பி.இ - பி.டெக்; எந்த இன்ஜினியரிங் படிப்பு சிறந்தது?

 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பி. மற்றும் பி.டெக் படிப்புகள் என்பது என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன

 

இந்தநிலையில், பி. (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகள் என்ன என்பது பற்றியும் அவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் பற்றியும் கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்

B.E என்பது Bachelor of Engineering (இளங்கலை பொறியியல்) மற்றும் B.Tech என்பது Bachelor of Technology (இளங்கலை தொழில்நுட்பம்) ஆகும். இரண்டுக்குமான படிப்பு கால அளவு 4 ஆண்டுகள் தான். இரண்டிலும் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

இரண்டு படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகள், அடுத்தக்கட்ட முன்னேற்றம் (career growth), வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்றவை ஒரே அளவில் உள்ளன

..சி.டி. (AICTE), வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இரண்டு படிப்புகளையும் ஒரே தரத்தில் கருதுகின்றன. கல்வி நிறுவனங்கள் பாடப் பிரிவுகளை குறிப்பிடும் முறை மட்டுமே வேறுபடுகிறது. இரண்டு டிகிரிகளும் ஒன்றுதான்

இன்ஜினியரிங் என்பதுதான் படிப்பே தவிர, பி. அல்லது பி.டெக் என்பது பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும் பட்டம் மட்டுமே. எனவே குழப்பம் இல்லாமல் சிறந்த கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்ய கவனம் செலுத்துங்கள்

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment