பள்ளிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு; தமிழகத்திற்கு பாராட்டு

 


62870_20240212134732

ஜல் ஜீவன் இயக்கம், துாய்மை பாரதம் திட்டம் போன்றவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழகத்தில் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட; செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பின், கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


ஊரகப் பகுதிகளில், தனி நபர் வீடுகளில், 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில், தேசிய அளவில், 73.98 சதவீத வீடுகளுக்கும்; தமிழக ஊரகப் பகுதிகளில், ஒரு கோடிக்கு மேல் அதாவது, 80.43 சதவீத வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு, 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது, இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என, மத்திய அரசு செயலர் பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment