ஆசிரியர்களுக்கு 75% பயிற்சிகளை இணைய வழியிலாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு.- GO NO : 46 , DATE : 06.02.2024

 


IMG_20240208_182250

பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் . பயிற்சிகளை அரசு அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் குறைந்த பட்சம் 75 % பயிற்சிகளை இணைய வழியிலான பயிற்சியாக நடத்த திட்டமிடல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரை அறிவுறுத்துதல் வெளியிடப்படுகிறது . ஆணை


GO NO : 46 , DATE : 06.02.2024 - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

FA(A) & FA(B) மதிப்பெண் பட்டியல் EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை

 IMG_20240208_123454

EE TERM 2 FORMATIVE ASSESSMENT MARK REGISTER


 FA(A) & FA(B) மதிப்பெண் பட்டியல் EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை - வீடியோ👇👇👇

https://youtu.be/apmRWmzu3EI

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 08.02.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:352


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.


விளக்கம்:


 மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.


பழமொழி :

Money makes many things


பணம் பாதளம் வரைக்கும் பாயும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது. --அன்னை தெரசா


பொது அறிவு :


1. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?


விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)


2. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

லாலா லஜபதி ராய்


English words & meanings :


 whammed(n)- Hammer சம்மட்டி,சுத்தியல்; wandering (v) - walking or moving in a aimless way நோக்கம் இல்லாமல் சுற்றித் திரிதல்.


ஆரோக்ய வாழ்வு : 


கோவை கீரை : கோவைக்கீரை குளிர்ச்சியானது. இந்த கோவை இலையை நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அந்த பொடியைப் போட்டு நன்கு காய்ச்சி கஷாயமாக எடுத்துக் கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும்.


பிப்ரவரி 08 இன்று


சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்


சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.


கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.


நீதிக்கதை


 நாயும் அதன் நிழலும்


முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.


செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம். "எலும்புத்துண்டை தருமாறு" கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ "இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்", என்று கூறி விட்டுச்சென்றது.செல்லும் வழியில் ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.


அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.


அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.


நீதி: பேராசை பெரு நஷ்டம்.


இன்றைய செய்திகள் - 08.02.2024


*பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆனது உத்தரகண்ட்; கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகிவிடும்.


*உதகை மண் சரிந்து விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்தார் மு க ஸ்டாலின்.

*இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


*இந்தியாவில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று.


*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; நியூசிலாந்து அபார வெற்றி;


Today's Headlines


* Uttarakhand became first state to enact Common Civil Code;  The Bill will become a law after the assent of the Governor.


 * Landslide accident in Ooty: C.M. , M.K. Stalin announced a relief fund for the families of the victims.


 * The government of Iran  has announced that Indians will no longer need a visa to travel to Iran.


 * 157 more people infected with corona virus in India.


 *First Test cricket match against South Africa;  New Zealand won big.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தலுக்கு முன்பே தேர்வுகள் - தமிழக அரசு ஏற்பாடு

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 


கட்டிடங்கள் திறப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அந்த பிரிவு மாணவ-மாணவிகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தென்காசி, ராமநாதபுரம், பெரம்பலூர், மாவட்டங்களில் மொத்தம் ரூ.16.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதி கட்டிடங்களை அமைச்சர் ராஜகண்ணப்பன், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது திறந்து வைத்தார். 

 தேர்தலுக்கு முன்பே தேர்வு பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி வருமாறு:- பல்கலைக்கழகங்களில் தமிழ் தெரிந்த துணை வேந்தர்கள் இருந்தால், அவரிடம் மக்கள் பேசக்கூடிய அளவில் இருக்கும். தற்போது 3 துணை வேந்தர் காலியிடங்கள் உள்ளன. அதற்கான குழு பரிந்துரை செய்த பிறகு நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான ஒப்புதலை கவர்னர் அளிப்பார் என்று நம்புகிறேன். துணை வேந்தர் தமிழ் தெரிந்தவராக இருந்தால் பல்கலைக்கழகத்திற்கு நல்லது. பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள், ஆசிரியர்களிடம் பேசி தீர்வுகாண எளிதாக இருக்கும். சேலம் துணை வேந்தர் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அதைப்பற்றி இங்கு பேச முடியாது. சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், திறந்த நிலை பி.எட்., எம்.எட். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணை வேந்தர்கள் நியமனம் பற்றி முதல்-அமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும். கவர்னரின் ஒப்புதலுக்காக சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 

அதுபற்றி கவர்னரிடமே முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். இதில், அரசியல் அமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதற்கு கவர்னர் சரி என்று கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது, தேர்தலுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், தேர்தலுக்கு முன்பே அவற்றை முடிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் 3-ம் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள். அதை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Thenchittu February 2024 - Part 1 Download

School Morning Prayer Activities - 07.02.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:351


பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


விளக்கம்:


 பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.


பழமொழி :

Might is right


வல்லன் வகுத்ததே சட்டம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு. --சோஃபோக்கிள்ஸ்


பொது அறிவு :


1. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ


2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?


