Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

 பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.


பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!


School Calendar - August 2022

ஆகஸ்ட் மாத  முக்கிய தினங்கள்.


06-08-2022-- குறை தீர்க்கும் நாள்.


27-08-2022 --- சனி --- CRC நாள்..


வரையறுக்கப்பட்ட விடுமுறை:


1) 03-08-2022---  புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா


2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி  விரதம்.


3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா


4) 12-08-2022 -- வெள்ளி --

காயத்ரி ஜெபம்.


அரசு விடுமுறை நாட்கள் :


1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை


2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம்


3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி


4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி




பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் / பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் , தொழில்சார்ந்த அல்லது கலை அல்லது சமுதாயக் கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் . அதிக அளவிலான மாணவர்களை சென்றடைவதுதான் இதன் நோக்கம் ஆகும் . உள்ளூர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் பங்கு பிரதானமாக அமைவதால் , இக்கூட்டமைப்புகளும் நுகர்வோர் மன்றங்களாக செயல்படலாம்.

நுகர்வோர் மன்றங்கள் உருவாக்குதலில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Download here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news

1/8/2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்

  1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்.





Click here to Join WhatsApp group for Daily kalvi news

TN PTA Rules And Regulations

 தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள்!


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.



SPD Proceedings avail
👇👇👇👇👇👇👇👇👇👇

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது. 

இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தரமான கல்வி-பெண் கல்வி-திறன் மேம்பாடு-விளையாட்டுக்கல்வி-உடல் கல்வி-ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.


இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம். 

இரண்டாவது நிகழ்வாக, அமர் சேவா சங்கத்தின் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிடும் நிகழ்ச்சி. மரியாதைக்குரிய ராம கிருஷ்ணன்-சங்கர் ராமன் ஆகியோரால் இன்று வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இந்த அமர் சேவா சங்கமானது 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலனிற்காக குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் ஒரு சிறந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சமுதாய நீரோட்டத்தில் சமநிலை மற்றும் சம வாய்ப்புடன் இணைந்திடும் வகையில் செயல்புரிந்து வருகிறது. 


அமர் சேவா சங்கமானது கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. செயலி மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறீர்கள். 

இதுபோன்ற புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களோடு சுமார் 16,000 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த கல்வியினை அளித்து நமது சமுதாயத்தில் அவர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலே ஆற்றல்மிகு செயல்புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


தேசியக் கொடி விதிகளில் மத்திய அரசு செய்த முக்கிய திருத்தங்கள்! என்ன அவை?

 பகலில் மட்டுமல்லாது இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ண தேசியக் கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறைவதற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது சட்ட நடைமுறையாக இருந்தது. தற்போது இந்திய தேசியக் கொடி சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தேசியக் கொடிகள் கைத்தறியால் நெய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியும் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விதியிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கைத்தறி மட்டுமல்லாது தேசியக் கொடியானது இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், பாலிஸ்டரில் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது நினைவு கூறத்தக்கது.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news


ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்

 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ' ஆசிரியர் மனசு ' பெட்டி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும.   ' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி,


1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


 2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.


 3. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


4.  மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.


 5.சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


 6.  பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.


 7.  பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.


8.   ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. 


9.  மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. 


10.  ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்


மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

Temporary Post - Selected Teachers List

பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அரசு தொடக்க / மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள நடுநிலை / உயர் நிலை / இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் . WP.No.16704 / 2022 மீதான இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் படி தற்காலி நியமனத்திற்கான ஒப்புதல் அளித்து ஆணை வழங்குதல் சார்பாக தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

இணைப்பில் காண் பட்டியலில் படி ஏற்பளிக்கப்பட்ட தற்காலி நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் அளித்து தற்காலிக நியமனம் பெற்றவர்கள் 20.072022 பணியில் சேர்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . தற்காலிக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்திட சார்ந்த தெரிவிக்கப்படுகிறது.


 பள்ளித்தலைமையாசிரிகளுக்கு இணைப்பு - தற்காலிக நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள் விவரம்


Temporary  Post - Selected Teachers List - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 (ஏதேனும் ஒரு நாள்) தேதிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.


July - Sep 2022 | GPF New Rate Of Interest Published

It is announced for general information that during the year 2022-2023 , accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 7.1 % ( Seven point one percent ) w.e.f. 1 July , 2022 to 30 September , 2022. This rate will be in force w.e.f. 1st July , 2022. The funds concerned are :

 


விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply



 

18.06.2022 CRC க்கு ஈடு செய் விடுப்பு உண்டு - RTI தகவல்

பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

IMG_20220712_183527


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அவ்வகையில் , இவ்வாண்டிற்கான கல்வி வளர்ச்சி நாளிலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய வழிகாட்டுதலின்படி அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களிலும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவப் . படத்தை அலங்கரித்து விழாவினைக் கொண்டாடவும் , அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடியதற்கான விவரங்களைத் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்வாணையரகத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Click here to Join WhatsApp group for Daily kalvi news

  

Primary Classes - New Method Week Time Table

Primary Classes - New Method Week Time Table

School Inspection Review Meeting Report - 06.07.2022

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை - பாடவேளையினை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவு



6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வாரத்திற்கு 7 பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் 6ஆக குறைப்பு

ஆங்கில பாடத்திற்கான பாட வேளையும் குறைப்பு

அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை "தமிழ்" Periods எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆக குறைப்பு 

பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்த நிலையில், Period குறைத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை



பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!





2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது . மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.


இத்துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.