ஜே.இ.இ.,(JEE) நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்

தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. 

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., பிரதான தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்வு ஏப்., 21, 24, 25, 29, மே 1 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது. 

இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மார்ச் 1 முதல் ஏப்., 5 வரை நடந்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, நாளை துவங்க உள்ளது; மே 3 வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட தேர்வானது மே 24 முதல் 29 வரை நடக்க உள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment