Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

Temporary Teachers Application Form Download PDF

Temporary Teachers Post Application Form for Tet Paper 1 and TET Paper 2 and PG Teachers download pdf and fill this application send it to our nearest DEO, CEO Office.

13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.





School Calendar 2022 - 2023 (Single Page with Full Details)

2022 - 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள்,  விடுமுறை, வார விடுமுறை, CRC நாட்கள் அடங்கிய பள்ளி நாட்காட்டி ஒரே பக்கத்தில் ...  பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.





 School Working Days Calendar 2022 - 2023 ( Single Page ) - Download here

EMIS News - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்"... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

EMIS தளத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை அறிய முடியும். எனவே உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள சிஇஓ-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?

 


தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முறை மற்றும் அவர்களுக்கான சம்பளம் ஆகிய விவரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்

இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை

இந்தப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம்

இடைநிலை ஆசிரியர்கள் – ரூ. 7,500

பட்டதாரி ஆசிரியர்கள் – ரூ. 10,000

முதுநிலை ஆசிரியர்கள் – ரூ. 12,000

காலியிடங்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

இந்த காலியிடங்களைப் பற்றிய விவரங்கள் அறிய, இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டு, எந்ததெந்தப் பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ளப் பள்ளியில் காலியிடங்கள் இருப்பது தெரிய வந்து, நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து, வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், அடுத்த ஓராண்டிற்கு மேற்கூறிய ஊதிய அடிப்படையில் பணிபுரியலாம்.

மாதம் ரூ.1,000 உதவி திட்டம்- தகுதியான மாணவிகளை தேர்வு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்த உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதற்காக https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும், தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட இன்று (25-ந்தேதி ) முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் வகுப்பு எடுக்க தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - பள்ளிக்கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் அறிவியல் வகுப்பு எடுக்க "அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு" வழங்கப்பட்ட அனுமதி ரத்து

தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சி என்று எழுந்த கண்டனத்தையடுத்து, வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 

மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்கலாமா? RTI REPLY!

மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!

 



அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி 7 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாய பணி அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?

மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல்  விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.

40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.

2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...

இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


IMG_20220614_204026


IMG_20220614_204041


2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 20.06.2022 - க்குள் 

http:/nationalawardstoteachers.education.gov.in 

என்ற இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது . 2021 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும் . ( 2021 ஏப்ரல் 30 வரை ) அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , ஆசிரியர்கள் 20.06.2022 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழில் செய்தி வெளியிட்டு , குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தங்கள் அளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் , அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது . அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.