அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021

எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம்.



புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 திட்டத்தின்படி, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் எனவும் தமிழக அரசின் நிதித்துறை கொள்கை விளக்க குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது. இதன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2018

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014, 1.7.2014 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு கால அளவிற்கு சில சிறப்பம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பெற உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து, 4லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர்களை சார்ந்துள்ள மகன் அல்லது திருமணமாகாத மகள் ஆகியோர் மனநலம் குன்றிய அல்லது மனநலமற்றவர்களாக இருப்பவர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் பெற உச்சவரம்பு 7.50 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment