'பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி' - அமைச்சர் அன்பில் மகேஷ்

வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.


0 Comments:

Post a Comment