EE TLM - ENGLISH - PLACES AROUND US - MODULE - 5 - TERM - 3

 


MJHJ

Students will be able to Raha nice and use 8 names for places in the town. (Town hall, hospital, supermarket, museum, library, swimming pool, post office, park).

Students will review previously learnt vocabulary.


Students will be able to identify the different places inside the school campus.


Students will be able to express what they do to the places.Students are able to make simple sentences about the things inside the classroom.


Students will know how to spell new vocabularies.


Show the pictures of places in the school and ask the students what it is.


Let them write the words to their notebook.


Present the word and let the students match it to the pictures.


Let the students read again and again the vocabularies.


Repeatedly let the student spell every word until they memorize all the vocabulary.


Have the students work in pair and take turn to ask and answer the questions.


PDF LINK  AVAILABLE IN BELOW.......


👇👇👇👇👇


MODULE - 1 -  Download here


MODULE - 2  - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு " பண்பாடு மற்றும் விளையாட்டு " வாரம் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 


IMG_20240221_172646

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்பாடுகள் - கல்வி சாரா அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் " 

பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் 2023-24 நடத்துதல் வழங்குதல் வழிகாட்டு நெறிமுறைகள் & ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்

Screenshot_2024-02-21-17-10-15-10_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

Block level மார்ச் 5,6,7 போட்டிகள்

முழு விபரம் 👇👇

Cutural.sports week 2023-24 Proceedings | Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு.

 



 

நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும் , அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 கோடி ரூபாய் செலவில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - Tech lab ) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Classroom ) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன . மேலும் , வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் .

TRUST Exam December 2023 - Selected Students List

 

ஊரகத் திறனாய்வு தேர்வு - டிசம்பர் 2023 - தேர்வு முடிவுகள் - தேர்வான மாணவர்கள் பெயர்ப் பட்டியல்...

TRUST Exam December 2023 - Selected Students List 

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 | 6 - 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

 IMG-20240219-WA0013

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதேபோல் , அரசுப் பள்ளிகளில் பயின்ற , ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும்  ' தமிழ்ப் புதல்வன் ' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் . இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் , பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் , மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் . இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் . உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

 

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget  2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

# அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

# தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

 # உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

# பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

# இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum Report Card - pdf

 மாணவர் தர நிலை அறிக்கை

2023-2024

JUJU

அன்பார்ந்த பெற்றோர்களே!


உங்கள் குழந்தையின் தர நிலையையும் கற்றல் நிலையையும் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த அறிக்கை உதவும்.


உங்கள் குழந்தையின் அடிப்படைக் கட்டளை மேம்படுத்த "எண்ணும் எழுத்தும்" திட்டத்தினை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.


உங்கள் குழந்தைகள் மகிழ்வோடும் ஆர்வத்தோடும் பங்கேற்ற செயல்பாடுகள் பற்றியும் கற்றல் நிலையில் அடைந்த முன்னேற்றத்தையும் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் திறமைகளை பாராட்டி ஊக்கப்படுத்துங்கள்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


👇👇👇👇👇

Ennum Ezhuthum Report Card - pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSGT - English Model Test 4 - Important Qns And Ans

 IMG_20240214_204302

TNSGT - English Model Test 4 - Important Qns And Ans - TET Coaching Centre - Download here

தேர்வு நாளில் மற்றும் தேர்வு அறையில் என்ன செய்ய வேண்டும்?

 1198412

1. தேர்வுக்கு கிளம்பும்போது வீட்டிலேயே அனைத்து பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொண்ட பின் கிளம்புங்கள்.


2. காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள் இல்லையெனில் சோர்வு உங்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.


3. தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே சென்று விடுங்கள். 10 நிமிடம் இருக்கும்பொழுது உங்கள் தேர்வறைக்கு சென்று உங்கள் இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.


4. உங்கள் இருக்கையின் அருகில் காகிதங்கள், துண்டுச்சீட்டுகள், புத்தகங்கள் ஏதேனும் காணப்பட்டால் வெளியில் வைத்துவிடுங்கள். நாம் படித்த பாடங்களில்தான் கேள்விகள் வரும் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருங்கள்.


5. வினாத்தாளை நிதானமாக வாசித்து நன்கு தெரிந்த கேள்விகளை மனதில் தேர்ந்தெடுங்கள். ( இதற்கு 15 நிமிடம் தேர்வுதுறை ஒதுக்கியுள்ளது)


6. வினாத்தாளில் எவ்வித குறிப்பையும் எழுத வேண்டாம்.


7. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்வியை முதலில் எழுதுங்கள், மற்றவற்றை கடைசியாக எழுதுங்கள்.


8. விடைத்தாளில் வினா எண்களை கோட்டுக்கு வெளியேயும், விடையின் எண்களை உள்ளேயும் எழுதுங்கள்.


9. விடைத்தாளில் விடை எழுதும்பொழுது முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு இரண்டாவது பக்கத்தில் தேர்வு எழுதுபவர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்ற விதிமுறைகளை படித்துப்பாருங்கள்.


10. உங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்பதே முக்கியம்.


11. மதிப்பெண்களுக்கேற்ப விடையை சுருக்க மாகவோ, விரிவாகவோ எழுதி நேரத்தை சரி யாகக் கணக்கிட்டு எழுதுங்கள்.


12. விடைத்தாளில் உங்களது கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக இருப்பது அதிக மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும்.


