பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்.. துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 பேர் பங்கேற்கவில்லை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்கும் வகையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு  மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் மொத்தம் 6,49,467 பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவ/மாணவியர்  10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் துணைத் தேர்வில்'  கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

0 Comments:

Post a Comment