தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?

மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல்  விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.

40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.

2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...

இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடக்குறிப்பு ஆசிரியர் சுயவிவரம் - மாதிரி -Bio-Data Lesson plan Bio- Data(2022-2023)

Lesson plan Bio- Data(2022-2023)

Std 2 to Std 5 - FIRST TERM GUIDE COLLECTIONS (PDF) - Tamil & English Medium

2nd STANDARD GUIDE  All Subject - Tamil Medium  - CLICK HERE


2nd STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



3rd STANDARD GUIDE  All Subject - Tamil Medium - CLICK HERE


3rd STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



4th STANDARD GUIDE All Subject - Tamil Medium  - CLICK HERE


4th STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



5th STANDARD GUIDE All Subject - Tamil Medium  - CLICK HERE


5th STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE


Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1 TO 5 SYLLABUS : TERM 1

1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு




1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 -10க்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் +2வுக்கு 20 தேதியும், +1க்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Spoken English Training Programme -

Spoken English Programme - District level training for Block Resource Persons on 16.06.2022 and 17.06.2022 Block Level Training of RPs on 23.06.2022 and 24.06.2022 reg



SCERT-PROCEEDINGS-PDF - Click here to download

SMC - அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

02.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20220614_193030

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைப்பெற்றது . இதன் தொடர்ச்சியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 ( சனிக்கிழமை ) அன்று மறுகட்டமைப்பை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது . மறுகட்டமைப்பு நடைபெறும் நாள் குறித்து பெற்றோர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட வேண்டும்

தொடக்கநிலை பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிகழ்வின்போது பார்வையாளர்கள் ( பள்ளிக் கல்வித்துறைமாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் ) நியமிக்கப்பட்டதைப்போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பார்வையாளர்களை நியமித்து இந்நிகழ்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட தலைமையாசிரியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

EMIS Flash - 14.06.2022

sir/madam                    

1. TC has been opened up for all classes. 

2. Way in which student list is shown has been modified for faster access.

3. No issues regarding data saving with TC. Isolated cases are dealt with on a case to case basis.

4. Exit survey for vocational students save issue to be fixed by 6.30 pm. 

5. More tweaks and updates are planned to be released tomorrow for further ease of use and efficiency.

Kindly note : NONE of these updates are related to server / server speed. Server is functioning efficiently and is only utilized upto 50% capacity even when maximum users are working on it.

We have had over 75000 TC generated today, most of it since 12 pm after the updates were rolled out. We hope the process is going smoothly now. You can inform the schools to continue to issue TC tomorrow. By state emis team

 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


IMG_20220614_204026


IMG_20220614_204041


2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரிடையாக 20.06.2022 - க்குள் 

http:/nationalawardstoteachers.education.gov.in 

என்ற இணையதள முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது . 2021 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும் . ( 2021 ஏப்ரல் 30 வரை ) அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , ஆசிரியர்கள் 20.06.2022 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழில் செய்தி வெளியிட்டு , குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தங்கள் அளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் , அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது . அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு.

The CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...

வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php

 

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அறிவுறுத்தல்

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 

ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி உருவாகக்கப்பட்டது பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் - தகவல் தெரிவித்தல் சார்ந்து.



IMG_20220613_185754


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர் . அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது . எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.05.2022 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி TNSED - Schools ( இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி ) ஒன்று உருவாகக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் இணைப்பில் தரப்பட்டுள்ளது . எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : செயலி விளக்க குறிப்பு

STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள்.pdf - Download Here