Showing posts with label 12th Exam. Show all posts
Showing posts with label 12th Exam. Show all posts

12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!

 தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர். அதே போல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 87 ஆயிரத்து 700 மாணவர்களும் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.


இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.அதனைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு விடைத்தாள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ஆம் தேதி துவங்கி நாளையுடன் முழுவதும் முடிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்காெண்டு வருகிறது.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

 மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.






Click here for latest Kalvi News 

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில்

 பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல; ஆழமானவையும்கூட. இத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி.


பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? பொதுவாக அவர்கள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என கூறுவீர்கள்?


“முதலில் தாங்கள் விரும்பும் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிக்கக் கூடாது. திணிக்கப்பட்டால் மாணவர்களால் முழு மனதோடு படிக்க முடியாது. இதனால், மாணவர்களுக்கு நிறைய பின்னடைவுகள் ஏற்படுகின்றன. எனவே, பிடித்த பாடத்தை படிப்பது என்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் அதை அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்ததை படிக்க வேண்டும்.



வணிகவியலில் நிறைய கோர்ஸ்கள் இருக்கின்றன. மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த கோர்ஸ்கள் நிறைய இருக்கின்றன. இவை மட்டுமின்றி, Data Science, Artificial Inteligence ஆகிய பாடங்களும் இருக்கின்றன.


தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கலாம் என யுஜிசி அறிவித்திருக்கிறது. காலையில் ஒரு படிப்பு, மாலையில் ஒரு படிப்பு என படிக்கலாம். மாலையில் படிக்கும் படிப்பை ஆன்லைன் கோர்சாகவும் எடுத்துக்கொள்ளலாம். மெட்ராஸ் ஐஐடியின் BS (Data Science), BS(Electronic System) ஆகிவற்றை மாலையில் படிக்கலாம். மாலையில் படிக்கும் இந்த படிப்புக்கு வயது கட்டுப்பாடு கிடையாது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அப்பாவும் மகனும்கூட சேர்ந்துகூட படிக்கலாம். இதில், ஒரு வருடம் மட்டும் படித்துவிட்டு ஃபவுண்டேஷன் சான்றிதழோடு முடித்துக்கொள்ளலாம். 2 வருடங்கள் மட்டும் படித்தால் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். 4 வருடங்கள் படித்தால் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும். இதை 4 வருடத்தில்தான் முடிக்க வேண்டும் என்பது இல்லை. 6 வருடம் கூட எடுத்துக்கொள்ளலாம்.


இதுமட்டுமின்றி, மாணவர்கள் எந்த கல்லூரியில் படித்தாலும் ஐஐடியில் நடக்கும் வகுப்புகளின் வீடியோக்கள், பாடபுத்தகங்கள், டிஸ்கஷன் ஃபோரம், கேள்வி கேட்டு பதில்களைப் பெறுவது ஆகியவற்றை ஸ்வயம் (https://swayam.gov.in/) என்ற ஒரு வெப்சைட் மூலம் மாணவர்கள் பெற முடியும். ஆண்டுக்கு 40-50 லட்சம் பேர் இதில் பதிவு செய்கிறார்கள். இந்த முறையில் படிப்பவர்களுக்கு நாங்கள் பரீட்சையும் நடத்துகிறோம். அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு கிரேடு கொடுக்கிறோம்.


கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு 40% கோர்ஸ்களை இதுபோல் அன்லைனில் படிக்கலாம் என்று AICTE (All India council for Technical education) அறிவித்திருக்கிறது. அப்படி நிறைய மாணவர்கள் மெட்ராஸ் ஐஐடியின் BS(Data Science), BS(Electronic System) படிப்புகளை படிக்கிறார்கள்.”



மாணவர்களைப் போலவே மாணவிகளும் எந்த ஒரு படிப்பையும் தேர்வு செய்ய முடியும் என்றாலும், மாணவிகளுக்கு ஏற்ற படிப்புகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?


“சுரங்கத் துறை போன்ற சில துறைகள் வேண்டுமானால் பெண்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஐஐடிஎம்-ஐ பார்த்தீர்களானால் எங்களிடம் 17 துறைகள் இருக்கின்றன. எல்லா துறைகளிலும் மாணவிகள் இருக்கிறார்கள். எனவே, மாணவிகளாலும் மாணவர்களைப் போல் சமமாகப் படிக்க முடிகிறது. நாங்கள் மாணவிகளுக்கு 20 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். நாங்கள் அதை செய்து வருகிறோம்.”


படிக்கும் காலத்தில் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


“கல்லூரிகளில் மாணவர்கள் பாடம் சார்ந்த அடிப்படைகளை நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அவர்கள் நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்களுக்கு ஒரு பிராப்ளம் கொடுக்கப்பட்டால் அதை அவர்கள் எவ்வாறு அப்ரோச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்லிக்கொடுப்போம். படித்து முடித்துவிட்டு நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மூலம் பணிகளை மேற்கொள்வார்கள். அந்த மென்பொருள் மூலம் நாங்கள் சொல்லிக்கொடுக்காவிட்டாலும், அந்த மென்பொருள் என்ன செய்கிறது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதோடு, அங்கு சொல்லிக்கொடுப்பது இவர்களுக்கு நன்கு புரியும்.


உயர் கல்வி நிறுவனங்களின் நோக்கம், மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வது; அதோடு, அவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினால் அதற்கான அடிப்படையை கற்றுத் தருவது.


மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, அவர்கள் படிக்கும் பாடத்திற்கான ரெபரன்ஸ் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை முன் அட்டை முதல் பின் அட்டை வரை முழுமையாக படிக்க வேண்டும். முன் அட்டை முதல் பின் அட்டை வரை வகுப்புகளில் பாடம் நடத்த முடியாது. முக்கியமானதை சொல்லிக்கொடுப்பார்கள். புரியும்படி சொல்லிக்கொடுப்பார்கள். பள்ளி வகுப்புகளைப் போல் இங்கு வகுப்புகள் இருக்காது. பள்ளிகளில் வரி வரியாக சொல்லிக்கொடுப்பார்கள். இங்கு வரிவரியாக சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், அது பொறியல் படிப்புக்கான வழி அல்ல.


ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட பிறகு அதில் உள்ள பிராப்ளம்களை மாணவர்கள் தாங்களாகவே சால்வ் செய்ய வேண்டும். பிராப்ளம் சால்விங் ரொம்ப ரொம்ப முக்கியம். இதை செய்யத் தொடங்கிவிட்டால் பொறியியலில் நல்ல நுட்பம் வந்துவிடும். பிராப்ளம் சால்விங் பயிற்சி நன்றாக இருந்தால் வேலை கிடைப்பது எளிதாகிவிடும். வேலை பெறுவதற்காக தனியாக பயிற்சி பெறத் தேவை இருக்காது.


நிறைய கல்லூரி மாணவர்கள் எங்களிடம் வந்து கேட்பார்கள். பிளேஸ்மென்ட்டுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. நாங்கள் சொல்வது இதுதான், பாடத்தை நன்றாக படித்துக்கொள்ளுங்கள். வேலை தானாக வரும்.”


எம்பிஏ படிப்பு யாருக்கு ஏற்றது? எம்பிஏ படிக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


“நிர்வாகத் திறன் என்பது மிகவும் முக்கியம். சில நிர்வாகத் திறன்களை பிடெக்-லேயே சொல்லிக்கொடுக்கிறோம். இன்றைக்கு நிர்வாகம் என்பது தொழில்நுட்பத்தை சார்ந்ததாக மாறி இருக்கிறது. எனவே, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் எம்பிஏ படித்தால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சிவில் இன்ஜினியர், எம்பிஏ படித்திருந்தால் அது அவருக்கு இன்னும் சிறப்பாக கைகொடுக்கும். இதேபோல்தான், நிதித்துறையாக இருந்தாலும், வேறு துறையாக இருந்தாலும்.


மேலும், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வரத் தொடங்கிவிட்டது. எனவே, பொறியியல் படித்தவர்கள், தொழில்நுட்பம் படித்தவர்கள் எம்பிஏ படிப்பது அவசியமாகி இருக்கிறது.”


வெளிநாடுகளில் படிக்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? அவர்கள் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?


“இந்தியாவிலேயே நிறைய படிப்புகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே படிக்கலாம். ஒருவேளை வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்றால் அதில் தவறில்லை. டாப் 50 பல்கலைக்கழகங்களில் பல வெளிநாடுகளில் இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் என பல நாடுகளிலும் சிறந்த பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் ரேங்கிங்கை கருத்தில் கொண்டு நீங்கள் சேரலாம். அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு இன்றியும் மாணவர்களை சேர்க்கின்றன.


என்னைப் பொறுத்தவரை பிஹெச்டி படிக்க வெளிநாடு செல்லலாம். இந்தியாவிலேயேகூட பிஹெச்டி படிக்கலாம் என்றாலும், வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் படிஹெச்டிக்காக செல்லலாம். மாஸ்டர் டிகிரிக்காக செல்வதைவிட பிஹெச்டிக்காக செல்வது நல்லது.”


மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க உங்கள் டிப்ஸ் என்ன சார்?


“பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் படிப்பில் கவனமாக இருப்பார்கள். ஒருவேளை கிடைத்ததை தேர்ந்தெடுத்துவிட்டாலும் பரவாயில்லை. பிடித்த மற்றொரு படிப்பை ஆன்லைனில் படிக்கலாம். ஏனெனில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்க முடியும். கணினி மென்பொறியாளர் என்பது தற்போது பெரிதானதாக கருதப்படுவதில்லை. பொறியாளர் என்பதுதான் முக்கியம் என்ற கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். அதானால்தான் தற்போது எல்லாமே Interdisciplinary education ஆக மாறிக்கொண்டிருக்கிறது.


ஒரு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் கணினி மென்பொருள் இருக்கிறது. எலக்ட்ரிக் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் இருக்கிறது. மெக்கானிக்கல் இருக்கிறது. மெட்டலாஜி இருக்கிறது. இப்படி 7-8 சேர்ந்ததுதான் ஒரு சின்ன ஸ்கூட்டரே. வாஷிங் மெஷினை எடுத்துக்கொண்டாலும் இத்தனையும் நாம் பேச முடியும்.


சமூகத்துக்குத் தேவையான ஒரு பொருளை நாம் தயாரிக்க வேண்டும் என்றால், இந்த Interdisciplinary knowledge நமக்குத் தேவைப்படுகிறது. எனவே, இரண்டாவதாக ஒரு பட்டப்படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”


சென்னை ஐஐடி-யின் கண்டுபிடிப்புகள், சமூகத்துக்கான பங்களிப்புகள் குறித்து...


“தற்போது நாங்கள் innovation and entrepreneurship-ஐ பெரிதாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். சமூகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். Rural Technology Incubater என்று ஒன்று இருக்கிறது. இதன்மூலம் கிராமப்புறங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


Centre for innovation என்று ஒன்று வைத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரு ஐடியாவோடு வந்தால் அதனை டிசைனாக மாற்றுகிறோம். டிசைனை ப்ராடக்டாக மாற்றுகிறோம். ப்ராடக்ட்டை ப்ரோட்டோ டைப்பாக மாற்றுகிறோம். ப்ரோட்டோ டைப்பை அவர்கள் ஸ்டார்ட் அப்பாக எடுத்து நடத்தலாம். இப்படி 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் மூலம் உருவாக்கி இருக்கிறோம்.


அடுத்ததாக டென் எக்ஸ் என ஒரு ப்ரோக்ராம் செய்திருக்கிறோம். இதன்மூலம் எல்லா Incubater-ஐயும் நாங்கள் சேர்ந்து கொண்டு வருகிறோம். ஒரு கல்லூரியில் Incubater செல் இருக்குமானால் அவர்கள் எங்கள் Incubater-ரோடு சேர்ந்து செயல்படலாம். ஒரு கல்லூரியில் இன்குபேட்டர் இல்லை என்றாலும், அந்த நிறுவனங்களுக்கு நாங்களே நேரடியாக எங்களால் முடிந்த மென்ட்டைார்ஷிப்பையும் நாங்கள் செய்கிறோம்.


இப்படி ஒட்டுமொத்த இன்குபேட்டர் மற்றும் entrepreneurship கான்சப்டை பெரிதாக எடுத்துச் செல்வதற்காக ஐஐடி மெட்ராஸ் நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டு ப்ராடக்ட்டுகள் குறித்து சொல்கிறேன். ஒன்று செப்டிக் டேங்க் கிளீனர். இது தற்போது வர்த்தக ரீதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே, அந்த ப்ராடக்ட் தற்போது பல பஞ்சாயத்துக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம். வீல் சேரில் வருபவர்கள் நேராக அந்த வாகனத்தில் ஏறி அதனை ஓட்டிச் செல்லலாம்.


செயற்கை கால். ஃபேண்ட் போட்டுக்கொண்டால் செயற்கைக் கால் இருப்பதே தெரியாது. அவர்களால் மற்றவர்களைப் போலவே நடக்க முடியும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்படி சமூகத்துக்குத் தேவையானபல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன? இதனை எவ்வாறு தடுப்பது?


“படிப்பு சார்ந்த சிரமங்கள், தனிப்பட்ட சிரமங்கள், நிதி சார்ந்த சிரமங்கள், மருத்துவ பிரச்சினைகள் என இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த நான்குமே கலந்தும் இருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் மாணவர்களின் சமூக தொடர்பும் குறைந்துபோய்விட்டது. மாணவர்களில் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டு திடீரென கல்லூரிக்கு வருகிறார்கள். இது சமூகம் சார்ந்த சிரமங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.


மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய முடிந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. இரண்டாவது, இணை திறன் அதாவது ஏதாவது பாடல் பாடுவது, ஆடுவது, இசை இசைப்பது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே, ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொள்பவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”


நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் எதிர்கால இலக்குகளை அடையவும் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


“வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் நாளை தலைவர்களாக வர வேண்டும். இதற்கு இந்தியாவில் நிறைய வேலை வழங்குபவர்கள் தேவை. வேலை பார்ப்பவர்கள் தேவை. இதற்கு எல்லோரும் innovation and entrepreneurship-ல் கவனம் கொடுக்க வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதேபோன்ற மின்சாரம் கிடைக்குமா; தண்ணீர் கிடைக்குமா; காற்று கிடைக்குமா; சுற்றுச்சூழல் கிடைக்குமா என்ற கேள்விகள் முக்கியமானவை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு இப்படி 17 நீடித்த நிலையான வளர்ச்சிக்கான விஷயங்கள் இருக்கின்றன. நாம் படிக்கும் எல்லா படிப்புமே இந்த நீடித்த நிலையான வளர்ச்சியோடு இணைந்து போக வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழைந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இதற்கு ஏற்ப நாமும் யோசிக்க பழக வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சிக்காக நாம் பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி இருக்கிறோம். கரியமில வாயுவை பூஜ்ஜியமாக குறைப்போம் என கூறி இருக்கிறோம். இதை குறுகிய காலத்தில் நாம் அடைய வேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளால் முடியாது. பொதுமக்கள் அனைவரின் பங்களிப்போடு இது நிகழ வேண்டும்.


நான்காவது, நாம் எல்லாவற்றையும் பேட்டர்ன் செய்ய வேண்டும். நமது ஐடியாவை நாம் ப்ரடக்ட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் முழுமையான தாக்கம் நமக்கு கிடைக்கும். எனவே, கல்லூரி அளவிலும் சரி , தனி நபர் அளவிலும் சரி தங்களுக்கு கிடைக்கும் ஐடியாவை பேட்டர்ன்செய்ய வேண்டும் என எண்ண வேண்டும். இந்தியா வல்லரசாக மாற இது மிகவும் முக்கியம்.”



 Click here for latest Kalvi News 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்தது - மே 5-ல் முடிவுகள் வெளியிட நடவடிக்கை

 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 8 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.


இதைத்தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப். 10-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் சுமார் 46 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப் படும் என ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மார்ச் 14-ம்தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 Click here for latest Kalvi News 

+1 , +2 - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 

மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

Click here for latest Kalvi News 

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்துவோருக்கு திடீர் கட்டுப்பாடு

 எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும். இந்நிலையில், விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:


> முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.


> மாணவர்கள் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நேரிடுகிறது. இதன்மூலம், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் தங்கள் பணியை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.


> உதவி தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களை விட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.


> விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


> மதிப்பீடு செய்ததில் அதிகளவில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப் பேற்க வேண்டும். மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.


Click here for latest Kalvi News 

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்போது பணியில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


அதில் கூறியதாவது; பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.


Click here for latest Kalvi News 

பொதுத் தேர்வுகள் - 2023 | ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!

 


மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!

Public Exam List - Download here...


Click here for latest Kalvi News 

“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

 நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.


தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tweeter Video Link - Click here...


Click here for latest Kalvi News 

Career guidance manual for class 12th students

 

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

12th std Career guidance manual - Download here

Click here for latest Kalvi News 

பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு வரும் 13ம் தேதியும்; பிளஸ் 1 பொது தேர்வு 14ம் தேதியும் துவங்குகின்றன. தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


இந்நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:


பொது தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆனவர்கள் உள்ளிட்டோர் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ள ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.


மாற்று திறனாளி சலுகை பெற்றவர்களின் விபரங்களையும், ஒவ்வொரு தேர்வு நாளிலும், இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

 DOWNLOAD PDF மதிப்பீட்டு முகாம் - அட்டவணை


Click here for latest Kalvi News 

பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்.


கூடுதல் தேவை ஏற்பட்டால், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் மூத்த முதுநிலை ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்துக் கொள்ளலாம்.


எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட கூடாது. இந்த வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பின்பற்றி, புகாருக்கு இடமின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Click here for latest Kalvi News 

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 14; பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ம் தேதியான நாளை மறுநாள் துவங்குகிறது. மாநிலம் முழுதும், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 5,000 பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில், செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.


சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில், உரிய வகையில் ரசாயன பொருட்களும், ஆய்வக பயன்பாட்டு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.


அவற்றை பயன்படுத்தி, எந்த முறைகேடும், குளறுபடியுமின்றி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இந்த செய்முறை தேர்வை, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, பாட வாரியாக அட்டவணை தயாரித்து, வரும் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


செய்முறை தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறை வழங்கியுள்ள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். யாரையும் தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடாது.


தேர்வுத்துறையால் சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வு நடத்த வேண்டாம் என்று, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.



+2 பொதுத்தேர்வு விடைத்தாள் தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள்

 


மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்கள் , முகப்புத்தாட்களை உதவி இயக்குநர்கள் 20.02.2023 முதல் 23.02.2023 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான முதன்மை விடைத்தாட்களின் வகைகள் , முதன்மை விடைத்தாளுடன் வைத்துத் தைக்கவேண்டிய வரைகட்டத்தாள் மற்றும் வரைபடங்கள் விவரம் ஆகியவை , தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பிவைக்கப்படுகிறது. இவ்விவரத்தினை அனைத்து தேர்வுமைய தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 +2 Topsheet Instructions.pdf - Download here...


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்!!

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேர்வுத்துறை அறிக்கை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு முன்னதாக இம்மாதம் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அந்த வகையில், அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் www.dge1.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்கு சென்று, USER ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யலாம். இதற்கான காலக்கெடு 17.02.2023 முதல் 28.02.2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிப்ரவரி 28 வரை தலைமையாசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, மார்ச் 2 ஆம் தேதிக்குள் அதனை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

10,11,12th - Public Exam Handbook 2023 Published

 


அரசு பொதுத் தேர்வு 2023 - தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

Plus Two - அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான தேர்வுத்துறை சுற்றறிக்கை

 


மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு , பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து , உரிய அறிவுரைகளை வழங்க தேர்வுத்துறை உத்தரவு.

+2 Internal Marks Upload.pdf - Download here...


 Click here for latest Kalvi News