‘சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்:

 1170644


'சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 'சைமா' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழு பாடல், விநாடி-வினா, கேரம், செஸ், பேச்சு, கட்டுரை, கலை, ஓவியம், மாறுவேடம் என பலதரப்பட்ட போட்டிகள் இடம்பெறும்.

அந்த வகையில் 2024-ம் ஆண்டு 'கோல்டு வின்னர்-சைமா குழந்தைகள் விழா' போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. ஓவியம் மற்றும்மாறுவேட போட்டிக்கு குறிப்பிட்டநாளில் நேரடியாக வந்து பங்கேற்கலாம். மற்ற போட்டிகளுக்கு பள்ளிகள் வழியாக மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். எல்கேஜிமுதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துவகுப்பு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

மாணவர்களுக்கு பரிசு: சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள என்கேடி தேசிய பயிற்சி கல்லூரிவளாகத்தில் போட்டிகள் நடைபெறும். வெற்றிபெறும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக போட்டிகளில் வென்று அதிகபுள்ளிகள் எடுக்கும் பள்ளிக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் உண்டு.

ஜன.4-க்குள் முன்பதிவு: போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள், ஜன.4-க்குள் மாணவர்களின் பெயர் விவரங்களை முன்பதிவுசெய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 93611 19723என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 'சைமா' அமைப்பின் செயலாளர் சஞ்சீவி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS ல் தொழில்நுட்ப மாற்றங்கள் - கருவூலக் கணக்கு ஆணையரின் செய்தி குறிப்பு..

 IMG_20231220_065839

IFHRMS ல் தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளுதல் குறித்து கருவூலக் கணக்கு ஆணையரின் செய்தி குறிப்பு..

Press Release. - Download here


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS - 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது

 


FB_IMG_1703046390902


IFHRMS முன்னோக்கி சென்று கொண்டே உள்ளது .

தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.


இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நிறைய பேர் தன்னுடைய individual employee id log in செய்வது இல்லை அதற்கு மாற்றாக தற்பொழுது இந்த ஆப் வந்துள்ளது என்று தோன்றுகிறது.


App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்து OTP அவர்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்றால்.


1. Leave entry

1.1 surrender leave

1.2 el and uel

2. ⁠pay slip download

3. ⁠pf initiation

4. ⁠advance initiation

5. ⁠Transfer joining entry

6. ⁠reports எல் ESR மற்றும் paydrawn 

7. ⁠pre retirement..pension proposal

8. ⁠others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 Nhis updation

8.4 Nhis initiation

9. Echallan

10. ⁠contact us

11. ⁠feed back

போன்றவை உள்ளது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.


மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றங்களை வரவேற்போம்

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UG TRB - Geography Full Notes 2023 - 24

What's New

UG TRB - Geography Full Notes 2023 - 24 | Teacher Care Academy - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SOP for Hi - Tech lab Online

 Step 1 : Make sure to switch on the MCB ( Miniature Circuit Breaker ) for UPS input power supply. 

Step 2 : Make sure to switch on the Hi - Tech lab UPS .

 Step 3 : Make sure to switch on the Server and ensure the Ethernet profile connected to the school server



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here
for latest Kalvi News

டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

 காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதே போல காரைக்காலில் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு மாதம் வரைக்கும் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UG TRB - Physics Unit 3 ( Properties of Matter ) MCQ

 

What's New

UG TRB - Physics Unit 3 ( Properties of Matter ) MCQ - Global Coaching Centre - Download here

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

“மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

 

IMG_20231218_173145

13 முக்கிய அரசுத் துறைகளின்  சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Press Release 2546 - Download here


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

G.O : 236 - பள்ளிகள் தரம் உயர்வு & ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு - ஆணை வெளியீடு.

 


IMG_20231218_172555

2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு!

 G.O.Ms.No.236 , DATE : 13.12.2023 - HS to HSS - Download here

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20231218_180719


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

 .com/

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது..


கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.


செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.


ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு  பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.


இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.


பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அளிக்க முடியாத ஆவணமாகிவிடும்.என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

IMG-20231218-WA0089



 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 கனமழை காரணமாக நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

💧கன்னியாகுமரி நாளை (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧நெல்லையில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

💧தூத்துக்குடியில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை





 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் காலை 9:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

 


இன்று (18-12-2023)  காலை 9:00 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

IMG-20231218-WA0001
 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 18.12.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:322


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.


விளக்கம்:


 இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.


பழமொழி :

Love thy neighbour as thyself. 


உன்னைப் போலவே பிறரை நேசி.


இரண்டொழுக்க பண்புகள் :


.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்


பொன்மொழி :


ஒரு முட்டாள்

தன் நண்பர்களை

பயன்படுத்துவதை விட

ஒரு அறிவாளி தன்

எதிரிகளை நன்றாக

பயன்படுத்திக் கொள்வான்


பொது அறிவு :


1. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?


விடை: நீலாம்பரி


2.பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?


விடை: முகமது ஜின்னா


English words & meanings :


 In the neck of time - just in time, கடைசி நேரத்தில், 


in the dark - not aware of something, சுற்றி நடக்கும் காரியங்கள் குறித்து அறியாமல் இருப்பது


ஆரோக்ய வாழ்வு : 


இலுப்பை பூ :இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும்.


டிசம்பர் 18 இன்று


ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்


ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்


நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்


நீதிக்கதை


 காகமும் அன்னபறவையும்


ஒரு கடற்கரையில் கோவிந்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு அந்த காகம் மிகவும் பருத்தது.


அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, "நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது" என்று கர்வமாக சொன்னது.


அப்போது ஒரு அன்னப்பறவை சொன்னது, "நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை" என்றது. உடனே அந்த காகம், "இல்லை, உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் போட்டி போடுங்கள்" என்றது.


அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, "நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்" என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.


சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.அதை பார்த்த அன்ன பறவை, "நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே" என்றது. அதற்கு காகம் சொன்னது, "என்னால் முடியவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்" என்றது.


உடனே அன்னப்பறவை, "சரி நீ கவலை படாதே. என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்" என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம் "நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்" என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.


நீதி: கர்வம் என்றைக்கும் உதவி செய்யாது.


இன்றைய செய்திகள் - 18.12.2023


*நான்கு மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை எதிரொலி சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.


* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.



* தற்போது புதுவகை கொரோனா எந்த விதத்தில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்-  அமைச்சர் தகவல்.


* சாய் சுதர்சன், ஸ்ரேயஸ் அரை சதம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* Health department in action order due to heavy rain in four districts.


 * Postponement of Manonmaniam Sundaranar University exams scheduled to be held today.


 *  How the newly developed corona virus is getting mutated –a research is going on this virus and mutation information by Health Minister .


 * India beat South Africa with Sai Sudarsan, Shreyas half-centuries and 8 wickets.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு

அதிகனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 )  விடுமுறை அறிவிப்பு..

⭕ சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும்...).

⭕ கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).

⭕ தேனி ( பள்ளிகள் மட்டும்...).

⭕ விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு..).

⭕ இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).

⭕ நெல்லை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

⭕ தூத்துக்குடி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

⭕ கன்னியாகுமாரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )

⭕ தென்காசி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )




 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UG TRB - History Unit x ( History of Modern World ) - Study Materials

 

IMG_20231217_114722

UG TRB - History Unit x ( History of Modern World ) - Study Materials - Srimaan Coaching Centre - Download here


Prepared by :

Srimaan Coaching Centre

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News