Ennum Ezhuthum - Class Time Table

Transfer News : மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

 மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயரிவுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

 ஆணை பெற்றுக்கொளள்லாம் மேற்காண் காலஅட்டவணைப்படி நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் ( Within District ) விண்ணப்பித்துள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் முன்னுரிமைப்படி ( Seniority wise ) அம்மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினை விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து மாறுதல் மேலும் அடுத்ததாக தங்களுக்குரிய சுழற்சி ( turn ) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம் . பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள ( Resultant Vacancy ) காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்a Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் ( One Cycle ) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.



பதவி உயர்வின்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குவதாக இருந்தது; நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், திருத்திய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த கவுன்சிலிங்கில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய பதவி நிலையிலேயே கவுன்சிலிங்கை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே பாணியில், உபரியாக உள்ள பணியாளர்களையும் இடமாறுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4 , 5 - ம் வகுப்புகளுக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டம் விரிவாக்கம்

 அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.


கணிதத்திறனுடன் பிழையின்றி எழுத படிப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வரும் கல்வியாண்டில் 4,5 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.


இதுதொடர்பாக அந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.


இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு (2023-2024) முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து பாடப் பொருள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பாடப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி மே 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் மாவட்ட அளவிலான பயிற்சி மே 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.


இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளும் வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து பணி விடுப்பு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ANNUAL EXAM MARK UPDATION IN EMIS WEBSITE

 

ANNUAL EXAM MARK UPDATION IN EMIS WEBSITE 

வகுப்பாசிரியர்கள் தங்கள் Individual login யை பயன்படுத்தி தற்போது  6 முதல் 9 வகுப்பு வரையுள்ள  மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் அதற்கான வழிமுறை

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Neet Exam -2023 Tentative key Answers-

Neet Exam -2023 Tentative key Answers-

 Key Answer-1 -Click here pdf 


Key Answer-2 -Click here pdf 

Key Answer -3 Click here pdf 

கனவு ஆசிரியர் - Level 2 க்கான Tamil Paper Syllabus and Model questions-pdf

 கனவு ஆசிரியர் Level 2 க்கான Tamil Paper Syllabus and Model questions



கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு உதவிபெறும் பள்ளிகள் - 01.08.2023-படி பணியாளர் நிர்ணயம் சார்ந்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரைகள்

 


அரசு உதவிபெறும் பள்ளிகள் - 01.08.2023-படி பணியாளர் நிர்ணயம் சார்ந்த அறிவுரைகள் pdf. - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கக்கல்வி துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம் பெறாதவை:

 தொடக்கக்கல்வி துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம் பெறாதவை:


1. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்).


2. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) 


5. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


6. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - Term 1 - Maths(E/M) - Teachers Hand Book 2023-2024

Ennum Ezhuthum - Term 1 - Maths(T/M) - Teachers Hand Book 2023-2024 PDF

Ennum Ezhuthum - Term 1 - English - Teachers Hand Book 2023-2024

எண்ணும் எழுத்தும் - முதல் பருவம் - தமிழ் - ஆசிரியர் கையேடு PDF

எண்ணும் எழுத்தும் - முதல் பருவம்  - தமிழ் - ஆசிரியர் கையேடு PDF




குறைந்த செலவில் பயிற்றுவிக்கப்படும் சிறந்த படிப்புகள்!!

 லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி, உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.


அறிவியல் படிப்புகள் :


B.Sc ( physics) : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல் M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.


B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும். CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.


B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன. வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.


IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics) படிப்பதற்கு JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics) படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும். வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு phd படிக்கலாம். phd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.


M.Sc (physics, Chemistry, Mathematics) முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம். இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம், ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (physics, chemistry) படிக்கலாம், கல்வி துறை (Teaching) , ஆராய்ச்சி துறை (Research) , தகவல் தொழில் நுட்பம் (IT) , உற்பத்தி துறை (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.


கலை படிப்புகள் :


B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி துறையை தவிர்க்கவும்). M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.


B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.


B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் : குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள். மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.


B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை. B.Com படித்து CA (charted accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.


மேலாண்மை படிப்பு :


B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill) இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.


தகவல் தொழில் நுட்ப துறை (IT) :


மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை. B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து, Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programming language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும். கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும்.


தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும். MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.


குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :


தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான். இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான். இதற்க்கு NEET தேர்வில் குறைந்தது 430 மார்க் எடுக்க வேண்டும் (அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 430 மதிப்பெண் எடுக்க வேண்டும்).


படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான், நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.


எனவே பெற்றோர்களே! மாணவர்களே!, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கவும்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

lick here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi New

தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் - மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்து உத்தரவு.

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டமை தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ .69,14,16,000 / பெறப்பட்டமை நிதிஒதுக்கீடு மாவட்ட வாரியாக பகிர்ந்தளித்தல் - ஆணை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!





Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 2023 - திருத்திய கால அட்டவணை வெளியீடு

 

2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


 தற்போது இணைப்பில் காணும் கலம் 6 ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு மே 2023  - திருத்திய கால அட்டவணை 

Teachers General Transfer Counselling - Revised Schedule - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4th, 5th EE Training - எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.

 

4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு  எண்ணும் எழுத்தும் பயிற்சி அளித்தல் ,  பணி விடுவித்தல் சார்பு - SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:

 Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:


1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.


2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.


3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன் படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.


4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.


5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.


6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.


அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறைவாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோவை, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.


பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மே 11-ம் தேதி முதல் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 அரசு திரைப்படக் கல்லூரியில் சேர மே 11 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னைதரமணியில் இயங்கி வருகிறது. இங்கு இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


இப்படிப்புகளில் 2023-24-ம்கல்வி ஆண்டில் சேர மாணவ,மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை பின்வரும் இணையதளங்களில் மே 11 முதல் 31 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


www.tn.gov.in,


www.dipr.tn.gov.in


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ``முதல்வர், அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை600113'' என்ற முகவரிக்கு தபால் மூலமாக ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

 

Terminal Class க்கு TC தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:

1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students details ல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.


2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.


3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், 

மாணவரின் பெற்றோர் தற்போது பயன் படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.


4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.


5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.


6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.


TC- Issue pdf file -Click here


TC- Issue demo Video - Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News