அனைத்து மாணவர்களுக்கும் Aadhaar போலவே "APAAR Card" - முழு விவரம்

 ஒரே நாடு ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு ஒரே ஐ.டி. என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கான நிரந்தர அடையாள எண் உருவாக்கப்பட உள்ளது. 

ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே நாடு - ஒரே ரேஷன்; ஒரே நாடு - தேர்தல் உள்ளிட்டவற்றின் வரிசையில் மத்திய அரசு, ஒரே நாடு - ஒரே அடையாள எண் என்னும் புதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.  இது தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (Automated Permanent Academic Account Registry  - APAAR) என்று அழைக்கப்பட உள்ளது. சுருக்கமாக அபார் என்று அழைக்கப்படுகிறது. எனினும் இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அபார் ஐடி: என்ன செய்யும்?

ஆதார் அட்டையைப் போலவே ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அபார் ஐ.டி. உருவாக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வி வளர்ச்சி, சாதனைகள் மற்றும் பிற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். 

இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களுக்கு, ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு அபார் ஐடி உருவாக்கப்பட வேண்டும் என்றும் யுடிஐஎஸ்இ (UDISE)-ல் ரத்த வகை, உயரம், எடை ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தனிப்பட்ட அடையாள எண்

ஒரு மாணவருக்கு அவரின் மழலையர் கல்வியில் தொடங்கி உயர் கல்வி வரை, அபார் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் பயன்படுத்தப்படும். வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் செயல்படும். இதன் மூலம் தேர்வு முடிவுகள், கற்பித்தல் விளைவுகள், படிப்பு தவிர்த்து பிற கலை செயல்பாடுகள், சாதனைகள், ஒலிம்பியாட் தேர்வு சாதனைகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாணவர் மாறும்போது, புதிய சேர்க்கையின்போது ஏற்படும் சிரமங்கள் வெகுவாகக் குறையும். 

பாதுகாப்பு காரணங்கள் 

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் எக்காரணம் கொண்டும், பொது வெளியில் பகிரப்படாது என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதை உருவாக்க மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோர் தேவைப்படும்போது விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அபார் அடையாள எண்ணில் இருக்கும் தகவல்கள், தேவைப்படும்போது மட்டும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள், கல்வி தளத்தில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். 

ஆசிரியர்கள் எதிர்ப்பு

எனினும் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கெனவே உள்ள கல்வி அல்லாத ஆதார் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தாண்டி, தற்போது அபார் பணியையும் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால், கற்பித்தல் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SEAS TRAINING INTIMATION - CEO Proceedings

IMG_20231018_153229

காஞ்சிபுரம் மாவட்டம் 

 மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வினை நடத்துவதற்கு ஏதுவாக கள ஆய்வாளர்களுக்கும் , வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல்- கள ஆய்வாளர்கள் ( கல்லூரி மாணவர்கள் ) கலந்து கொள்ளுதல் - தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

SEAS TRAINING INTIMATION - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC Training - quiz programme & feed back link

 IMG_20231017_153938

இன்று நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் Qiuz programme இல் பங்கேற்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்களின் பதில்களை பதிவேற்றம் செய்யலாம்.

quiz programme & feed back link

👇👇👇👇👇

#Quiz link

👇👇👇👇👇👇👇

Click here to view the Quiz link

# Feed back

👇👇👇👇👇👇

Click here to view the feedback link

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6-8 STD CRC TRAINING MATERIALS PPT & PDF

 IMG_20231016_104320

6-8 STD CRC TRAINING MATERIALS PPT & PDF

 TPD 3 (6 to 8) Agenda Guidelines - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE - FA(b) & SA Term-2 schedule class 1 to 3

 .com/

1 முதல் 3 வகுப்பு - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை.

FA(b) & SA Term-2 schedule class 1 to 3 - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

FA (b) & SA Term-2 Schedule class 4&5

 .com/

4 , 5 வகுப்பு - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை

FA (b) & SA Term-2 Schedule class 4&5 - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Learning Outcome / Competency Based Test 2023 For Classes : 6-9 Time Table

 Screenshot_2023-10-13-21-32-36-01_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

Learning Outcome / Competency Based Test - October - 2023.

அக்டோபர் மாத - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! 

Kindly find the Schedule and Proceedings for Learning Outcome/ Competency Based Test -02 for class 6 to class 9. It will starts on October 17th and Ends on October 20th.

Question paper will be uploaded in the portal on previous day afternoon 2.00 pm ans it will be available till next day 1.00 pm.

Click here to download proceedings

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை

IMG_20231014_215445

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசுஉதவிபெறும் / சென்னைபள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோஇந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு நடைபெறவுள்ளது.

 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் அலகுத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3rd Unit Test Time Table - Download here...

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6,7,8,9,10th Std - October 3rd Week Notes of Lessons

.com/

6,7,8,9,10th Std - October 3rd Week Notes of Lessons 

 English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X standards (16-10-2023 to 20-10-2023) the October the 3rd week for Government of Tamil Nadu State Board School Teachers.

6th Std Notes of Lesson - Download here

7th Std Notes of Lesson - Download here

8th Std Notes of Lesson - Download here

9th Std Notes of Lesson - Download here

Prepared by

Sethuraman Ramalingam, B.T., Asst, (Eng.), M.A., B.Ed., C.E.L.T, (M.S.W.),

Tamil Nadu-IX Standard English Textbook Committee Author,

Govt.,Hr.,Sec,School.,

Paranam,

Sendurai Edn dt,

Ariyalur (DT)- 621804.

10th Std Notes of Lesson - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு...

IMG_20231015_141851

3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு...

Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE - 1 To 3rd English Teachers Hand Book ( Tamil Translation )

 Screenshot_2023-10-13-08-18-42-86_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

எண்ணும் எழுத்தும்- Class- 1 to 3- English THB (தமிழாக்கம் )- pdf

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNSED - Parents Mobile App - New Version 0.0.19 Updated

 IMG_20231012_213209

TNSED- PARENTS - MOBILE APP-UPDATE

version - 0.0.19 , Date-12.10.2023

Whats New

RP module added. Bug fixing & performance improvements.

Direct Link

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆசிரியர் பணியிடங்களை TRB மூலம் 6 மாதத்தில் நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

.com/

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 பணியிடங்களில், 243 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 மாதத்தில் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சிக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி, சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு என தனி விதிகள் இல்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறை விதிகளே பின்பற்றப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

எனினும் கடந்த 10 ஆண்டுகளாக நேரடி தேர்வு நடத்தவில்லை. தற்போது காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களான 243 பணியிடங்களை நிரப்பக் கோரி இரு வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுத வேண்டும்.

மாநகராட்சியின் கடிதம் கிடைத்ததும் போர்க்கால அடிப்படையில் ஆறு மாதங்களில் தேர்வு நடவடிக்கைகளை முடித்து, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, தேர்வானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்ைன மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடமாற்றம் மூலம் நியமிக்கப்படும் 79 ஆசிரியர்களும், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டதும், தங்கள் சொந்த அலகுக்கு திரும்ப வேண்டும்.

பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டிய 50 சதவீத ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து மூன்று மாதங்களில் வெளியிட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம்

 1138948

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அருகே உள்ள கல்லூரிகளுக்கு கடந்தாண்டு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த அனுபவம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைய வழிவகை செய்தது.

தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை அக்டோபர் 25 முதல்28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது நிர்வாகக் காரணங்களால் இந்த பயணம் நவம்பர் 6 முதல் 9-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள நூலகம், ஆய்வகங்களை பார்வையிடுவார்கள். மேலும், கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள்குறித்து விளக்கம் தரப்படும்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TTSE - Tamil Talent Search Exam - 15.10.2023 - Question Papers - Answer Keys - PDF

மிழ் திறனறித் தேர்வுக்கான அசல் வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள்.

Prepared by
Mr.  Pothu Raja

TTSE - Tamil Talent Search Exam - 15.10.2023 - Question Papers - Answer Keys - PDF - Download here

🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

 1200-675-19735430-thumbnail-16x9-dpi

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக் கூடாது உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த நன்னெறிகளை, அவ்வப்போது இறைவணக்கக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், புகையிலை மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும். சுகாதாரமான பொருட்கள் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். எரிபாெருட்கள், தேவையற்ற பொருட்கள் குப்பையாக வைத்திருக்கக் கூடாது. சமையலர், சமையல் உதவியாளர் தூய்மையான முறையில் சமையல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக பராமரிக்கப்படுவதுடன், உணவு அருந்தும்போது பறவைகள், பிற விலங்கினங்கள் உணவுப் பொருட்கள், உணவு அருந்தும் இடத்திற்கு அருகில் அணுகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும்போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் வரிசையில் உணவைப் பெற்று அருந்துவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் எக்காரணம் கொண்டும் மாணவர்கள் செல்லாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும்.

 மாணவர்களிடம் உணவு அருந்தும் முன்பாக கைகள், உணவு அருந்தும் தட்டு, டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த அறிவுரைகள் கூற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு முடிவுகள் சார்ந்த அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது - TN EE MISSION

முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு முடிவுகள் சார்ந்த அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டது.  தொகுத்தறி மதிப்பீடு CCE மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர் தரநிலை அறிக்கையை செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 மதிப்பெண் பட்டியலில் தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் காலியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆன்லைனில் மேற்கொண்ட தொகுத்தறி மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். 

வளரறி மதிப்பீடு அ விற்கான மதிப்பெண்கள் செயலியில் பதிவேற்றம் செய்திருக்கும் பட்சத்தில் அது மதிப்பெண் பட்டியலில் பிரதிபலித்திருக்கும். ஒரு வேளை மதிப்பெண்களை பதிவு செய்யாமல் இருந்தால் நீங்கள் மதிப்பெண் பட்டியலில் கைப்பட எழுதி மொத்த மதிப்பெண்கள் தரநிலை ஆகியவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். 

மாணவர் தரநிலை அறிக்கையில் பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலைப் புள்ளிகளை வழங்கி அதற்கேற்ற தர நிலையையும் பதிவு செய்து கொள்ளலாம் .நன்றி.

TN EE MISSION

🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 Local%20holiday

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கான ஊதியம் விபரம்..

 காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கான ஊதியம் விபரம்...

🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE - 1 To 3rd English Teachers Hand Book ( Tamil Translation )

Screenshot_2023-10-13-08-18-42-86_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

எண்ணும் எழுத்தும்- Class- 1 to 3- English THB (தமிழாக்கம் )- pdf

Download here

🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE Students Report Card Download - Easy Method for All Students

 EE STUDENTS REPORT CARD DOWNLOAD EASY METHOD FOR ALL STUDENTS..Video👇