மன்ற செயல்பாடுகள் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் (2nd Term) நடத்துதல் சார்ந்து SPD செயல்முறைகள்

 IMG_20231121_071052

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் நடத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார , மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை- ( 1 ) ல் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓரு பள்ளியிலிருந்து செப்டம்பர் , அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளி அளவில் நடைபெற்ற 10 போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவர்கள் , நவம்பர் மாதத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர் . வட்டார அளவிலான போட்டிகளை நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்கு முன் நடைபெற தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்மாணவர்களை வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக ஓர் ஆசிரியர் பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது . இப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி செலவினம் , 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம் & நினைவு பரிசு , வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் , வட்டார அளவில் போட்டிகள் நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில் உள்ளவாறு ரூ .2,81,06,035 / ( ரூபாய் இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும் ) நிதி அனைத்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.


SPD Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment