தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள்

 வரும் கல்வி ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகத் தலைவர் ஐ லியோனி தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதால் கூடுதலாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் முதலே வரும் கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு தடையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை 25 புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை மாணவர்களுக்கான புத்தகங்களில் 5 புத்தகங்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மேலும் 13 புத்தகங்கள் மொழிமாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment