பண்பாடு, கலாசாரம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழர் பண்பாடு குறித்து, தொல்லியல் துறை வழியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, மாதந் தோறும் பல்வேறு வகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இந்த வரிசையில், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


இதற்கு, வருவாய் மாவட்ட வாரியாக, தலா, 40 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 1,460 பேருக்கு, தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிக்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


பண்டைய தமிழர் நாகரிகம், கலாசாரம், வாழ்வு முறை, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை, மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துகள் இந்த பயிற்சியில் இடம்பெறும்.


மேலும், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் விளக்கப்படும் என, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment