TET ஆசிரியர்களின் கவனத்திற்கு - BT Teachers

🔵17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று  10 ஆண்டுகள் முடிகிறது.


🔵17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.


🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4


(4 Xerox Copies) தேவைப்படுகிறது.


www.asiriyar.net


For 🇧 🇹s


🔵Covering Letter


🔵விண்ணப்ப கருத்துரு


🔵SSLC Mark Sheet


🔵SSLC Mark Sheet   Genuiness


🔵+2 Mark Sheet


🔵+2 Mark Sheet Genuiness


🔵UG Certificate


🔵UG Certificate Genuiness


🔵B.Ed. Certificate


🔵B Ed. Certificate Genuiness 


🔵Appointment Order


🔵பணி வரன்முறை  ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.


🔵தகுதிகாண் பருவம்   ஆணை (or) SR இல் தகுதி காண பருவம் பதிவு பக்கம் Xerox.


🔵SR XEROX PAGES 


First page appointment page , 


Regularisation page, 


Probation page , 


genuiness entry page 


should be enclosed.


எத்தனை


🟢4 Sets தயார் செய்ய வேண்டும்.


🟢2 Sets BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.


🟢1 Set பள்ளிக்கு 


🟢1 Set ஆசிரியருக்கு


எப்போது


🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை 


குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.


🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.


🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.


SR ல் இருக்க வேண்டிய பதிவுகள்


🟢பணி நியமனம்


🟢பணி வரன்முறை


🟢தகுதி காண் பருவம்


🟢Genuiness entries


🟢Service Verification 


உங்களுக்காக


🔵Model Covering Letter


🔵Empty Covering Letter


🔵கருத்துரு விண்ணப்பம்


ஆகியவை PDF இணைப்பாக அனுப்பப்படுகிறது.


தேவை உள்ளவர்கள் Print எடுத்துக்கொள்ளலாம்.


Click Here to Download - Selection, Special Grade - All Forms - Pdf



 Click here to join whatsapp group for daily kalvinews update 



புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி - SCERT Proceedings

 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , பல்வேறு திட்டங்களை மாணவர்களின் கல்வித் தா மேம்பாட்டிற்காக செயற்படுத்தி வருகின்றது . கற்றலில் மாணவர்களின் அடைவை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பறை நிகழ்வை செயல்பாடுகளுடன் விளக்கத் திட்டமிடப்பட்டுள்ளது . பாடத்திட்டம் , பாட புத்தகம் உருவாக்கம் , கற்பித்தல் அணுகு முறைகள் , வகுப்பறை மேலாண்மை , புதிய கற்பித்தல் உத்திகள் , வினாத்தாள் தயாரித்தல் மற்றும் கல்வி துறை அமைப்பு ஆகியவை சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான வளங்களைத் தயாரித்து பயிற்சி அளிக்க இணைப்பு 1 இல் கண்ட மாநில வளக் குழுவும் , இணைப்பு 2 இல் உள்ள ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது .

6,7ம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பாடங்கள் புத்தக வினா விடைகள் வழிகாட்டி தொகுப்பு

  6,7ம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பாடங்கள் புத்தக வினா விடைகள் வழிகாட்டி தொகுப்பு


6th STD- click here 
 
7th STD - click here 



பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் T/M (SAI.K) முக்கிய வினா விடை தொகுப்பு (முழு பாடப்பகுதி) 2022-23.

 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் T/M (SAI.K) முக்கிய வினா விடை தொகுப்பு (முழு பாடப்பகுதி) 2022-23.                   


          Prepared by

SAI K THIRUKUMARAN 
BT-SOCIAL SCIENCE 
GHSS MGR NAGAR CHENNAI-78.

அனைவருக்கும் பகிருங்கள் மாணவச் செல்வங்கள் பயன் பெறட்டும்..

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் 
 

6th to 10th STD. 290 nos Science Text Book Activities

 


6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடத்தில் உள்ள செயல்பாடுகள் (Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் (Practicals) பக்க எண் வாரியாக, பாடவாரியாக, தேவையான உபகரணங்கள், கற்றல் விளைவுகள்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Monitoring officers பள்ளிக்கல்வித்துறையில் பார்வையிட வேண்டியவை

 Monitoring officers பள்ளிக்கல்வித்துறையில் பார்வையிட வேண்டியவை

Click here to download pdf file

Click here to join whatsapp group for daily kalvinews update 

தமிழ்த் துணையெழுத்துகள் (PDF)

 தமிழ்த் துணையெழுத்துகள் (PDF)

Click here to download pdf file

Click here to join whatsapp group for daily kalvinews update 

ஒரு நாள் ஒரு சொல் (ந, ன வேறுபாடு)

 ஒரு நாள் ஒரு சொல் (ந, ன வேறுபாடு)


Click here to download pdf file


Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளி பார்வை படிவம்

Ennum Ezhuthum English 3 letter words

Alphabet Cards with pictures for students

Virtual Reality Library in Tamilnadu Schools!

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 22 - 23ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் சட்டமன்ற பேரவையில் "மெய்நிகர் நூலகம் " ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நூலகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ( Virtual Reality Library) 76 நூலகங்களில் ஏற்படுத்தப்படும் திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்,


தமிழகத்தில் பொது நூலக இயக்கத்தின் கீழ் செயல்படும் 32 மாவட்டங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 38 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு இரண்டு நூலகங்கள் என மொத்தம் 76 நூலகங்களுக்கு தலா ஒரு நூலகத்திற்கு இரண்டு மெய்நிகர் தொழில்நுட்ப கருவி மீதம் 152 நவீனத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழிற்பக் கருவி (Virtual Reaity Library) ரூபாய் 65.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்துக்கு இரண்டு கருவிகள் வீதம் 152 மெய் நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது,

மேலும் இக்கருவிகள் இடம்பெறும் நூலகங்களில் 155 நூலகங்களுக்கு இக்கருவியினை பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மெய் நிகர் தொழில்நுட்பம் என்பது மெய்யான சூழலை அதன் தோற்றம்,வடிவம் மாறாமல் கண்டு, கேட்டு உணரும் வகையில் உருவகப்படுத்தப்பட்ட அனுபவமாகும்,அச்சூழல் மெய்யான உலகத்தை ஒத்ததாக அல்லது முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்.

புகைப்படம், வீடியோ, கணினி அனிமேஷன் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும் ,

விர்ச்சுவல் ரியாலிட்டியின் பயன்பாடுகளில் குழந்தைகளுக்கான, கல்வி, மருத்துவம் அல்லது அறிவியல்
 பயிற்சிகள் ஆகியவை அடங்கும்..


1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு

 தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.


அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.


இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

பாடக்குறிப்பு உட்பட பள்ளி பயன்பாடு குறித்த ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வித்துறை

 

பாடக்குறிப்பு உட்பட பள்ளி பயன்பாடு குறித்த ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - பள்ளிக்கல்வித்துறை , இராமநாதபுரம் மாவட்டம்

Teacher instructions 14.11.2022.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

உள்ளூர் விடுமுறை ( 16.11.2022 ) - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 

ஐப்பசி மாத துலா உற்சவத்தில் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் ஆய்வு - CEO Proceeding

 



தஞ்சாவூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 11.11.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , உதவித் திட்ட அலுவலர் , உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை முன்னறிப்பின்றி குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வானது ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் நடத்தப்படும். அதன்படி , அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி வளாகத் தூய்மை , கழிவறை தூய்மை , மேற்கூரைத் தூய்மை , வகுப்பறைத் தூய்மை , குடிநீர் வசதி , பதிவேடுகள் பராமரிப்பு , EMIS பதிவுகள் , மாணவர்களின் தமிழ் / ஆங்கிலம் வாசிப்புத்திறன் , கணித அடிப்படை செயல்பாடுகள் , எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள் , கற்றல் விளைவுகள் , பாடக்குறிப்பேடு மற்றும் பிற கல்வி இணை செயல்பாடுகள் , குறைதீர் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் தங்கள் பள்ளிக்குட்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் விவரங்கள் குறித்து குழு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் இச்செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குழு ஆய்வு நடைபெறும் நாளன்று அந்தந்த வட்டார தலைமையிடம் அல்லது அருகில் உள்ள இடத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் கலந்துகொள்ளும் வகையில் மீளாய்வுக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை.!

 இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு குழு வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறுபணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்து வரும் கற்றல் இடைவெளி கூடுதலாகி பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.


உதாரணமாக, வருவாய்த்துறைக்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்கள் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோருக்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்குத் தருகின்றனர்.


பள்ளிக்குள்ளேயே 'எமிஸ்' (Education Management Information System - EMIS) என்று அழைக்கப்படும் கல்வி தகவல் அளிக்கும் முறையினால் மாணவர்கள் கல்வி குறித்த 32 விதமான தகவல்களை சேகரித்து அவற்றை கணினியில் ஏற்றும் பணியும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.


ஆண்டு முழுவதும் பல காலங்களில் கல்விப் பயிற்சிக்கு செல்லுதல், இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து வரும் பணி, முதன்மைக்கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலகத் தபால்கள் குறித்து கணினியில் பதில் தருதல், விபரங்கள் தரும் பணி, பள்ளிகள் குறித்து பல்வேறு பணி என ஏராளமான கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் அன்றாடம் செய்து வருகின்றனர்.


இன்றைக்கு உள்ள காலச்சூழலில் பள்ளிகளில் குழந்தைகளை உடனிருந்து கவனிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவிட விடாமல், கற்பித்தல் அல்லாத பணிகளைத் தொடர்ந்து கல்வித்துறை ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது கடுமையான பணிச்சுமையை ஏற்றுவதோடு அவர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, கற்பித்தல் பணியையே பாழாக்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பல தவறான பாதையில் மாணவர்கள் பிறழ்ந்து போகும் நிலை அதிகரித்துள்ளது.


இது மட்டுமன்றி இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் முறை சாரா கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, முறை சார்ந்த கற்பித்தல் கற்றல் செயல்முறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்விப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது, மேலும் அவர்கள் மீது பணிச் சுமையை ஏற்றுகிறது. இது மட்டுமின்றி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு எண்களையும் எழுத்துக்களையும் கற்பிக்கிறோம் என்ற பெயரில், கற்றல் செயல்முறை மிகவும் காலம் தாழ்த்தப்படுகிறது. இது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.


இவ்வாறு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கு பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் முறைசார்ந்த கல்வி அமைப்பு செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்றுவதும் இல்லம் தேடி கல்வி, ‌எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் திட்டம் ஆகும். இது தேசிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கையை 2020 பின்பற்றியே கொண்டுவரப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கை மீண்டும் உயிர்பிக்க, கற்பித்தல் கற்றல் செயல்முறையை தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. கோடானு கோடி இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனையில் தவித்து வருகையில் அவர்களுக்கு அந்தப் பணியை வழங்குவதே சரியான தீர்வாகும். மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசு பள்ளிகளில் நவ.23-ல் கலைத் திருவிழா: மாநில அளவில் வெற்றி பெறுவோர் வெளிநாடு அழைத்து செல்லப்படுவர்

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வர பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

கலை, பண்பாட்டை ஒருங்கிணைத்தல்: கலை என்பது குழந்தைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், சாத்தியமானவற்றை ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்குமான இடம் ஆகும். கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி இவ்வாண்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா நடத்தப்பட உள்ளது.


இக்கலைத் திருவிழா பல்வேறுகலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும்.


கலைத் திருவிழா: முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம் வகுப்பு, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதி போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.


போட்டி நடைபெறும் நாட்கள்: கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நவ. 23 முதல் 28-ம் தேதிக்குள்ளும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5 தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் டிச. 6 முதல் டிச.10 தேதிக்குள்ளும், மாநில அளவில் 2023-ம் ஆண்டு ஜன.3 முதல் 9-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியர்களும், ஆய்வு அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளியின் EMIS செயலி வழியாக ஒவ்வொரு போட்டியில் பங்கு பெறும் மாணவரின் விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அளவில் பதிவு செய்ய வேண்டும். போட்டிகள் முடிந்த பிறகு தேர்வான, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.


இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலைப் போட்டிக்கு வட்டார அளவில் பார்வையிட இயலும், வட்டார அளவிலும் தேர்வான, வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயரை இவ்வாறு அந்த நிலையில் உள்ள பொறுப்பு அலுவலர் EMIS-ல் உள்ளீடு செய்ய வேண்டும் . மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டி வாரியாக தேர்வான மாணவ, மாணவியரின் பெயரும் முதன்மை கல்வி அலுவலரின் EMIS Login வழியாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்த மாணவரின் பெயர்களே மாநில அளவிலான போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான செயல்முறை விளக்க காணொளி TNSED youtube சேனலில் விரைவில் வெளியிடப்படும். அதனை பின்பற்றி அனைத்து நிலைகளிலும் தரவுகள் உள்ளீடு செய்யப்பட  வேண்டும். இவ்வாறு திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum - FA (b) Assesment will be opened all days next week due to rain holidays.

 மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் FA (b) அஸெஸ்மெண்ட் இந்த வாரம் முழுவதும் மேற்கொள்ளும் வகையில் app திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி நிகழ்வுகள் புகைப்படங்கள் Emis தளத்தில் பதிவேற்றம் செய்தல் வழிமுறை: School event , Staff event , Students event- ல் பதிவு செய்யத்தக்க புகைப்படங்கள்

 தளத்தில் பதிவேற்றம் செய்தல் வழிமுறை:


Emis - 

school login-

school-

school pictures-

event-

year-

student event- 

children's day - 

upload images

School event ல் பதிவு செய்யத்தக்க புகைப்படங்கள்:

👇👇👇👇👇👇👇👇

1. Independence day

2. Republic day

3.Annual day

4.Sports day

5. கல்வி வளர்ச்சி நாள்

6.Sports meet

7.awareness programs

8.field trip

9.movie screening

10. Carrier guidance


Staff event ல் பதிவு செய்யத்தக்க புகைப்படங்கள்:

👇👇👇👇👇👇👇👇

1.Teachers day

2. CRC training

3. எண்ணும் எழுத்தும் பயிற்சி

4.கற்றலில் மேம்பாடு

5.கற்றலில் இனிமை

6. ICT training

7.safety training

8. IED training


Students event ல் பதிவு செய்யத்தக்க புகைப்படங்கள்:

👇👇👇👇👇👇👇👇

1. Children's day

2. Competition

3.NCC

4.NSS

5.JRC

6.SCOUT

7.ECO CLUB


பதிவு செய்யும் எளிய வழிமுறை -Click here

பள்ளி நிகழ்வுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.a



Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் - CEO Proceeding

 மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Click here to download pdf file


மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள்  மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


Click here to download pdf file

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.11.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.11.2022


திருக்குறள் 

பால்: அறத்துப்பால்


அதிகாரம்:அறன் வலியுறுத்தல்

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பழமொழி :

"A light heart lives long. 
மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."

இரண்டொழுக்க பண்பாடு 

.1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.

பொன்மொழி 

"உங்கள் 24 மணிநேரத்தை மாற்றினால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவீர்கள். --எரிக் தாமஸ்

பொது அறிவு 

1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?

 வெள்ளி .

 2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ? 

லைகா.

English words - meanings

Zoo pathology - study of animal diseases. Noun. விலங்குகள் நோய் குறித்த படிப்பு

 
ஆரோக்கிய வாழ்வு

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சர்க்கரை நோய் பிரச்சனை  பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, நாவல் பழ விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பொடியை தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

NMMS
__________டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. விடை :பழவேற்காடு

நீதிக் கதை

ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். 




ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். 

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


செய்திகள் : 14.11.2022

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 45,826 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 108 இடங்களில் கனமழை பெய்தது - புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16-ம் தேதி உருவாகிறது.

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2-வது முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் ஆபத்து - ‘நேச்சர் மெடிசின்’ இதழில் ஆய்வுத் தகவல்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து.

2024 -2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்.





English News 

In Tiruvannamalai District water released excessively from both Sattanur dam and kuppanaththam dam. Due to this there is flooding both in Thenpennai and Seyyaru rivers. So government gave warning to the people living in the banks.

In Mayiladuthurai district 16, 000 were people were made to stay in the relief camps and nearly 45,826 hectare crops were affected by flood water by Minister K. K. S. S. R. Ramachandran 

There will be showers of rain for 4 days in TN as per the weather forecast 
In a single day there is a record of heavy rain in 108 places and another depression will form on 16th
 
The Draft Report for State Education Policy will be submitted to TN government within 6 months 

According to "Nature Medicine" Magazine if a person gets affected second time by 'Corona' there is a danger of losing lives
In Australia the variant omicron XPP is spreading fast. The health officers warned this as 4th wave. So the Australian government made many restrictions.

England won T-20 World Cup 2nd time by defeating Pakistan

ICC released the list of countries which are going to play for the period of 2024 - 2027 for under 19

Asian boxer Shiva Dabah won the gold medal.