ஆசிரியர் கலந்தாய்வு : கைப்பேசியில் காலியிடங்களை அறியும் வசதி

 பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியிலேயே காலியிடங்களின் விவரத்தை அறியும் வசதி இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு மே 8- ஆம் தேதி தொடங்குகிறது. இணையவழியில் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக கடந்த 3 - ஆம் தேதி வரை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டன.


 இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தங்கள் கைப்பேசியிலேயே அறிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


அதன்படி ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் தங்களது லாக்இன் ஐடி வாயிலாக காலிப்பணியிடங்களை அறிந்துகொள்வதுடன் அதில் 12 இடங்கள் வரை தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அந்தக் காலிப்பணியிடங்கள் தங்கள் சுற்றுக்கு முன் யாராவது எடுத்துவிட்டால் அந்தத் தேர்வு பட்டியலில் இருந்து காலியிடங்கள் நீங்கி விடும் அல்லது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும்.


இந்த வசதியின் மூலம் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின்போது தங்கள் கைப்பேசியில் காலிப்பணியிடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

 அதோடு இடத்தை முன்கூட்டியே தெரிவு செய்யும் காலதாமதத்தைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment