தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!

 .com/

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


வழக்கமாக தனக்கான வருமான வரியை ஊழியரே தோராயமாக முடிவு செய்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரிடம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாது டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்குமேல் வரி வரும் சூழலில் தனியாக Online / வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர்.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வருமான வரியை வசூலித்துக் கட்டவும், இறுதி நேரத்தில் ஊழியர் தனியாக Online / வங்கி செலான் மூலம் கட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென கண்டிப்பான முறையில் வருமானவரித்துறை கருவூலகங்களை அறிவுறுத்தி வருகிறது. இதைப் பின்பற்றாத ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.


இதன்படி, வரும் ஆண்டிற்கான ஆண்டு மொத்த ஊதியத்தை வைத்து ஊழியருக்கான வருமான வரி எவ்வளவு என்பதைத் தோராயமாக IFHRMS (களஞ்சியம்) மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திரத் தவணையை மதிப்பிட்டு மாதந்தோறும் தானாகவே பிடித்தம் செய்துவிடும். ஊதிய உயர்வு & அகவிலைப்படி உயர்வின் போதும் அதற்கேற்ப வரியில் மாற்றம் ஏற்படும்.


அதன் முதல்படியாக, ஊழியர்கள் தாங்கள் எம்முறையில் (OLD / NEW) வரிக் கணக்கீடு செய்ய உள்ளனர் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குத் தெரியப்படுத்தி உரிய தரவுகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் பதிவேற்ற வேண்டும் என்று கருவூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும். 


டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதும், இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.


வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.


இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.


நினைவில் கொள்க.


Form 16Aல் மாதந்தோறும் & காலாண்டு வாரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தொடர்பான விபரங்கள் இருக்கும்.


Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.


நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 27.02.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்


குறள்:365


அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.


விளக்கம்:


ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.


பழமொழி :

No smoke with out fire


நெருப்பில்லாமல் புகையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது. --கலீல் ஜிப்ரான்


பொது அறிவு : 


1. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?


விடை: 22 மொழிகள்


2.உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 


நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்)


English words & meanings :


 Holster (n)- a holder made of leather for carrying hand gun கைத்துப்பாக்கி வைக்கப் பயன்படும் ஒரு தோல் உறை

Hysterical (adj) - affected by wildly uncontrolled emotion கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சியால் பாதிக்கப்படுதல்


ஆரோக்ய வாழ்வு : 


கொடி பசலை கீரை: கொடி பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால்  குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.


நீதிக்கதை


 கற்றது எவ்வளவு?


பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிற கங்கை நதியில் ஒரு படகில் ஓடக்காரனும் சில பயணிகளும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளுள், பண்டிதர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் தான் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்ற கர்வம் அதிகம்  தோன்ற அதில் பயணித்தார். அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார்.


"ஏய் ஓடக்காரா, இப்படி ஒன்றும் தெரியாமல் நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா?'' என்று ஏளனமாக கேட்டார். "ஐயா,சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?" என்றான் ஓடக்காரன் அடக்கமாக.''ஓஹோ! அப்படியா? அப்படியானால் உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாகிப் போச்சே" என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார்.

"சரி ! அது போகட்டும்! இந்த உலகம் போற்றும் ஒண்ணே முக்கால் அடி திருக்குறளையாவது நீ படித்திருக்கிறாயா?" எனக் கேட்டார்.


அதற்கு ஓடக்காரன் "அதை நான் தொட்டது கூட கிடையாதே,சாமி" என்று வெட்கத்துடன் சொன்னான்.


"தண்டமே ! தண்டமே! இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே!, அது போகட்டும்


பாகவதமாவது வாசித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.


சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான்.


"போச்சு! அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில்  முக்கால்வாசி நஷ்டமாகி விட்டதே!. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என்று பண்டிதர் தன் வருத்தத்தைச் சொல்லி முடித்தார்.


அப்பொழுது கரை புரளும் வெள்ளம் வந்தது. அலை ஒன்றோடொன்று மோதி படகு கவிழ்ந்து விடும் என்ற நிலை தெரிந்தது. நீந்தத் தெரிந்தவர்கள் யாவரும் நதியில் வேகமாகக் குதித்து நீந்திக் கரையேறினார்கள்.


ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். “சாமி! தண்ணீரில் குதிங்க சாமி. இல்லேன்னா படகு கவிழ்ந்து மூழ்கிடுவீங்க." என்று ஓடக்காரன் எச்சரித்தான். "ஐயோ! என்னப்பா சொல்கிறாய்?, எனக்கு நீச்சல் தெரியாதே அப்பா!" என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், "சாமி. எனக்குக் கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவுமே தெரியாது. ஆனால் நீச்சல் நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப் போறீங்களே! மிகவும் வருத்தமா இருக்கு" என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.


எல்லாம் அறிந்தவர் என்பது உலகில் இல்லை. "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு".


இன்றைய செய்திகள் - 27.02.2024


*மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


*சிக்கிமின் முதல் ரயில் நிலையம் : அடிக்கல் நாட்டினார் மோடி.


*"ஜி" மெயிலுக்கு போட்டியாக "எக்ஸ்" மெயில்: எலான் மஸ்க் திட்டம்.

*இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


*ரஞ்சித் கோப்பை காலிறுதியில் மத்திய பிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தியது.


Today's Headlines


* CM Stalin inaugurated kalaingar 's memorial at Marina.


 *Sikkim's first railway station: Modi laid the foundation stone.


 *"X" Mail will compete with "G" Mail: Elon Musk's plan.


 *India won the 4th Test against England by 5 wickets.


 *Madhya Pradesh beat Andhra Pradesh by 4 runs in Ranjith Trophy quarter finals.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1- 5th Std | CULTURAL & SPORT WEEK 2023-24 Google drive link mobile phone ல் create செய்து BRC-க்கு அனுப்புவது எப்படி தெளிவான விளக்கம்!!

 1- 5th Std | CULTURAL & SPORT WEEK 2023-24 Google drive link mobile  phone ல் create செய்து BRC-க்கு அனுப்புவது எப்படி தெளிவான விளக்கம்👇👇👇

https://youtu.be/wCM8-QQABII


பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் 2023-24 1முதல் 5 வகுப்பு  வரை 


CULTURAL & SPORT WEEK 27.02.2024 முதல்29.02.2024 வரை அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பண்பாடு & விளையாட்டு வாரம் கொண்டாடப்பட இருக்கிறது....


போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் புகைப்படம்/வீடியோக்களை Google drive link creation -செய்து BRC-க்கு அனுப்புவது எப்படி என்பதை குறித்த தெளிவான வீடியோ இணைப்பு.👇👇👇



https://youtu.be/wCM8-QQABII


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN MAWS - EEE Assistant Engineer - Study Materials

 

IMG_20240226_174437

TN MAWS - EEE Assistant Engineer - Study Materials - Srimaan Coaching centre - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பு!

 


500x300_918544-6

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

10th Std

11th Std 1st Set

11th Std 2st Set

12th Std 1st Set

12th Std 2st Set

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SC/SCA/SCC (கிருத்துவ)/ST மாணவ- மாணவிகள் மத்திய-மாநில அரசின் உயர்கல்வி உதவித்தொகை (Scholaraship) பெற இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகள்!

 Screenshot_2024_0225_192933


SC/SCA/SCC (கிருத்துவ)/ST மாணவ- மாணவிகள் மத்திய-மாநில அரசின் உயர்கல்வி உதவித்தொகை (Scholaraship) பெற இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகள்🙏

கீழ்க்கண்ட இணையதள இணைப்பை சொடுக்கி தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


 👉 மாணாக்கர் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட கைபேசி (Mobile phone) எண்ணில் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெற்று இணையதளத்திற்கு உள்ளே நுழைய வேண்டும்.

 👉 ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழில் ஒரே மாதிரியான பெயர், இனிஷியல் , பிறந்த தேதி,பாலினம் சரியாக இருந்தால் மட்டுமே இணையதளத்திற்குள் உங்களை பதிவேற்ற முடியும்.

👉 இணையத்தளம் வழியாக பெறப்பட்ட பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ்(Online Income Certificate ரு.2,50,000/- குறைவாக இருக்க வேண்டும்) மற்றும் சாதிச் சான்றிதழ் (Community Certificate) கட்டாயமாக இருக்க வேண்டும்.

👉 மாணாக்கர் வங்கிக் கணக்குடன் (Bank Account ) ஆதார் எண்ணை (seeding) செய்திருக்க வேண்டும். இது கட்டாயமாகும்.

 *குறிப்பு:* 
சான்றிதழில் மற்றும் ஆதார், வங்கி கணக்கு என எல்லா இடங்களிலும் தங்களது பெயர் சரியாக ஒரே மாதிரி உள்ளதா என சரி பார்த்து கொள்ளுங்கள்.. இல்லையெனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு அனைத்து இடங்களிலும் தங்களது பெயரை கல்விச்சான்றிதழ்களில் உள்ளபடி மாற்றிய பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

Scholarship மேலதிக விபரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசியை (1800 599 7638 , Monday to Saturday 10AM to 6 PM ) அழைத்து அல்லது அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், சென்னை இயக்குனர் அலுவலக அதிகாரிகளை அழைத்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்..

பகிர்வு: 
மா.பரதன்
G.சந்திரமோகன்,
அகம் பவுண்டேசன், சென்னை.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...

 இருப்பிட சான்றிதழ் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.


பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய `பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' என்ற மாநாடு கோவையில் நேற்றுநடைபெற்றது. தலைமை வகித்துஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, "தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசுப் பள்ளிமாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை பள்ளிகளில் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு நிலம் நன்கொடை அளித்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களை கவுரவப்படுத்தி வருகிறோம்.

திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு மாநிலபெற்றோர் ஆசிரியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் வி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆதார் பதிவு தொடக்கம்: கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஆதார் பதிவுச் சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய அவர், "வரும் மார்ச் 1-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு தூங்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டாம். தேர்வு குறித்து பயமோ, பதற்றமோ இருக்கக்கூடாது’’ என்றார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CBSE - மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: 9 முதல் 12-ம் வகுப்புக்கு கொண்டுவர திட்டம்

 


1204338

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அலுவலர்கள் சிலர் கூறும்போது, ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம்,கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், உயிரியல்பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையைஅமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்ததேர்வுகளை நவம்பர், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்குப்பின் பெறப்படும் கருத்துகள், பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டுஇத்திட்டம் அமல்படுத்தப்படும்.


கரோனா காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது’’ என்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது

 அரசு பள்ளி ஆசிரியர்கள் . அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் இருந்து பணிக்கு வர வேண் டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது . ஆனால் இந்த நடைமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றுவதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.


இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி , இன வேறுபாடுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்த்து , நல்லிணக்கம் பேணுவதற்கான வழிமுறைகளை வகுத்து , அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணை யத்தை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது . அதன்படி , இந்த ஒருநபர் ஆணையத்தின் பள்ளிக்கல்வித் துறைக்கு சில விவரங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்திருக் கிறது . அதன்படி , ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் பணியாற் | றும் ஆசிரியர்களின் பெயர் . அவர்களின் வீட்டுக்கும் , பள்ளிக் கும் இடையே 8 கி.மீ. தூரத்துக்குள் வசிப்பவர்கள் யார் ?, 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் யார் ?, அவர்களின் இருப்பிட முகவரி ஆகியவை அடங்கிய விவரங்களை ஆசிரியர்களிடம் இருந்து கேட்டு பெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது , ' மாண வர்கள் மட்டுமல்ல , ஆசிரியர்கள் கூட ஒரே சாதிய ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடக்கிறது . சில பள்ளியில் ஒரே சாதியை சேர்ந்த ஆசிரியர்கள் . தலைமை ஆசிரியர் என குழுவாக செயல்படுவதையும் பார்க்க முடி கிறது . இதனை களைய இந்த விவரங்கள் கேட்கப்பட்டு இருக்க லாம் ' என்று கூறினார்கள்.

IMG-20240223-WA0028



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

" 6 வயது நிரம்பினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் " - மத்திய கல்வி அமைச்சகம் கடிதம்

 IMG-20240223-WA0016

" 6 வயது நிரம்பினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் "

 2020 - ல் வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின்படி அரசு பள்ளிகளில் 6 வயது நிரம்பினால் மட்டுமே 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான வயது குறித்து மாநில , யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மணற்கேணி இணையதளம் (https://manarkeni.tnschools.gov.in) - பள்ளிக் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்!

 IMG_20240223_051218

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது.

 காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.

 மணற்கேணி இணையதளத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் .

Website Link👇👇👇

 https://manarkeni.tnschools.gov.in

 Press Release 342 - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

காணொலி பாடங்கள் அடங்கிய ‘மணற்கேணி இணையதளம்' - அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

 


1204208

பள்ளி மாணவர்களுக்கான காணொலி பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையதள திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.


தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் 100பேரை கண்டறிந்து உலகத்தரம் வாய்ந்தகல்வியை சிவ் நாடார்அறக்கட்டளை வழங்கஉள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், சிவ்நாடார் அறக்கட்டளை நிர்வாகி சுந்தர் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.


இதனிடையே, 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளி பாடங்கள் அனைத்தும் 2டி, 3டி வடிவில் காணொலிகளாக வடிவமைக்கப்பட்டு மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான வரவேற்பை கருத்தில்கொண்டு மணற்கேணி திட்டத்துக்காக புதிதாக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் தொடக்க விழாவும் தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த மணற்கேணி இணையதளத்தை (manarkeni.tnschools.gov.in) அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நவீன தொழில்நுட்பம் வந்தாலும் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.


சட்டப்பேரவை வரலாற்றில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவார்கள் என்றார்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News