ஆசிரியர்கள் வருகைப்பதிவு செயலியிலேயே லீவுக்கும் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியிலேயே, விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் வசதியுடன், புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அரசுப்பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு பிரத்யேக செயலியில் பதிவேற்றப்படுகிறது. இதில், ஆசிரியர்களுக்கான வருகையை செயலியில் பதிவிட்டாலும், பழைய நடைமுறைப்படி, பதிவேட்டிலும் கையொப்பிமிட உத்தரவிடப்பட்டுள்ளது.


தலைமையாசிரியர் மேற்பார்வையில், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியில் பதிவேற்றப்படும். இதனால், தாமதமாக பள்ளிக்கு வந்தாலும், முழு சம்பளம் பெறும் நிலை நீடித்தது.

இதற்காக, 2019ல், பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.


இந்நிலையில், ஆசிரியர்களுக்கான செயலியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே, விடுமுறை விண்ணப்பிக்க, செயலியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.


ஆனால் தொழில்நுட்ப குளறுபடிகளால், விடுப்பு குறித்த தகவல்கள் பதிவேற்ற முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், விடுப்பு தகவல்களும் பதிவேற்றும் வகையில், செயலியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஆசிரியர்கள் வருகைப்பதிவு காலை 9:30 மணிக்குள், செயலியில் கட்டாயம் பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மகப்பேறு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட, 14 வகையான காரணங்களுக்காக எடுக்கப்படும் விடுப்பு குறித்த தகவல்களை, செயலியில் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்கள் தாமதமாக வருகைப்பதிவேற்றினால், அரைநாள் விடுப்பாக அறிவிக்கப்படும்' என்றனர். 


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment