EL Surrender - ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது Income Tax வராமல் இருக்க கவனிக்க வேண்டியது

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



 


*ரூ.61,700/ அடிப்படை ஊதியம் பெற்று வரும் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு (2025-2026 ஆம் நிதியாண்டில்) Gross Income தோராயமாக 12,28,638/- வரக்கூடும்.இந்த தொகைக்கு (12,75,000 வரைக்குமே) வருமான வரி வராது.*

அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் 01/10/2025 அன்று ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம்அவருக்கு *EL Surrender Amount Rs.50,343/-* கிடைக்கும் பட்சத்தில்....
(2025-2026 ஆம் நிதியாண்டில்)
*Gross Income Rs.12,78,981/-* ஆக அதிகரிக்கும்.
அப்போது அந்த தொகைக்கு வருமான வரி கணக்கீடு செய்து பார்த்தால்....
👇👇👇👇👇👇👇
  • 0-4 lakh - Nil
  • 4-8 lakh - 20,000 (5%)
  • 8-12 lakh - 40,000 (10%)
  • Above 12 lakh - 597 (15%)
*Total Tax = 60,597/-* வரும்.
(அதாவது அந்த ஆசிரியர் EL Surrender விண்ணப்பிக்காமல் இருந்தால் IT வராது. விண்ணப்பித்து Surrender பெற்றால்... தான் பெறும் Surrender தொகையை விட கூடுதலாக IT செலுத்த நேரிடும்.
குறிப்பு :- இந்த கணக்கீடு ஒரு உதாரணத்திற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.*
எனவே,
2025-2026 ஆம் நிதியாண்டில் தாங்கள் Gross Income 12 இலட்சத்தில் இருந்து 12,75,000-க்குள் பெறுபவராக இருந்து *வருமான வரியில் இருந்து விலக்கு* பெறக்கூடிய வாய்ப்பு இருக்கும்பட்சத்தில்.
தாங்கள் 01/10/2025 அன்று அல்லது *31/03/2026-க்கு முன்னதாக* ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதினால் அந்த ஒப்படைப்பு தொகையை வருமான வரியாக செலுத்தும் நிலை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
முடிந்தவரை இந்த *2025-2026 ஆம் நிதியாண்டில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய இருப்பவர்கள் வருமான வரியை*
*(with EL Surrender / without EL Surrender என இருவேறாக) கணக்கீடு செய்து* பார்த்துக்கொள்வது நன்று.

*Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment