பள்ளிகளுக்கு மழை விடுமுறை - புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித் துறை தகவல்

 2019

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.


தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது. 


அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழை பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. 


இந்தச் சூழலில் நிகழாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சா்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.


அதேபோன்று வியாழக்கிழமை பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன.


இதனால் அந்தப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment