மாணவர் சேர்க்கை ஆசிரியர்களின் பணிகள் என்ன? - Director Proceedings

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்

- அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாக சென்று (Door to door canvas) சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 



* பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5+ வயதுடைய

குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க (Spot Admission) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும் பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களிடம் எடுத்து கூறலாம். - பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் (Smart Class) செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (Quick Response Code) வழியாக பாடக் கருத்துகள் எளிமையாக்கப்பட்டு கற்றல் செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி (Online class) பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர்-மாணவர் பாட பரிமாற்றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும்.


* மாணவர்கள் சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில் ஆடியோ / வீடியோ பதிவுகள் இடம் பெறச் செய்யலாம். பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.







0 Comments:

Post a Comment