TNSED APP ல் Leave entry பதிவு செய்யும் முறைகள்..

 EMIS ல் Leave entry  பதிவு செய்யும் முறைகள்..


Yearly leaves


1) Casual leave 

12 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


2) Restricted holidays


3 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) compensatory leave.


இதில் 0 எனப் பதிவிட வேண்டும்..


ஆண் ஆசிரியர்களுக்கு..


Service leaves


1) Earned leave


பணிப்பதிவேட்டில் Calculation பக்கத்தில் மீதமுள்ள ஈட்டிய விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்


2) Unearn leave on medical certificate


அவரவர் பணிக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அத்தனை மருத்துவ விடுப்பு நாட்களில் நீங்கள் எடுத்த மருத்துவ போக, மீதமுள்ள மருத்துவ விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) EOL on loss of pay without medical certificate


மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால்,  360 எனக் குறிப்பிட வேண்டும்


4) EOL On loss of pay with medical certificate


மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையைக் கழித்து மீதமுள்ள நாட்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 180 எனக் குறிப்பிட வேண்டும்..


5)  Unearn leave on private affairs


இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களின் கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..


6) Special casual leave


இதில் 10 எனக்

 குறிப்பிட வேண்டும்..


7) Special disability leave


இதில் 0 எனக் குறிப்பிட வேண்டும்


பெண் ஆசிரியர்களுக்கு..


வரிசை எண் 1,2  இருபாலருக்கும் பொது..


3) Maternity leave


👉🏽ஒரு குழந்தை இருப்பவராக இருந்தால், மீதமுள்ள நாட்கள் 365 எனப் பதிவிட வேண்டும்.

👉🏽 இரு குழந்தைகள் இருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 என பதிவிட வேண்டும்.


👉🏽 குழந்தை இல்லை எனில் மீதமுள்ள நாட்கள் 730 எனப் பதிவிட வேண்டும்..


4) Leave for adoption of child


 270 என பதிவிட வேண்டும்..


5) abortion leave..


42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாட்களை கழித்துக் கொண்டு பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..


6)  Leave on still born child birth..


தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365  நாட்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும்.  இல்லை எனில்  0 எனப் பதிவிட வேண்டும்..


வரிசை எண் 7,8,9,10,11 அனைவருக்கும் பொது..


இறுதியாக,

 Submit செய்ய வேண்டும்.

 ஒரு முறை submit செய்து விட்டால் மாற்ற இயலாது..

 தலைமை ஆசிரியர்  log in ல் Edit செய்து கொள்ளலாம். தலைமை ஆசிரியர் edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் approve செய்ய வேண்டும் ..


Click here for latest Kalvi News 

20 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பொறுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

 அ " மற்றும் " ஆ " பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிலையத்தில் 13.02.2023 முதல் 10.03.2023 வரை பிரிவு அலுவலர்களுக்கான 251 வது அணியில் அடிப்படை பயிற்சி பெறவுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்க கல்வி ) பட்டியலானது பார்வை 2 ல் கண்டுள்ள இவ்வாணையரக செயல்முறைகளின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இவ்வகையில் " ஆ " பிரிவு அலுவலர்களுக்கான 251 வது அணியில் 13.02.2023 முதல் 10.03.2023 முடிய 4 வார கால அடிப்படை பயிற்சி பெறவுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்க கல்வி ) பயிற்சி முடிந்து மீளப் பணியேற்கும் வரை கீழ்காணும் பட்டியலில் உள்ள கீழ்காணும் பட்டியலில் உள்ள விவரப்படி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது .

DEOs Incharge Order.pdf - Download here


Click here for latest Kalvi News 

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

 


ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது,என்பதை ஏற்று TAMILNADU LEAVE RULE ன் படி செயல்பட கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

Earned Leave Deduction Clarifications.pdf - Download here...


Click here for latest Kalvi News 

இல்லம் தேடி கல்வி மதிப்பீட்டு அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு.

 இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை இன்று முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது


கொரோனா காலத்தில் பள்ளிகள் சரிவர இயங்காத காரணத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்கள் எளிதில் பாடத்தை கற்கும் வகையிலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு கொண்டு வந்தது.


இதன் மூலம் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி மையத்தின் மூலம் மாணவர்களுக்கு (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு) அடிப்படை கல்வியை கற்பித்து வந்தனர். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது


இந்த இல்லம் தேடி தள்ளி திட்டம் குறித்த இதுவரையிலான செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.


இந்த அறிக்கையில் இல்லம் தேடி கல்வி மூலம் எத்தகைய செயல்பாடு தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. அதன் மதிப்பீடு குறித்த முழு விவரம் அடங்கியிருக்கும். இதனை பொறுத்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது


Click here for latest Kalvi News 

Leave Management system Module version 1.0

அரசு பள்ளிகளில் தமிழக முதால்வர் படங்களை வைக்கலாமா? RTI பதில்

 அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் புகைப்படம் (Photo), அரசு பணத்தை செலவிடாமல் வைத்துக்கொள்ளலாம் - RTI.



பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், மன்றங்கள் மற்றும் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், மன்றங்கள் மற்றும் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


CoSE Instructions.pdf - Download here...


Click here for latest Kalvi News 

11th, 12th Std - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 

மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்  திருவிழாவை முன்னிட்டு


 24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது


 ஈடுசெய்யும் வேலை நாள் : 04.03.2023



Click here for latest Kalvi News 

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி ( TNSED ) அறிமுகம்

 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் சுமார் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இயங்கி  வருகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், தொழில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியாற்றும் போது, மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கும் முறை கொண்டு வரப்பட்டு கணினியில் பதிவு செய்யும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் இந்த கணினி மூலம்தான் செய்ய வேண்டும்.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக முறை(லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கணினியின் மூலம் அதை சரிபார்த்து ஆசிரியர் எடுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இந்த செயல்முறைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.

பின்னர் இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாகமுறையின்கீழ் கண்காணிக்கப்படும். ஆசிரியர்கள் விடுப்புக்கான இந்த புதிய செயலி(TN-SED Schools App) மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கின்ற விடுமுறை நாட்கள், எத்தனை மருத்துவ விடுப்பு நாட்கள் இருப்பு  இருக்கிறது, சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களே தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி வட்டார கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் பயன்படும். அவர்களும் இதன் மூலம் விடுப்புகளை பதிவு செய்யவும் விடுப்புக்கு ஒப்புதல் வழங்கவும் முடியும்.

Click here for latest Kalvi News 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023

 திருக்குறள் :

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

விளக்கம்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பழமொழி :

Beauty comes not by forcing. 

அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது? 

 மூன்று ஆண்டுகள் . 

 2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?

 ஷெல்லிதாசன்.

English words & meanings :

A very little ant - infant (குழந்தை)

ஆரோக்ய வாழ்வு :

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

          தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

NMMS Q

சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன? 

 விடை: மகள் 

பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்




தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

குட்டி குரங்கின் செயல்

மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். 

மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.

முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.

அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.

புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.

இன்றைய செய்திகள்

07.02.2023

* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.

* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.

* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.

 * Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.

*  The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.

 * ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.

*  Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.

 * Earthquake hits Turkey, Syria: Bodies unearthed; The death toll exceeded 1,500.

* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.

 * Women's South Asian Football: India-Bangladesh made Draw. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

 


ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் பிப்ரவரி 13 முதல் 17 வரை மல்லி தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இது குறித்த கட்டுரை , தேன்சிட்டு இதழிலும் வெளிவந்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியருடன் இணைந்து பொறுப்பு ஆசிரியரும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.


திரையிடலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டியவை :


CoSE - Movies Screening.pdf - Download here...


Click here for latest Kalvi News 

EMIS பதிவுகள் checklist

 EMIS பதிவுகள் checklist


🛑🛑 *EMIS பதிவுகள் checklist:*🛑🛑

1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( govt & aided)

2. *Library books* அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் ( govt only) - class tr. Login.

🖊️ *Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*

🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*. - TNSED app in class teacher login

3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app
4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு: *Academic score* - 6-9 மாணவர்களுக்கும் , *Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல் வேண்டும் - class tr. Login (EMIS website) - govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்*

5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம்.

6. *Teacher IFHRMS Number* : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.

7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.

8.*Career and Guidance Survey Form:* அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career gauindance தகவல்களை பூர்த்தி செய்தல்.

9. *Leave Balance Updation*: அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் E- profile icon ல் leave management icon ➡️My leave ➡️yearly leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.

10. *Textbook Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.

11.*Spoken English Module( Only for Trained teachers 4 and 5 std)* - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.

12. *PSTM Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.

13. *Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.

🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.