ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்குகிறது. நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், 2021-22-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை -1, உடற்பயிற்சி இயக்குநர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment