Festival Advance Form - Download pdf

 

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம்...


Festival Advance Form - pdf👇

Download 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு.

 

1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு.


* 6-8 reopen on 03.10.2023

* 1-5 school reopen on 09.10.2023

Term 1 leave and term 2 reopen Proceedings 👇

Download 

Click here for latest Kalvi News 


01.08.2023 அன்றைய நிலவரப்படி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பட்டியல் & CEO Proceedings

 IMG_20230926_075405

தமிழ்நாடு இடைநிலைக்கல்விப்பணி -01.08.2023 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியருடன் உபரி பணியிடத்தினை உறுதிபடுத்துதல் - தொடர்பாக . நிர்ணயம் செய்யப்பட்டமை..

Thanjavur CEO Proceedings - Download here

Surplus Teachers List - Download here


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம் செய்து உத்தரவு.

 



எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம்.


1 முதல் 3 ஆம் வகுப்பு - 03.10.2023 மற்றும் 04.10.2023 


4 மற்றும் 5 ஆம் வகுப்பு - 05.10.2023 மற்றும் 06.10.2023

E.E. Revised Training Proceedings to DIETs 

Download 


Click here for latest Kalvi News 

6,7,8 -ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.

 முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு  கணிதம்


🖨️வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.


6  ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 3 பக்கம்


7 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4  பக்கம்...


8ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம் என்பதால் layout 2-up select செய்து 2-sided printing யில் short edge தேர்வு செய்து print கொடுக்கவும்..


மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள image-ஐ காணவும்...


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வரைபடத்தாள் (graph sheet)  கடைகளில்  வாங்கி கொள்ளவும்.....




Click here for latest Kalvi News 

SMC - அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு

 அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு ....

 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்க. கல்வித் துறையின் சார்பில் அழைப்பு மையம் ( Call Centre ) எண் 044-28201600 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று சரியான விவரங்களை வழங்கவும்.






Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்து திட்டத்தை பள்ளிகளில் சர்வே செய்து மாற்றம் செய்ய முடிவு!!!

 

.com/


எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிய, 132 பள்ளிகளில் சர்வே நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், புதிய பாடத்திட்டம் உருவாக்கி சொல்லி தரப்படுகிறது. இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சர்வே மேற்கொள்ளப்படுகிறது.


வட்டார வாரியாக பள்ளிகளை, 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் தலைமையில், பி.எட்., மாணவர்கள் ஈடுபடுத்தி சர்வே எடுக்கப்படுகிறது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 132 பள்ளிகளில், சர்வே எடுக்கும் பணிகள் நடக்கின்றன. வரும் 14ம் தேதி வரை, சர்வே தகவல்கள், செயலியில் பதிவேற்றப்படும். இத்தகவல்கள் அடிப்படையில், இரண்டாம் பருவ கற்பித்தல் முறைகள் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 2nd Term New Training Schedule

 எண்ணும் எழுத்தும் -2023-24 வகுப்பு 1,2 & 3 - இரண்டாம் பருவம் பயிற்சி கால அட்டவணை - ( 03.10.2023 , 04.10.2023 ) 




Click here for latest Kalvi News 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இறகுப் பந்து போட்டி

 

IMG-20230923-WA0011

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இறகுப் பந்து போட்டி நடைபெறும் நாள் 01.10.2023


🏸பங்குபெறும் ஆசிரியர்கள்  பதிவு செய்ய கடைசி நாள் 29.09.2023


🏸விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 👇👇👇👇👇👇👇👇

.https://forms.gle/dZeg9u7DimbjLuks6

 

தொடர்பு கொள்ள:

1.Arunkumar - 9786884566

2.Saravanan - 9597063944

3.Niganandhan - 9894391864

4.Jayaselan - 7010007298

 

Location👇

  https://maps.app.goo.gl/5eB9ihiyEGWMpuvj7 

Click here for latest Kalvi News 

பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க " ஊராட்சி மணி " திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு

 IMG_20230923_084907


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.

Proceeding Letter👇

Click here


Click here for latest Kalvi News 

இடைநின்ற மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘ஆபரேஷன் ரீபூட்’ - செயல்படுவது எப்படி?

 

1126826

அனைத்து செல்வங்களையும் விட மேன்மையானது கல்வி. ஏனைய செல்வங்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகலாம். ஆனால், கல்விச் செல்வம் அழிவில்லாத செல்வமாக இருக்கிறது. கல்வி கற்பதற்கு வயது தடையில்லை. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் பல்வேறு காரணங்களால் சிலர் அதை தவறவிடுகின்றனர்.


குறிப்பாக, 6 வயது முதல் 14 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். குடும்ப சூழல், வறுமை, கண்காணிப்பு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் சிறார்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் உரிய வயதில் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், பள்ளியில் இருந்து இடைநின்று விடுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இடைநின்றவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தவறான நபர்களுடன் நட்பு ஏற்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் அளவுக்கு வாழ்க்கையில் திசைமாறிச் சென்று விடுகின்றனர். இவ்வாறு சிறார் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கவும், இடைநின்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்வியறிவை புகுத்துவதற்காகவும் கோவை மாநகர காவல்துறையினர் சார்பில், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.


இது தொடர்பாக கோவை மாநகர காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் ரீ பூட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படித்து இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது இத்திட்டமாகும்.


‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் உள்ள காவலர்கள், பெண்கள், சிறார்களுக்கான உதவி மைய காவலர்கள், குழந்தைகள் நலப்பிரிவு காவலர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து இடைநின்ற மாணவ, மாணவிகளின் விவரங்களை பெறுவர்.


பின்னர், அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரை சந்தித்து, எந்த காரணத்தால் பள்ளிப் படிப்பை கைவிட்டு அவர்கள் விலக வேண்டிய சூழல் வந்தது என விசாரிப்பர். தொடர்ந்து, கல்வி கற்பதால் கிடைக்கும் பலன்கள், கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைப்பர். அதனடிப்படையில் இடைநின்ற மாணவ, மாணவிகள் பலர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்’’ என்றனர்.


மேலும் அவர்கள் கூறும்போது,‘‘கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் என 286 பள்ளிகளில்மொத்தம் 894 பேர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி இடைநின்றது தெரியவந்தது. இவர்களில் 226 சிறார்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினோம். அதனடிப்படையில், நடப்புக் கல்வியாண்டில் 83 மாணவிகள், 90 மாணவர்கள் என 173 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் உள்ளனர். இன்னும் மீதமுள்ள 30-க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் மீண்டும் இடைநின்று விடக்கூடாது என்பதற்காக கண்காணித்து வருகிறோம்’’என்றனர்.


காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது,‘‘சிறார்களுக்கு கல்வி அவசியமாகும். பொதுவாக தவறு செய்யும் சிறார்களின் பின்புலத்தை பார்க்கும்போது, பெற்றோர் கண்காணிப்பு இல்லாதது, பள்ளிகளில் இருந்து இடைநின்றது போன்ற காரணங்கள் தெரியவந்தது. பெற்றோர் இல்லாத சிறார்கள், மாற்றுத்திறனாளி சிறார்கள் பட்டியல் காவல்துறையிடம் உள்ளது.


பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது, தவறான எண்ணங்களைக் கொண்ட நபர்களுடன் சேருவது தவிர்க்கப்படும். காவலர்கள் மூலம் இப்பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநின்ற அனைவரையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Click here for latest Kalvi News 

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Mentor Training Proceedings & Hms List👇

Click here


Click here for latest Kalvi News 

30 வருடம் பணி நிறைவு - Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

 

தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் (Management Service ) பணியாற்றிய பணி காலத்தையும் சேர்த்து ஒரே பதவியில் 30 வருடம் பணி நிறைவு - Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

Super Grade instructions

Click here

Click here for latest Kalvi News 

மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!

 

புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27-க்கு பதில் செப்.28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 


மிலாது நபி புதுச்சேரியில் செப்.28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினமே அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே செப்.27-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Click here for latest Kalvi News 

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - NSS Camp Proceedings - Download here


Click here for latest Kalvi News 

மாவட்ட / மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் (Science Seminar) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 மாவட்ட / மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் (Science Seminar) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Science Seminar Proceedings - Download here


Click here for latest Kalvi News 

அனைத்து பள்ளிகளும் பனை விதை சேகரிக்க வேண்டும் - CEO உத்தரவு.

 



கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு அருகாமையில் பனைவிதை நடும் பொருட்டு பனை விதை சேகரிக்க அறிவுறுத்தப்படுகிறது. பனை விதை சேகரிப்புக்கு பள்ளியின் சுற்றுச்சூழல் அல்லது தேசிய பசுமைப்படை , NSS , JRC , SCOUT , NCC போன்ற மன்றங்களின் துணையோடு பாதுகாப்பான முறையில் .10.2023 க்குள் விதையினை சேகரித்து பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Click here for latest Kalvi News 

அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்களை இணைக்க SPD உத்தரவு

IMG_20230922_100204

அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் SMC தீர்மானங்களை இணைத்தல் மற்றும் SMC உறுப்பினர்கள் கலந்து  கொள்ளுதல் சார்ந்த SPD செயல்முறைகள்

Proceedings Grama Sabha 02.10.2023

Click here


Click here for latest Kalvi News 

PRIME MINISTER'S SCHOLARSHIP SCHEME FOR ACADEMIC YEAR 2023-24

 .com/

Applications are invited from eligible wards / widows of Ex - servicemen and Ex - Indian Coast Guard personnel pursuing Professional / Technical Degree Courses , as per list of approved courses available at Kendriya Sainik Board website.

The scheme will be applicable only to those students who have joined the Professional / Technical Courses in the Academic Year 2023-24.

Get More Details 👇👇👇

Click here


Click here for latest Kalvi News 

தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறையில் எவ்வித தயக்கமும் இன்றி தேசியக் கல்விக் கொள்கையினை SCERT- இயக்ககம் வழியாக அமல்படுத்திவிட்டார்கள் - AIFETO அறிக்கை

 IMG_20230921_122451

தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறையில் எவ்வித தயக்கமும் இன்றி தேசியக் கல்விக் கொள்கையினை SCERT- இயக்ககம் வழியாக அமல்படுத்திவிட்டார்கள் !

Common question Aifeto Arikkai 

Click here

Click here for latest Kalvi News 

ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.

 .com/

பொதுத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 31-வது இடம், 30-வது இடம் என கடைசி இடங்களிலேயே நீடித்து வருவது கவலையளிக்க கூடியதாக உள்ளது.


இதற்கிடையே, கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துப் பாடப்பிரிவு ஆசிரியர்களிடம் தேர்ச்சி விகிதம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த வகையில் கடந்த வாரத்தில் குறிஞ்சிப்பாடி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுடன் தேர்ச்சி விகித ஆய்வுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.


அப்போது, “நீங்கள் எந்தக் காரணமும் சொல்லக் கூடாது, ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். தலைமையாசிரியரும் தேர்ச்சி விகிதத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். பின் தங்கிய மாவட்டம், கரோனா தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட தொய்வு இப்போது வரையிலும் தொடர்கிறது போன்ற காரணங்களைக் கூறி, தேர்ச்சி விகித குறைவை நியாயப்படுத்தக் கூடாது” என கறாராக கூறிச் சென்றிருக்கிறார்.


கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 246 அரசுப் பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 153 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 445 பள்ளிகளைச் சேர்ந்த 34,184 மாணவ, மாணவியர் கடந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில், 30,248 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.49 என்பதால் மாநில அளவில் 33-வது இடத்துக்கு தள்ளப்பட்டது கடலூர் மாவட்டம்.


அதேபோன்று பிளஸ் 2 பொதுத் தேர்வில் 117 அரசுப் பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள், 98 தனியார் பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகளில் இருந்து 30,270 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 27,859 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் 92.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27 இடத்தை பிடித்தனர்.


மாநில அளவில் பொதுத்தேர்வு முடிவுகளின்படி முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களுக்கும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அதாவது, முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவு. அதே நேரத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் விகிதாச்சார அடிப்படையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பின்தங்கி விடுகின்றன. இது பலருக்கு புரிவதில்லை என்கின்றனர் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள்.



மேலும் ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முற்படும் கடலூர் ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும், அவர்கள் எந்த மாதிரியான சூழலில் இருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


‘தலைமையாசிரியர் முதல் உடற்கல்வி ஆசிரியர் வரை அனைவரின் கைகளையும் பின்நோக்கி கட்டி விட்டு, மாணவர்களை படிக்க வையுங்கள்’ என்று கூறும் சூழல் இங்குள்ளது. ஊரகப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களை படிக்கச் சொல்லி சற்று கடுமை காட்டினால் ஆசிரியர்களின் மீது நடவடிக்கை பாய்கிறது, இது எந்த விதத்தில் நியாயம்?


இன்றைய தலைமுறையினர் குறித்து ஆட்சியருக்கு நாங்கள் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு மாணவரையும் அடிக்க மட்டுமல்ல; கண்டிக்கவும் முடியவில்லை. மாணவர்களின் ‘ஹீரோயிஸ அட்டூழியங்கள்’ தாங்க முடியவில்லை. கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்குள் வரும் மாணவர்களில் சிலர் அரசியல், சமூக அமைப்புகளைச் சார்ந்து இயங்குகின்றனர்.


இவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டிய நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர்களை ஒருநிலைக்கு கொண்டு வர வேண்டும். அதோடு கல்வி கற்றலை முன் நிறுத்தினால் இதில் எதிர்பார்க்கும் பலன் ஓரளவு கிடைக்கும். அதை விடுத்து. ஆசிரியர்களை நெருக்கடியில் தள்ளுவதால் எந்தப் பயனும் இல்லை” என்கின்றனர்.


இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு பள்ளியில் பாட ஆசிரியர் ஓய்வு பெற்றால் அவருக்கு மாற்றாக ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது கிடையாது. இதையும் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


“ஆட்சியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கும் அதே நேரத்தில், எங்கள் தரப்பில் நிலவுகின்ற, ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிக்கான சுற்றுச்சுவர், கழிப்பறைகள் பராமரிப்பு, மாணவர்களைக் கட்டுப்படுத்துவற்கான அதிகாரம் போன்றவைகளை அவர் பெற்றுத்தர முன்வர வேண்டும்” என்கின்றனர் ஆசிரியர்கள்,


ஒவ்வொரு பள்ளியிலும் இயங்கும் பெற்றோர் ஆசிரிரியர் கழகம், கல்வி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் பொறுப்புக்குள்ளாக்கி அவர்களையும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதில் ஈடுபடச் செய்து, இலக்கை நிர்ணயித்தால் ஆட்சியரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புண்டு என்கின்றனர் விவரமறிந்த ஆசிரியர்கள்


Click here for latest Kalvi News