Showing posts with label 12th Exam. Show all posts
Showing posts with label 12th Exam. Show all posts

பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு

 மேல்நிலை இரண்டாமாண்டு . முதலாமாண்டு , பத்தாம்வகுப்பு மற்றும் இத்துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள்- வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.


 வழித்தட அலுவலர்களுக்கென தனியாக உழைப்பூதியம் நிர்ணயம் செய்யப்படாததால் , இதுநாள் வரை பறக்கும் படை அலுவலர்களுக்கான உழைப்பூதியத் தொகையே வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2023 முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் அனைத்து பொதுத் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ .130. ( ரூபாய் நூற்று முப்பது மட்டும் ) என நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

+1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE

 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு என தேர்வுத்துறை அறிவிப்பு.

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!

 


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு   வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!


Concession to Disabled - Download here



 Click here for latest Kalvi News 


பொதுத் தேர்வுக்குத் தயாரா?

 நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட, தேர்வு என்றதுமே அவர்களுக்குள் ஒருவித பயமும் பதற்றமும் சேர்ந்துவந்து ஒட்டிக் கொள்கிறது. இது அவர்களது புத்திக்கூர்மையையும் செயல்திறனையும் ஆற்றமையும் குறைப்பதாக அமைகிறது. இதனைச் சரியாக கையாளக் கற்றுக்கொண்டால், தேர்வை பயமின்றி எதிர்கொள்ளலாம். தூள் கிளப்பலாம். மாணவர்கள் சுலபமாக பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்கள் இதோ...

முதலில், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக படித்துக்கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கை வைத்துக்கொள்ளாதீர்கள். அந்த ஓர் ஆண்டினை முழுமையாக படிப்பதற்கு என்று அர்ப்பணித்தால் மட்டுமே நீங்கள் பெற நினைத்த மதிப்பெண்ணை வாங்கிட முடியும். இவ்வளவு நாளாக சும்மா இருந்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனும் பதற்றம் கொள்ள வேண்டாம்.

மீதமிருக்கும் நாட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் திறனுக்கேற்றவாறு படிப்பதற்கென்று ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். பத்துப் பாடங்களில் எட்டுப் பாடங் களைக்கூட முழுமையாகப் படித்தால் போதும். பத்தையும் நுனிப்புல் மேய்வதை தவிருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் தூக்கம். எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இருக்காமல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. தூக்கத்தைக் குறைத்து படித்துக்கொண்டே இருந்தால், சோர்வு உண்டாகி, படிப்பது மறந்துபோகக்கூடும். எப்போது படித்தாலும் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்.

தினமும் இரவில் தூங்கச் செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தூங்கச் செல்லும் முன்பாக தொலைக்காட்சி பார்ப்பதும், செல்பேசியில் நேரத்தைச் செலவிடுவதும் நமது தூக்கத்தையும் கவனத்தையும் பாதிக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்காமல், சிறிது வீட்டைச் சுற்றி நடக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடலாம்.

தேர்வு நேரங்களில் சரியான உணவு முறை வேண்டும். இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள், கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காலைச் சிற்றுண்டியை தவிர்த்தல்கூடாது. உடல் நலனைப் பேணுவதும் அவசியம் என்பதால் தேவையான உணவை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் நலனைப்போலவே மனநலனும் மிகவும் அவசியம். பெற்றோரின் குணநலன்கள், வீட்டுச்சூழல், பொருளாதார நிலை போன்ற பல சவால்கள் இருக்கக்கூடும். இதனால் மாணவர்கள் எதிர்மறையான சிந்தனையை ஒருபோதும் அடைந்து விடக்கூடாது. நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் நல்லது.

பாடங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைவிட, புரிந்து படிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் பாடங்களை ஆசிரியரிடமோ அல்லது சக மாணவரிடமோ கேட்டு, தெளிவு பெற வேண்டும். படித்து முடித்தவுடன் பழைய தேர்வுத் தாள்களை வைத்து, பயிற்சி செய்யலாம். கணக்குப் பாடத்தை இயன்றவரை பலமுறை போட்டுப் பார்க்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர், மாணவரை மட்டும் விட்டுவிட்டு, தனியாக கேளிக்கைகளில் ஈடுபடுதல், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த டிப்ஸ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.


10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.

பிளஸ் 2 வரை அலகு தேர்வை பொதுத்தேர்வு போல் நடத்த உத்தரவு

 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பருவ தேர்வுக்கு முந்தைய அலகு தேர்வை, பொது தேர்வு போல நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சமச்சீர் கல்வி பாட திட்டம் அமலில் உள்ளது. இந்த பாட திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்று பருவ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் பருவ தேர்வும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும் செப்., 23ல் துவங்க உள்ளது. இதற்கு முன், மாணவர்களை தயார்படுத்தும் வகையில், அலகு தேர்வு என்ற பெயரில், முன் பருவ தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுகளை, இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள், மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இந்த தேர்வின் மதிப்பெண்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக கற்பித்தல் முறையை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

 பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணை தேர்வு வரும் 25ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

செய்முறை தேர்வுக்கான தேதி விபரத்தை, தனித் தேர்வர்கள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும்.உரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த தேர்வரும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


12th Result: ரிசல்ட் பார்க்க முடியவில்லையா..? மார்க் தெரிய எளிமையான வழி இதோ...

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி அமைச்சர் அன்பில் மகேஷ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in

மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பலரும் இணையம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முயற்சித்ததால் இணையபக்கத்தில் சேவை தாமதமானது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Revaluation Of Marks: விடைத்தாள்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

12ம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுக்கான  முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடு:  

12 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான்  பெரும்பாலான உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

எனவே, இந்த பாடப்பிரிவுகளில் மதிப்பீடு முறையில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடு திட்டத்தை அரசுத் தேர்வுகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களது விண்ணப்பங்கள் அடைப்படையில்  விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றி வருகிறது.  

ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால்  மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.      கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மறுமீதிப்பீடு  செய்யாமல் விடைத்தாளின் ஜெராக்ஸ் நகளுக்கு மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற ஏதுவாக, மறுகூட்டல்/மறுமதிப்பீடு  நடைமுறையை தேர்வுகள் இயக்கம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ல் துணைத்தேர்வு

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் 97.95% மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது.

மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வரச்சொல்லி நிறைய தன்னம்பிக்கை கொடுத்தோம். ஆனாலும் சில லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

+2 தேர்வு முடிவு TLM - ஐ ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான தேர்வுத்துறையின் அறிவுரைகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை -6 – 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலைப் பொதுத் தேர்வுகள் - மே 2022 , தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) – அனைத்துப் பள்ளிகளும் ஆன் - லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பான செயல்முறைகள்.




IMG_20220617_124251



10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.70 லட்சம் பேர் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5 வயது ஆன மாணவர்களின் சேர்க்கை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்ந்த 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும். அத்துடன், அவர்கள் சிறப்பு தேர்வு எழுதுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விளையாட்டுத் துறையில் சிலம்பம் போட்டிக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் வழங்கியுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்.. துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 பேர் பங்கேற்கவில்லை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்கும் வகையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு  மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் மொத்தம் 6,49,467 பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவ/மாணவியர்  10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் துணைத் தேர்வில்'  கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது.

முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்ககம்




பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது 5ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகளை அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை  சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம்
வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொது தேர்வுகள் எப்போது?

அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள்  பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார்.


நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.