கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு

 கொரோனா நோய்த் தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துரை தெரிவித்துள்ளது. மேலும், தாய், தந்தையரை இழந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அரசாணை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் (ncpca) ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை அந்த மாணவர்களின் பள்ளி கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன்மூலம் கொரோனா காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் பயின்ற தனியார் பள்ளிகளிலேயே கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

0 Comments:

Post a Comment