13. பக்க வரிசைப்படி எழுதுகின்றோமா என விடைத்தாளின் பக்க எண்களை பார்த்து விடையளி யுங்கள். அடுத்த பக்கத்தை புரட்டும்பொழுது இரண்டு மூன்று தாள்கள் சேர்ந்துவிடும் விடை எழுதும் அவசரத்தில் அவற்றைச் சரியாக கவனித்து எழுதவும்.



14. நீங்கள் எந்த பேனாவை தேர்விற்கு பயன்படுத்தப் போகிறீர்களோ அந்த பேனாவை தினமும் பயன்படுத்துங்கள்.


15. படம் வரையும்போது, ஸ்கேல், பென்சில் துணைகொண்டு வரையுங்கள். முக்கியமாக ஜியாமெட்ரி பாக்ஸ் எடுத்துச்செல்வது நல்லது.


16. கடைசி 15 நிமிடங்களுக்குள் எல்லா வினாக் களுக்கும் விடையளித்து மீண்டும் ஒருமுறை விடைத்தாளை சரிபார்த்து விட்டுப்போனதை சரியான வினா எண் குறித்து எழுதி நிறைவு செய்யவேண்டும்.


17. தேர்வு நேரம் முடிந்து மணியடிக்கும்வரை தேர்வு கூடத்தில் இருந்து பயனுள்ள வகையில் திருப்புதலைச் செய்யவேண்டும். ஒருமுறை எல்லா பதில்களையும் சரி பார்த்துவிடுங்கள்.


18. மணி அடித்த பிறகு எழுதியதில் ஏதேனும் தவறோ குறைகளோ ஏற்பட்டிருப்பின் அதற்காக மனதை வருத்திக்கொள்ளாது அடுத்தத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடருங்கள்.


19. தேர்வுக்கு நடுவே விடுமுறை வந்தாலும் தேர்வு இருந்தால் எப்படிப் படிப்போமோ அதே உத்வேகத்துடன் படியுங்கள்.


வெற்றி பெற வாழ்த்துகள்!🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSGT - 2024 Exam Science and English Study Material

 IMG_20240213_111806

What's New

TNSGT - 2024 Exam Science Study Material - Srimaan Coaching Centre - T/M - Download here

TNSGT - English Model Test 3 - Important Qns And Ans - TET Coaching Centre - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு!

 

IMG_20240213_194401


50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.41 Health Checkup - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Aided school Surplus proceedings

 

IMG_20240213_160857

2023-24ஆம் பள்ளிக் கல்வி அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் - தொடர் நடவடிக்கைகள் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

Aided school Surplus proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்

 


62869_20240212134420

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் 7,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், 100 எம்.பி.பி.எஸ்., அலைவரிசை வேகத்துடன் கூடிய ஆன்லைன் இணைப்பு வசதியும் தரப்பட உள்ளது.


தொழில்நுட்ப மேம்பாட்டை முழுமையாக பயன்படுத்தி, நகர் பகுதிகள் முதல் கிராமங்கள் வரை, அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகங்கள் வழியே, ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும்; மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


- குமரகுருபரன்


செயலர், பள்ளிக்கல்வி துறை


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு; தமிழகத்திற்கு பாராட்டு

 


62870_20240212134732

ஜல் ஜீவன் இயக்கம், துாய்மை பாரதம் திட்டம் போன்றவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழகத்தில் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட; செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பின், கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


ஊரகப் பகுதிகளில், தனி நபர் வீடுகளில், 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில், தேசிய அளவில், 73.98 சதவீத வீடுகளுக்கும்; தமிழக ஊரகப் பகுதிகளில், ஒரு கோடிக்கு மேல் அதாவது, 80.43 சதவீத வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு, 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது, இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என, மத்திய அரசு செயலர் பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்.

 அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு நடக்காமல் தடுக்க, ஆன்லைன் வழி சேர்க்கை முறை கொண்டு வர பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில், 45 லட்சம் மாணவ, மாணவியரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 22 லட்சம் பேரும் படிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களின் பணியிடங்களை தக்க வைக்க, மாணவ -- மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்டுவதாக, கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை விசாரணை செய்து, போலி மாணவர் எண்ணிக்கை பிரச்னையை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல்போன் எண் போன்றவற்றை, 'எமிஸ்' ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், இந்த பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண, மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


ஏற்கனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.


இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஆன்லைன் வழி சேர்க்கை நடத்தினால், போலி விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியாது என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.


மேலும், பெற்றோருக்கு சிரமம் இன்றி, பள்ளி ஆசிரியர்கள் அல்லது எமிஸ் தளத்துக்கான ஆன்லைன் பணி ஊழியர்கள் வழியே, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும், ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023

 


IMG_20240212_192601

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கடிதத்தில் , கோயில்களின் நகரமாம் கும்பகோணம் மாநகரில் , தென்பரதக் கும்பமேளா என்று அனைவராலும் அழைக்கப்படும் மாகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் , குடந்தையில் உள்ள மகாமகத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று சிறப்பாக நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு 12 சைவத் திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத் திருகோயில்களின் சுவாமிகள் , தீர்த்தவாரி செய்வதற்காக வருகை தருகின்றனர் என்றும் , இப்பதினேழு சுவாமிகளையும் தரிசனம் செய்வதற்காகவும் , மகாமகத் திருக்குளத்தில் , புனித நீராடுவதற்காகவும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்றும் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும் செய்கின்றனர் என்றும் , இந்த வருடம் 06.03.2023 அன்று மாசிமகத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் , இத்தகையப் பெருமை வாய்ந்த மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து , அதனை ஏற்றுக் கொண்டு . அவ்வாறே ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த உள்ளூர் விடுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம் , 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது , மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

GO NO : 297 , DATE : 10.05.2023 - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News