2027 ஆம் ஆண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடரும்...

 IMG-20250610-WA0021

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

 2025-2027 ஆம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , எண்ணும் எழுத்தும் சார்ந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு ( 1 முதல் 3 ஆம் வகுப்பு ) தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு ( 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ) முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் 2025 2026 ஆம் கல்வியாண்டில் , 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியினை 09.06.2025 முதல் 13.06.2025 முடிய நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Smart Class room guidelines -திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்

 9Th%20Social%20Science%20Study%20Material%20and%20Guide_20250610_180412_0000

திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்

👇👇👇👇

Smart Class room guidelines - Download 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BEO Pay Fixation Clarification by DEE

 IMG_20250610_094623

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தின் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்யப்பட்டது 07.02.2019 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது சார்ந்து தெளிவுரை கோரப்பட்டமை - தெளிவுரை வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

!

DEE - BEO Pay Fixation Clarification.pdf

👇👇👇👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு

 IMG_20250610_195748

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு

👇👇👇👇

Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

MHM To BEO - தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

 IMG_20250610_203539

07.02.2019 முன்பாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வட்டார கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

👇👇👇👇

Dir Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு ஆணை

IMG_20250610_151640

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளில் 25 % இடங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு ; 25 % ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கவில்லை ; உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீது உத்தரவு🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது - விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

 கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப் படுகின்றன. கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2023-ம் முதல் வழங்கப்படுகிறது.


நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம்: 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் துணை வேந்தர்கள் விண்ணப்பிக்க முடியாது. இது தவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.


ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. கல்வியாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதை குடியரசுத் தலைவர் டெல்லியில் செப். 5-ம் தேதி அளித்து கவுரவிப்பார். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 01129 581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை www.ugc.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

 NEET

நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.


மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.


இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது. வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை 

neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று,

 ‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களுக்கு (எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்தும். மீதமுள்ள 85% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Class 4&5 - Term 1_English - 2025 -26.pptx Module

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ !

 CBSE Class 10, 12 results 2024 Updates: 2024ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் வெளியிட இருக்கிறது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான  பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியாது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, cbseresults.nic.in ,  results.cbse.nic.in
cbse.nic.in ,  digilocker.gov.in , results.gov.in ஆகிய இணையத்தளங்களில் தங்களது பதிவெண்  மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2016ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியம் தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து வருகிறது. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜி லாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது.


டிஜிலாக்கர் இணையதளத்திற்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும், கடவுச் சொல்லையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும்

இதுதவிர, ஐவிஆர்எஸ் சேவைகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் உள்ள மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், டெல்லிக்கு வெளிப்புறம் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணுக்கும் அழைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் தேர்வு 2024 ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ்: டவுன்லோட் செய்வது எப்படி?

 இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை இன்று (மே 1ஆம் தேதி) தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு மே 5, ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

படி 1: தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்https://nta.ac.in/ 

படி 2: "NEET UG 2024 அட்மிட் கார்டு"க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

படி 4: உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தேசிய தேர்வு முகமை இணையதளத்தைப் பார்க்கவும். ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி டவுன்லோட் செய்துக் கொள்ளவும்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஐ.ஐ.டி மெட்ராஸ் டேட்டா சயின்ஸ் படிப்பு; விண்ணப்பப் பதிவு ஆரம்பம்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் (IIT Madras) டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் படிப்பில் நான்கு ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புக்கு (BS) மே 26 வரை விண்ணப்பங்களை வரவேற்கிறது. ..டி மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் படிப்பு 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவியது. மே 2024 தொகுதிக்கான அதன் தகுதிச் சுற்று மே 31 முதல் தொடங்கும்.

..டி மெட்ராஸ் படிப்பில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டிய தகுதிகள்:

- 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமானவர்கள் வயது அல்லது கல்விப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் உடனடியாக படிப்பில் சேரலாம்.

- 11 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை எழுதிய பள்ளி மாணவர்கள் தங்கள் கோர்ஸ், பாடப்பிரிவு அல்லது கல்வி வாரியத்தைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு படிப்பில் சேரலாம்.

- விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.

- கல்வி பின்னணி அல்லது வயது வரம்பு எதுவும் இல்லை.

..டி மெட்ராஸ் விண்ணப்பம், பணம் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர் கூடுதல் விவரங்களைப் பூர்த்தி செய்து, சரிபார்ப்புக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது மட்டுமே பரிசீலிக்கப்படும். விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள், பணம் செலுத்தியிருந்தாலும், அவை செல்லுபடியாகாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ்: கட்டண விலக்கு

வெரிசான் (Verizon), ரெனால்ட் நிசான் (Renault Nissan) HSBC, Tata AIA, Sutherland, LTTS, L&T Thales, Dun and Bradstreet மற்றும் Walmart, போன்ற நிறுவனங்களின் CSR ஆதரவுடனும், மேலும் தனியார் தனிநபர்களின் நன்கொடைகள் மற்றும் பல்வேறு அரசாங்க உதவித்தொகை திட்டங்களின் ஆதரவுடனும், ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள அனைத்து பெண் மாணவர்களுக்கும் (LPA) மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 LPA உள்ள ஆண் மாணவர்களுக்கும் இந்தக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது, என ..டி மெட்ராஸின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, ST, SC, PWD மற்றும் EWS மாணவர்களுக்கு பிரிவு வாரியான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், மேலும் சர்வதேச மாணவர்களுக்கு எந்த கட்டண சலுகையும் வழங்கப்படாது.

தற்போது, 27,000 மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பாடத்திட்டமானது முன் பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரடி ஒத்திசைவான அமர்வுகளின் கலவையுடன் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. வாராந்திர ஆன்லைன் பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 150 இயற்பியல் மையங்களில் நேரில் வினாடி வினா மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சென்னை ..டி.,யின் பி.எஸ் (தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள்) பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “4 ஆண்டு பி.எஸ் பட்டப்படிப்பின் தொடக்கத் தொகுதி இன்னும் 4 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை. மதிப்பிற்குரிய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவது முதல் மதிப்புமிக்க ஆராய்ச்சி மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெறுவது வரை, அவர்களின் சாதனைகள் அவர்களின் திறன் மற்றும் நிரல் மற்றும் தரத்தைப் பற்றி பேசுகின்றன,” என்று கூறினார்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News