Showing posts with label CBSE. Show all posts
Showing posts with label CBSE. Show all posts

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ !

 CBSE Class 10, 12 results 2024 Updates: 2024ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் வெளியிட இருக்கிறது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான  பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியாது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, cbseresults.nic.in ,  results.cbse.nic.in
cbse.nic.in ,  digilocker.gov.in , results.gov.in ஆகிய இணையத்தளங்களில் தங்களது பதிவெண்  மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2016ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியம் தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து வருகிறது. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜி லாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது.

டிஜிலாக்கர் இணையதளத்திற்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும், கடவுச் சொல்லையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும்

இதுதவிர, ஐவிஆர்எஸ் சேவைகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் உள்ள மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், டெல்லிக்கு வெளிப்புறம் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணுக்கும் அழைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: சிபிஎஸ்இ ஆயத்தப் பணி தொடக்கம்

1236628

வரும் 2025-26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆயத்தமாகும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆணைக்கு ஏற்ப சிபிஎஸ்இ பணிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் மே மாதம் முதல் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத் தேர்வு நடத்துவதற்கான கல்வி சார்ந்த கட்டமைப்பை வகுக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள நடைமுறைக்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் இது முன்னெடுக்கப்படுகிறது.

பருவத் தேர்வு முறையை அமல் செய்யும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் முறையினை 2024-25 கல்வியாண்டில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் 2025-26 கல்வியாண்டுக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட அமைப்பு 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு பருவத் தேர்வை முன்மொழிந்திருந்தது. இதனை புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்வினை மாணவர்கள் அழுத்தமின்றி எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இது ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு போல இருக்கும். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது மாணவர்களின் விருப்பம் என்றும், அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தது. இதற்கு முன்பும் பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சி.பி.எஸ்.இ : 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் இந்த மாற்றங்கள் இடம் பெறும்: முக்கிய அறிவிப்பு

 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சி.பி.எஸ். இ-யில் 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில்  கேட்கப்படும் கேள்விகள் இனி, விரிவான தீர்வுகளுடன் கூடிய கேள்விகள் கேட்கப்படும். மேலும்  அதை வாழ்வின் உண்மை நிகழ்வுகளுடன் பொருத்திபார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

இதுபோல விரிவான தீர்வுகள் உடைய கேள்விகள் எம்.சி.க்யூ வகை கேள்விகளாக கேட்கப்படும். இதுபோன்ற கேள்விகளின் சதவிகிதம் 40 % இருந்து 50  % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல கட்டமைக்கப்பட்ட  சிறிய மற்றும் நீளமான விடைகள் கொண்ட கேள்விகளின் சதவிகிதம் 40% இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

” தேசியக் கல்விக் கொள்கை, 2020-ன்படி வாரியம், பள்ளிகளில் திறன் அடிப்படையிலான கல்வியை அமல்படுத்துவதில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மதிப்பீட்டை சீரமைப்பது முதல் திறன்கள் வரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான முன்மாதிரி வளங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று சி.பி.எஸ்.இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “ 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமானவிமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்மனப்பாடம் செய்வதிலிருந்து விலகிகற்றலை நோக்கிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே வாரியத்தின் முக்கிய வலியுறுத்தலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

” இதன் விளைவாக, வரவிருக்கும் அமர்வில், வாரியத்தின் வினாத்தாள்களில் உள்ள நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படையிலான கேள்விகளின் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில்  9 மற்றும் 10ம் வகுப்புகளின் தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; எந்தத் தேதி வெளியாகும்?

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு ஏப்.3ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், வாரியம் மே மாத மத்தியில் முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

சிபிஎஸ்இ 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு, போர்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தியது. முடிவுகள் மே 12 அன்று அறிவிக்கப்பட்டன.

2022
ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு இரண்டு விதிமுறைகளாக நடைபெற்றது. டேர்ம்-1 தேர்வு நவம்பர்-டிசம்பர் மற்றும் 2 தேர்வு மே-ஜூனில் நடந்தது.

இதையடுத்து, ஜூலை 22, 2022 அன்று இரு மதிப்பெண்களை ஒருங்கிணைத்த பின்னரே வாரியம் முடிவை அறிவித்தது.

இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு இந்தியாவிலும், 26 வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளில், கிட்டத்தட்ட 16.9 லட்சம் மாணவர்கள் போர்டு தேர்வுக்கு பதிவு செய்தனர், அவர்களில் 87.33 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டை விட 5.38 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் 1,12,838 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களும், அவர்களில் 22,622 பேர் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

வாரியம், முதல் முறையாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுகளை (OBE) பரிசீலித்து வருகிறது. மேலும் 9 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலுக்கு ஒரு சில பள்ளிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளை நடத்துவதற்கு வாரியம் முன்மொழிந்துள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 2024-25: 10-ம் வகுப்பில் திறன் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் இப்படி ஒரு மாற்றம்!

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.) 10-ம் வகுப்பில் வழக்கமான பாடங்களான அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களைப் படிப்பதற்கு போராடும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

சி.பி.எஸ். வெளியிட்டுள்ள 2024-25-ம் கல்வியாண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்த மூன்று கட்டாயப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அதைத் திறன் பாடத்துடன் மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாணவர் அறிவியல், கணிதம் அல்லது சமூக அறிவியலில் தோல்வியடைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட திறன் பாடத்தில் தேர்ச்சி பெற்றால், தோல்வியடைந்த பாடம் மாற்றப்பட்டு, பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அதற்கேற்ப சரிசெய்யப்படும்.

அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற வழக்கமான பாடங்களைப் படிப்பதற்கு போராடும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கையாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் புதிய கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பில் இந்த மூன்று கட்டாயப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தவறிய மாணவர்கள் இப்போது அதை திறன் பாடத்துடன் மாற்றுவதற்கான விருப்பம் (Option) உள்ளது.

ஒரு மாணவர் மூன்று கட்டாயப் பாடங்களில் (அதாவது அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல்) ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்து, திறன் பாடத்தில் (ஆறாவது விருப்பப் பாடமாக வழங்கப்படும்) தேர்ச்சி பெற்றால், அந்த பாடம் திறன் பாடத்தால் மாற்றப்படும். பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வுகள் அதன்படி கணக்கிடப்படும்என்று சி.பி.எஸ். மேல்நிலை பாடத்திட்டம் 2024-25 கூறுகிறது.

ஒரு மாணவர் அவர்கள் எடுக்கும் முதல் ஐந்து பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தில் தோல்வியடைந்தால், அது அவர்களின் ஆறாவது பாடமாக (திறன் பாடங்கள் வழங்கப்படாவிட்டால்) அல்லது ஏழாவது பாடமாக (விருப்பப்பட்டால்) அவர்கள் தேர்ந்தெடுத்த மொழியுடன் மாற்றப்படும்

"ஒரு மாணவர் ஏதேனும் ஒரு மொழிப் பாடத்தில் தோல்வியுற்றால், முதல் ஐந்து பாடங்களில், அது ஆறாவது பாடமாக எடுக்கப்பட்ட மொழியால் மாற்றப்படும் (திறன் பாடங்கள் வழங்கப்படவில்லை என்றால்) அல்லது ஏழாவது பாடமாக (விரும்பினால்), அவர் அல்லது அவள் இந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்குப் பிறகு, இந்தி அல்லது ஆங்கிலம் முதல் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்ற மொழியாக இருக்கும்" என்று புதிய பாடத்திட்டம் கூறுகிறது.

மேலும், அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்பு வரை மூன்று மொழிகளைப் படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

எட்டாம் வகுப்பில் மூன்றாவது மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாமல், ஒன்பதாம் வகுப்பிற்கு சென்ற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பின் இறுதியில், 8-ம் வகுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்ட அதே பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தி அந்தந்தப் பள்ளிகளால் தேர்வு நடத்தப்படும்

மேலும், ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாத பட்சத்தில் வகுப்பில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு (CWSN) மூன்றாம் மொழிப் படிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.