Showing posts with label SMC. Show all posts
Showing posts with label SMC. Show all posts

TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

 TNSED (SMC) Parents Mobile App :


03.03.2023 நடைபெறவுள்ள SMC உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் SMC Parents App - ஐ Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும்.


User Name : உறுப்பினர்களது பதிவு செய்த Phone Number

Password : Smc@Phone Number last 4 Digit ( S Capital ) 


Example : Smc@5643

TNSED (SMC) Parents Mobile App - Download here...


The username is the mobile number and password is Smc@last four digits. The message will be passed on to all HMs via EMIS inbox module and the SMC and EMIS DCs as well.




Click here for latest Kalvi News 

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 03.03.2023 நடத்த உத்தரவு.

 


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .

SMC meeting circular 03.03.2023 -Reg - Download here


03.03.2023 - SMC Meeting Agenda

 


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் சிந்தனையில் மாற்றம் ! சமூகத்தின் ஏற்றம் !

Annexure 2 - SMC-CwSN Agenda 03 March.pdf - Download here

SMC - மிக மிக முக்கியமான அறிவிப்பு.


அனைவருக்கும் வணக்கம்  மிக மிக முக்கியமான அறிவிப்பு.


மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது, இனிவரும் காலங்களில் இருந்து *மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.


அந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இனி இதே நடைமுறைதான் மாதம் தோறும் தொடரும் என்பதனையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


  Click here for latest Kalvi News 


SMC - அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு....

 அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:


❇️ அனுப்பப்பட்டுள்ள மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


❇️ உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல் , SMC தலைவர் மட்டுமே , ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, 

Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER)


🔺TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே , அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


🔺 உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை, ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


❇️அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


❇️ உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.


❇️ பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:  

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்

2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை

4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி

5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்

7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்

8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 ( மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


🎯மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட  மாநில திட்ட இயக்குநர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SMC Meeting Circular 25.11.2022.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

SMC - November Agenda for CwSN

 

இந்த மாதத்திற்கான மாற்றுத்திறன் மாணவர்கள் சம்பந்தப்பட்ட SMC செயல்பாடுகள் :


SMC - November Agenda for CwSN - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

October Month SMC Meeting - SPD Instructions

 


க்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

October Month SMC Meeting - SPD Instructions - Download here


அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

 


அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!


SPD - Oct Smc Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

SMC & கிராம சபா கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் , பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்!

 SMC & கிராம சபா கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் , பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்!


30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022  கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்!




SMC ( 26.08.2022 ) கூட்டத்திற்கு எடுத்து கொள்ளவேண்டிய கருத்துருக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் அட்டவணை

 

நாளை அனைத்து பள்ளிகளில் நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கு எடுத்து கொள்ளவேண்டிய கருத்துருக்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் அட்டவணை


SMC Meeting Instructions - Download here...


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: எஸ்எம்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு நிலைகளாக நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அனைத்துவித அரசுப் பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக. 2,3-ம் தேதிகளில் மதுரையில் நடைபெறும். மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஆக. 8 அல்லது 9-ம் தேதியில் நடைபெறும். பங்கேற்பாளர்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தேர்வு செய்யப்படும். மேலும், பள்ளி அளவிலான பயிற்சி ஆக. 11 முதல் 31-ம் தேதி வரை வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

 TNSED (SMC) Parents Mobile App :


29.07.2022 நடைபெறவுள்ள SMC உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் SMC Parents App - ஐ Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும்.


User Name : உறுப்பினர்களது பதிவு செய்த Phone Number


Password : Smc & Phone Number last 4 Digit ( S Capital ) 


TNSED (SMC) Parents Mobile App - Download here...


The username is the mobile number and password is Smc@last four digits. 

The message will be passed on to all HMs via EMIS inbox module and the SMC and EMIS DCs as well.

SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு

 பள்ளி மேலாண்மைக் குழுவில் (எஸ்எம்சி) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியை பயன்படுத்துதல் குறித்து மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம்களுக்கு கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 


மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக.2, 3 ஆகிய நாள்களில் மதுரை பில்லா் மையத்தில் நடைபெறும். மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி ஆக.8 அல்லது 9 ஆகியவற்றில் ஏதாவது ஒருநாளில் நடைபெறும். பங்கேற்பாளா்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தோ்வு செய்யப்படும். பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆக.11 முதல் ஆக. 31 வரையிலான நாள்களில் நடைபெறவுள்ளது.

SMC Empty letter pad pdf

  SMC letter pad அனைத்து பள்ளிகளிலும்  இருக்க வேண்டும்...


அந்த வகையில் Smc empty format கீழே உள்ள link ஐ click செய்து downlaod செய்து கொள்ளுங்கள்.....


👇👇👇👇👇👇👇👇👇👇


Click SMC Empty letter pad pdf

SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு.

2022-2023 ம் கல்வியாண்டு  பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன்படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் .  அனைத்து அரசு தொடக்கநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்திடவும் , அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் , பெற்றோர்களின் முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. எனவே பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியளித்து , இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தல் மற்றும் கால அட்டவணை :


SMC Training - Proceedings to Districts - Dr level, School Level , Letter pad & ID card Expenses - reg.pdf - Download here 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஏப்ரல் ஜுலை மாதங்களில் நடைப்பெற்றுள்ளது . இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் புதிய உறுப்பினர்களைக் கொண்டு மாதந்தோறும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது.


Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC - Steps to enter parent attendance tomorrow for Government High and Higher Secondary Schools

Steps to enter parent attendance tomorrow for Government High and Higher Secondary Schools

📍1. Class teacher to enter teacher ID and password to mark parent attendance. Do not use UDISE ID to login and mark attendance. 

📍2. Open settings and sync student list for your respective class (sections if applicable). There is no need to sync today's status for marking parent attendance. 

📍 3. Go back to home page. 

📍4. Click on SMC Module and choose the class/section. 

📍5. Each student will be marked as absent by default. Click on the A button. 

📍6. A pop up will open where you can mark the presence of the father, mother or guardian of the student. You may choose multiple options too. 

📍7. After choosing appropriate options, click OK. 

📍8. Enter data for all students in the same manner.

📍9. Click on save and sync at the bottom.

📍10. A message will appear saying saved successfully. In case of lack of internet connection, an amber colour will appear and you may attempt to sync the data when internet is accessible.

SMC - SGT, BT, PG Vacancy List Published



  SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Ariyalure District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - 



SMC - SGT, BT, PG Vacancy List - Kallakurichi District - Download Here


SMC - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

02.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20220614_193030

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைப்பெற்றது . இதன் தொடர்ச்சியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 ( சனிக்கிழமை ) அன்று மறுகட்டமைப்பை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது . மறுகட்டமைப்பு நடைபெறும் நாள் குறித்து பெற்றோர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட வேண்டும்

தொடக்கநிலை பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிகழ்வின்போது பார்வையாளர்கள் ( பள்ளிக் கல்வித்துறைமாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் ) நியமிக்கப்பட்டதைப்போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பார்வையாளர்களை நியமித்து இந்நிகழ்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட தலைமையாசிரியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.