School Morning Prayer Activities - 21.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

விளக்கம்:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.


பழமொழி :

A friend in need is a friend indeed

ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்


இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :

ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்

பொது அறிவு :

1. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காமல் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியும்?

விடை: ஒட்டகம்

2. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை: 300

English words & meanings :

 Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.

Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம்:உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, நல்லசெயல் திறன் உண்டாகும். முறையான பயிற்சி அவசியம்.


ஜூன் 21 இன்று

உலக இசை நாள்


உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.


பன்னாட்டு யோகா நாள்

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். 


நீதிக்கதை

தள்ளாடி ஒரு முதியவர் தன்வீட்டு வாயில் வரை வருவதையும், வாயிலருகில் வந்ததும் ஒரு பேரிடி ஓசை கேட்டுக் கீழே வீழ்ந்ததையும் கண்டார். அவரை உள்ளே அழைத்துவர வாயிலுக்கு ஓடினார். பணி யாட்கள் உதவியுடன் உள்ளே கொணர்ந்து ஒரு அறையில் கிடத்தி அவருக்குச் சூடாகக் காபி கொடுத்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண் திறந்து பார்த்தார். அதற்குள் தமிழ் மகனும் அவரை அடையாளங் கண்டு கொண்டார். அவர் வேறு யாருமல்லர். தனக்கு இளமை யில் உதவிய பெரியவர்தான் என்பதை அறிந்து துணுக்குற்றார்! "ஐயா! தங்க ளுக்கு இந்த நிலை எவ்வாறு வந்தது?'' என வருந்தி வேண்டவே, அம்முதியவர் தமது கடைசி அறச்செயல் தமிழ் மகனுக்கு உதவியதுதான் என்றும், பின்னர், தீயோர் கூட்டத்தில் சிக்கி அறமற்ற செயல்களில் விரும்பி ஈடுபட்டு இந்நிலைக்குத் தள்ளப் பட்டதாகவும் கூறி முடித்தார். தமிழ் மகனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. "ஐயா! நீர் விரும்பிச் செய்த அறச் செயல் வீண் போகவில்லை என்றான்


இன்றைய செய்திகள் - 21.06. 2023

*உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.

*சென்னையில் 295% அதிக மழைப்பொழிவு தற்போது 162 மி.மீ மழைப் பதிவானதாக சென்னை வானிலை மையம் தகவல்.

*சென்னைக்கான புதிய போக்குவரத்து திட்டம் 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு.

* ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களை சந்தித்தார் -  இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

*உலகிலேயே முதன்முறையாக மாடல் வாரியாக கார்கள் வெளியிடும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்.

*ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியது.


Today's Headlines

* Prime Minister Modi emphasized that all countries of the world should respect international laws and the sovereignty of other countries.

 Chennai Meteorological Department informed that 295% more rainfall has been recorded in Chennai now with 162 mm of rain.

 *Decided to get feedback from 50,000 people on the new transport plan for Chennai.

 * Railway Minister Ashwini Vaishnav meets local people at the site of the train accident.

 *For the first time in the world, the Chinese government has published the carbon emissions of cars by model.  A program to create awareness among people about environmental pollution.

 *The first Test match of the Ashes series reached its final stage.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment