EMIS - TC தயாரித்தல் பணி - செய்யவேண்டியது, தவிர்க்க வேண்டியது - ஆலோசனைகள்
ஒரு மாணவனின் தகவலை முதலில், student list மூலம் சரி பார்த்த பின், பிழையிருந்தால் எடிட் ஆப்ஷன் மூலம் பிழையை சரி செய்த பின், ஒரு முறைக்கு இரண்டு முறை தகவல்களை சரிபார்த்த பின், Save தர வேண்டும்.
இதன் பின் TC Generation பகுதிக்கு சென்று மாணவன் தகவலை மீண்டும் சரி பார்த்து, அதன் பின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை உள்ளீடு செய்து, Save Details தருவதற்கு முன்பு, மீண்டும் ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்து Save Details தரவும். Successfully என பச்சைக் கலரில் வலது பக்க மேல் பகுதியில் தகவல் கிடைத்த பின், மீண்டும், TC Generation பகுதிக்கு சென்று, தற்போது சரிபார்த்த மாணவனின் பெயருக்கு வலது புறம் உள்ள சிவப்பு அம்புக் குறியை அழுத்துவதன் மூலம், common pool க்கு அனுப்பும் ஆப்ஷன் தோன்றும்.
இதில்Terminal class தேர்வு செய்து Save கொடுத்தால், அந்த மாணவர் common pool சென்று விடுவார்.
இதன் பின், past students menu வில் சென்று, மாணவன் TC ஐ, Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுக்கலாம். அல்லது Save செய்து, பிறகு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொரு மாணவனுக்கும், TC முடித்த பின் தான், அடுத்த மாணவனுக்கு TC தயாரிப்புக்கான சரிபார்த்தல் பணியை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் உடனே TC Generate செய்யாமல், மொத்தமாக செய்யும் போது, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனைகள் வருகிறது.
கவனமாக செயல்பட்டால் பிழைகளை தவிர்க்கலாம்!
.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment