இல்லம் தேடி கல்வி மையத்துக்கு பிளக்ஸ் போர்டுகள் அனுப்பும் பணி தீவிரம்

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு, பிளக்ஸ் போர்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கொரோனா தொற்று பரவல் காலங்களில், அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.




அதற்காக, தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளுக்கு மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, கல்வி சேவை வழங்கப்படுகிறது. 20 குழந்தைகளுக்கு, ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 கரூர் மாவட்டத்தில், 3,029 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த, இல்லம் தேடி கல்வி மையங்களை அடையாளப்படுத்த, பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பும் பணி, கரூர் மாநகராட்சி பள்ளியிலிருந்து, நேற்று தொடங்கியது. அந்த போர்டில், மையத்தின் எண், குடியிருப்பு முகவரி, கிராமம், தன்னார்வலர் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் அடங்கியுள்ளன.

0 Comments:

Post a Comment