1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - Director Proceedings

 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் Beo login மூலம் download செய்து BRC மூலம் Print எடுத்து பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்து தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


பார்வையில் காணும் கடிதத்தில், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டும், அத்தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்குஏற்ப பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நிதியானது வட்டார வாரியாக கணக்கிடு செய்து மாவட்ட அளவில் தொகுத்து ரூ 2,43,60,453/- ஒதுக்கீடு செய்து இவ்வியக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இத்தேர்வினை நடத்திடும் பொறுப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார். தேர்விற்காண வினாத்தாட்களை (BEO) Login மூலமாக பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களைஅந்தந்த வட்டார வளமையங்களில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு பள்ளில் மாணவர் எண்ணிக்கைகேற்ப வினாத்தாட்களை பிரதி எடுக்கும் பணியினை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மூன்றாம் பருவத் தேர்வுக்கான நிதியானது இணைப்பு 1ல் உள்ளவாறு 38 வருவாய் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. பெறப்படும் தொகையினை வட்டார வளமையத்தில் நகலெடுப்பதற்கான வினாத்தாள்களின் எண்ணிக்கை வினாத்தாள்களின் பக்க எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப வட்டார வளமையம் வாரியாக சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள இணைப்பு 2ல் உள்ளவாறு விடுவிக்குமாறும், இத்தேர்வினை எவ்வித இடர்பாடும் இன்றி இணைப்பு3ல்


Click Here to Download - 1- 5th - Ennum Ezhuthum - Term 3 Exam Question Download Instructions - Director Proceedings - Pdf







🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment