Std Notes of Lesson - Revision


* 10th Std Notes of Lesson -  “The house on Elm Street " - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

 


புயல் எச்சரிக்கை மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு.

 Public Holiday on 04.12.2023 ( Monday ) for the Districts of Chennai , Tiruvallur , Kancheepuram and Chengalpattu declared under Negotiable Instruments Act , 1881 - Orders - Issued .👇

GO NO : 751 , DATE : 03.12.2023 - Download here




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NMMS Exam 2024 - Application Form Download

 NMMS Exam (2023-2024) Application

Application Form pdf -  Download here







🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர் தேர்வு வாரியம் ( 02.12.2023 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம்.

கனமழை - 04.12.2023 (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்




தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பல  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


காஞ்சிபுரம்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


செங்கல்பட்டு  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


திருவள்ளூர்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CRC - Training Quiz & Feedback - Direct Link

  💢🟣 CRC - Training Quiz & Feedback - Direct Link

👇👇👇👇👇👇👇👇

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

https://exams.tnschools.gov.in/exam



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

December Month School Children's Movie - " BUNT "

 images%20-%202023-12-02T062824.023

டிசம்பர் மாத சிறார் திரைப்படம் "BUNT" - Trailer (December - Children Film)...

Bunt Movie Trailer - View here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News