Showing posts with label 10th Exam. Show all posts
Showing posts with label 10th Exam. Show all posts

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் : வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனரிடம் அளித்துள்ள மனு:பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம், 2019 - 20ல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. 


அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருகிறது.எனவே, மாணவர்கள் நலன் கருதி, தியரியில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண் வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவர்களுக்கு, 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. 

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து, 7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறிவியல் வினாத்தாளில் அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண்கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை, இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 825 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

 பத்தாம் வகுப்பு மறுமதிப்பீட்டில் 825 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

SSLC Retotal List - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு!

 

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு!

10th Public Exam Result - Direct Link

 

10th Public Exam Result - Direct Link

10 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை 

👉 www.tnresults.nic.in

👉  www.dge.tn.gov.in 

இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


 தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.


ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.


 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்தேதி வரை நடத்தப்பட்டது.


இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.


இதைத் தொடர்ந்து 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19)வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.


ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!

 தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர். அதே போல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 87 ஆயிரத்து 700 மாணவர்களும் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.


இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.அதனைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு விடைத்தாள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ஆம் தேதி துவங்கி நாளையுடன் முழுவதும் முடிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்காெண்டு வருகிறது.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

 மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.






Click here for latest Kalvi News 

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

 தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தன. சுமார் 9.2 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப். 24) தொடங்குகிறது.


இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.


மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிக ளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here for latest Kalvi News 

Breaking News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு!!

 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு.
தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவு. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க
உத்தரவு.



Click here for latest Kalvi News 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு

 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.


ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.


தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து, மற்ற பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்பட்டன.


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click here for latest Kalvi News 

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

 விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம் - Press News

 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம் 

மே முதல் வாரத்தில் 10ம் வகுப்பு -ரிசல்ட்?

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்த பணிகளை, மே, 4க்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், 4.74 லட்சம் மாணவர்கள், 4.63 லட்சம் மாணவியர் என, மொத்தம், 9.37 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.


இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வு, கடந்த, 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடந்தது. இதில், 30 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராதது தெரிய வந்தது. அவர்களை, செய்முறை தேர்வில் பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்காக, செய்முறை தேர்வுக்கு, இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


அரசு தேர்வுத்துறை, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஏப்.,25ல் துவங்கி, மே, 3 வரை நடக்கும். மதிப்பெண் பட்டியல், மே, 4ல், தேர்வுத்துறையின் ஆன்லைன் பக்கத்தில் பதிவேற்றப்படும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதனால், மே மாதம் முதல் வாரத்திலேயே, 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

SSLC Examination April 2023 - Valuation Camp Schedule

 10th Exam - Paper Valuation Camp Schedule - April 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் கால அட்டவணை


Paper Valuation Camp Schedule - Download here

All Dt Venue List - Download here

Click here for latest Kalvi News 

SSLC Public Exam Apr 2023 - Paper Valuation Camp Schedule & All Dt Venue List

 

SSLC Public Examination Apr 2023 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் தமிழகம் முழுமைக்குமான விவரம் மற்றும் மதிப்பீட்டு அட்டவணை வெளியீடு!

Paper Valuation Camp Schedule - Download here

All Dt Venue List - Download here

Click here for latest Kalvi News 

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு - 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 

நடைபெறவுள்ள ஏப்ரல் பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest Kalvi News 

பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு வரும் 13ம் தேதியும்; பிளஸ் 1 பொது தேர்வு 14ம் தேதியும் துவங்குகின்றன. தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


இந்நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:


பொது தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆனவர்கள் உள்ளிட்டோர் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ள ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.


மாற்று திறனாளி சலுகை பெற்றவர்களின் விபரங்களையும், ஒவ்வொரு தேர்வு நாளிலும், இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்.


கூடுதல் தேவை ஏற்பட்டால், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் மூத்த முதுநிலை ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்துக் கொள்ளலாம்.


எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட கூடாது. இந்த வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பின்பற்றி, புகாருக்கு இடமின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Click here for latest Kalvi News 

10,11,12th - Public Exam Handbook 2023 Published

 


அரசு பொதுத் தேர்வு 2023 - தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

10ஆம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!