விடை: பி.டி. உஷா


English words & meanings :


 veils (v)- to hide or cover திரை, முகமூடி ; vexation (n)- worry or anger துயரம் (அ) எரிச்சல்


ஆரோக்ய வாழ்வு : 


கோவை கீரை : கோவைக்கீரையின் சாறினை காலை, இரவு முறையே 2 ஸ்பூன் குடித்து வர நாள்பட்ட நெஞ்சு சளி, இருமல் ஆகியவை குணமடையும். அதோடு இந்த சாறு நாள்பட்ட புண்களையும் ஆற்ற உதவுகிறது.


பிப்ரவரி 07 இன்று


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்

Devaneya_Pavanar_2006_stamp_of_India

தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.


நீதிக்கதை


 இரண்டு ஆட்கள் ஒருவர்க்கு ஒருவர் துணையாய்ப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு கோடாரி கிடந்தது.


அதை முதலில் பார்த்தவர் "நான் ஒரு கோடாரியைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டு அதனை எடுத்தார்.


உடனே மற்றவர், "அப்படிச் சொல்லக்கூடாது, நண்பரே. நான் நீ என்று பிரித்துப் பேசக் கூடாது. 'நாம் கண்டெடுத்தோம்' என்று தான் இனி சொல்ல வேண்டும்” என்றார்.

அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் அந்தக் கோடாரியைத் தொலைத்தவர் எதிரே வந்தார். இவர்களிடம் கோடாரி இருப்பதைக் கண்டு, 'கோடாரியை எடுத்தது யார்?' என அவர் கேட்டார்.


அதற்கு எடுத்தவர், "நாங்கள் எடுத்தோம்" என்றார். உடனே சற்று நேரத்திற்கு முன் அவருக்கு பேசக் கற்றுக் கொடுத்தாரே, மற்றவர், அவர், "தப்பு தப்பு அப்படிச் சொல்லக் கூடாது. கண்டெடுத்தவுடன் நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள், 'நான் கண்டெடுத்தேன்' என்று அதுதான் சரி. இப்போதும் அதைத் தான் சொல்ல வேண்டும். நாங்கள் என்று சொல்லக் கூடாது" என்று சொன்னார்.


நீதி : தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் ஒருமாதிரியும். இழப்பு கிடைக்கும் என தெரிந்தால் ஒருமாதிரியும் பேசுவது மனித குணம். அது தான் 'எலும்பில்லாத நாக்கு எதையும் பேசும்.


இன்றைய செய்திகள் - 07.02.2024


*மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு.


* மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் தீ; ஆறு பேர் பலி 60 பேர் காயம்.


* 2026 அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு.


* மதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பூரணம்மாள் மேலும் ரூபாய் மூன்று கோடிக்கு நிலம் தானமாக வழங்கினார்.


* உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் இசை விழா நடைபெற்றது. இதில் 18 பேருக்கு கலை செம்மல் விருது வழங்கப்பட்டது.


* இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.


Today's Headlines


The central government decided to fence the entire Myanmar border area.


 * Firecracker factory got fire in Madhya Pradesh;  Six dead and 60 injured.


 * Target to complete AIIMS, Madurai by October 2026.

 * Pooranammal also donated three crore rupees worth of land to Panchayat Union Middle School in Madurai.


 * A music festival was held to celebrate the declaration of Chennai as a City of Music by the World Heritage Organization UNESCO.  In this, 18 people were given the Kalai Semmel Award.


 * The Indian team won the second Test cricket match against the England team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நமது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை

 மது பள்ளியின் மின் இணைப்பு சார்ந்த விவரத்தினை (மின் இணைப்பு எண் + மின் அட்டை முதல் பக்க நகல்) EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறை


 குறிப்பு:

11 அல்லது 12 இலக்க மின் இணைப்பு எண்ணினை முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும்.

EB Number (11 Digit) or (12 Digit) = Region Code (2 Digit) + Section (3 Digit) + Distribution (3 Digit) + Service Number (3 Digit) or (4 Digit)


🔗 அதற்கான நேரடி லிங்க்

https://emis.tnschools.gov.in/school/ebconnection


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நாளை (07-02-2024) புதன்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) எடுத்துக் கொள்ளலாம்.

 

Restricted%20Leave%20Days%20(%20RL%20%20RH%20List%202024)%20-%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%202024

நாளை (07-02-2024) புதன்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) எடுத்துக் கொள்ளலாம்.


காரணம்:-


ஷபே மீரஜ்

IMG_20231219_141950

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லும் மாநாடு

 IMG-20240204-WA0010_wm

தன்னார்வலர்கள் தேர்வு :

மாநில அளவில் வெப் போர்டல் மூலம் பதிவு செய்த தன் னார்வலர்களின் தகவல்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டது . தன் னார்வலராக வர விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் , இல்லம் தேடிக் கல்வி மையம் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் . 1-5ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு 12 ம் வகுப்பும் , 6-8ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு இளங்கலை பட்டமும் படித்திருக்க வேண் டும் , பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது . தன்னார்வ லர்கள் தொடர்ச்சியாக வாரத்திற்கு , குறைந்தது 6 மணி நேரம் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் . கண்டிப்பாக , தமிழ் தெரிந்திருக்க வேண்டும் . தமிழ் , ஆங்கிலம் , கணிதம் கற்றுத்தர வேண்டும் . நிபந்தனைபடி தன்னார்வலர்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது . இதன்படி மாதம் 31000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்நி லையில் 2 லட்சம் தன்னார்வலர்கள் இதில் பணிபுரிந்தனர்



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News