மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: என்எம்எம்எஸ் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டு இருக்கிறது.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில்ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வுசெய்ய்படுகிறார்கள். இதில், தமிழகத்துக்கான மாணவர் ஒதுக்கீட்டு எண்ணிக்கை 6,695 ஆகும். இவ்வாறு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிதாகவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் பதிவுசெய்ய வேண்டும். அந்த வகையில், நடப்பாண்டு என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment