பொறியியல் கவுன்சலிங்: சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் பொறியியல் கவுன்சலிங் தொடங்க உள்ளது. இந்தநிலையில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர்கள் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்து, முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் செயல்முறை தொடங்கும்.

இந்தநிலையில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சிறந்த பொறியியல் கல்லூரிகளை எப்படி தேர்வு வேண்டும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

அதில், முதலில் பெற்றோர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும். மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்க்க வேண்டும்.

பின்னர் அங்கு படிக்கக் கூடிய மாணவர்களிடம் கல்லூரி பற்றிய கருத்துக்களை கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரி கலாச்சாரம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்

கல்லூரியின் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கல்லூரியின் ஆவரேஜ் வேலை வாய்ப்பு சம்பளம் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

தொழில் நிறுவனங்களுடன் கல்லூரி கூட்டாண்மை வைத்துள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

கல்லூரியின் சுற்றுப்புற சுத்ததை கவனியுங்கள். நல்ல படிப்புச் சூழலுக்கான வாய்ப்பு உள்ளதா என கவனியுங்கள்.

அதிக நன்கொடை வாங்கும் கல்லூரி சிறந்த கல்லூரி என நினைக்க வேண்டாம். டாப் கல்லூரிகள் ஒரே அளவில் வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்லூரியின் கடந்த கால நற்பெயருக்காக சேர வேண்டாம். சிறந்த அறிவை வழங்குகிறார்களா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த கல்லூரி என பெயர் பெற்ற கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்

கல்லூரியின் ஆசிரியர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி, அவர்களுக்கு சம்பளம் சரியான அளவில் கொடுக்கப்படுகிறதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய மகன் அல்லது மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறுவார் என்று நீங்கள் நினைத்தால், மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்குச் செல்லலாம்.

கல்லூரிகளுக்கு நேராகச் செல்லுங்கள், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்

மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேரும்போது சிறந்த கல்லூரிகளுடன் சிறந்த பாடப்பிரிவுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். 150 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு குறைவாக எடுக்க வாய்ப்பிருந்தால், மேனேஜ்மெண்ட் கோட்டாவை முயற்சிக்கலாம்.

 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment