நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????

 

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?

கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.


தேர்தலுக்கு  முந்தைய நாள் பணி ஆணை வழங்கும் நாளன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி   மூலம்,   மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்)  எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை  என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.


இப்பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி என்பது, முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மென்பொருள் மூலம் கணினியால் ஒதுக்கீடு செய்யப் படுவதால் , தேர்தலுக்கு  முந்தைய நாள் பணி ஆணை வழங்கும் நாளன்று காலை 7 மணிக்கு முன்பு யாரும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.


***

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கைபேசி செயலி  (mobile application) மூலம், நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?

கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பல வாக்குச் சாவடிகள் உண்டு. மக்கள் தொகைக்கு ஏற்ப, சுமார் 200 முதல் 350 வரை வாக்கு சாவடிகள் இருக்கலாம். இதை நாம் பாகம் எண் என கூறுகிறோம். 



ஒருசிலர், தேர்தல் பணி ஆணையில் வழங்கப் பட்டுள்ள குழு எண் தான், நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி எண் (பாகம் எண்) என கருதுகின்றனர். 

இது தவறு. 


குழு எண்ணுக்கும், வாக்குச் சாவடி எண்ணுக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை. 



தேர்தலுக்கு  முந்தைய நாள் பணி ஆணை வழங்கும் நாளன்று காலை தரவுகளை உள்ளீடு செய்தபின்தான், எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி என்பது தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் மூலம் கணினியால் ஒதுக்கீடு செய்யப் படும் என்பதால், எந்த வாக்குச் சாவடியிலும் பணியாற்றுமளவு, தயார் நிலையில் இருப்பது நல்லது. 


வதந்திகளை நம்ப வேண்டாம். 


கடந்த தேர்தல்களில், இதுபோல தவறான தகவல்களால் ஆசிரியர்கள், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment