தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிகாட்டு நெறிமுறைகள்

 

மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகிய முத்தரப்பின் தலையாய கடமை ஆகும். அந்த வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ( 2024 - 25 ) 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் பின்வரும் நடை முறைகளை பின்பற்ற அரசு ஆணையிடுகிறது. அரசு பள்ளிகளில் தரமான, இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வண்ணம் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுடன் தற்காப்புக் கலை பயிற்சி, கல்விச்சுற்றுலா மற்றும் இலக்கிய மன்றம், விநாடி வினா போட்டி, கலைத் திருவிழா உள்ளிட்ட கல்விசாரா இணை செயல்பாடுகள், விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். அரசு பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத உள் இட ஒதுக்கீடு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு, அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க மாதம் தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை ஆகியவற்றை பெற்றோ ருக்கு எடுத்துக் கூற வேண்டும்.


கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு களை பிரித்து கொடுத்து சேர்க்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப் .13 க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்

 


லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 


10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 


10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த மாதம், 28ல் முடிகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.


இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.


இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - Director Proceedings

 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் Beo login மூலம் download செய்து BRC மூலம் Print எடுத்து பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்து தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


பார்வையில் காணும் கடிதத்தில், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டும், அத்தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்குஏற்ப பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நிதியானது வட்டார வாரியாக கணக்கிடு செய்து மாவட்ட அளவில் தொகுத்து ரூ 2,43,60,453/- ஒதுக்கீடு செய்து இவ்வியக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இத்தேர்வினை நடத்திடும் பொறுப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார். தேர்விற்காண வினாத்தாட்களை (BEO) Login மூலமாக பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களைஅந்தந்த வட்டார வளமையங்களில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு பள்ளில் மாணவர் எண்ணிக்கைகேற்ப வினாத்தாட்களை பிரதி எடுக்கும் பணியினை மேற்கொள்ளச் செய்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மூன்றாம் பருவத் தேர்வுக்கான நிதியானது இணைப்பு 1ல் உள்ளவாறு 38 வருவாய் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. பெறப்படும் தொகையினை வட்டார வளமையத்தில் நகலெடுப்பதற்கான வினாத்தாள்களின் எண்ணிக்கை வினாத்தாள்களின் பக்க எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப வட்டார வளமையம் வாரியாக சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள இணைப்பு 2ல் உள்ளவாறு விடுவிக்குமாறும், இத்தேர்வினை எவ்வித இடர்பாடும் இன்றி இணைப்பு3ல்


Click Here to Download - 1- 5th - Ennum Ezhuthum - Term 3 Exam Question Download Instructions - Director Proceedings - Pdf







🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings

  2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET முதல் தாள் மற்றும் TET இரண்டாம் தாள்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று வழிவகுக்கப்பட்டுள்ளது.

எனவே 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இடைநிலை ஆசிரியராகவும் மற்றும் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் எவரும் விடுபடாமல் பணிப்பதிவேட்டினை ஒப்பிட்டு சரிபார்த்தும், மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பாக நியமனம் பெற்று தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எவரேனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருப்பின் 

அவ்வாசிரியர்களின் பெயர்களையும் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்து கொடுக்கப்பட்ட படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து காலதாமதத்தை தவிர்த்து, சுனக்கமின்றி செயல்பட்டு. 15,03.2024 -க்குள் தனிநபர் மூலம் உடன் அனுப்பி வைத்திடவும் மேலும் காலதாமதம் ஏற்படின் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.




Click Here to Download - TET Passed SG/BT Teachers List - Forms &  Proceedings - Pdf





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களை மீண்டும் தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு - Proceedings

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாகப்பட்டினம் மாவட்டம், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள 216 பகுதி நேர பயிற்றுநர்களின் மார்ச்- 2024 தொகுப்பூதியமானது ஊதிய கேட்புப் பட்டியல் பெறப்படாமல் EMIS வழியாக பெறப்படும் வருகை புரிந்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படவுள்ளது. 

எனவே மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் மாற்றுப் பணி ஆணை இரத்து செய்யப்பட்டு அவர்களின் EMIS Profile மற்றும் தொகுப்பூதியம் பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் அனைத்து பகுதி நேர பயிற்றுநர்களின் EMIS வருகையை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்

 அறிவியலை பிரபலப்படுத்தும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.


பள்ளி மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சென்னை ஐஐடி, தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை இலவசமாகச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரத்து 702 புத்தகங்களை ஐஐடி வழங்கியுள்ளது.


இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.சீனிவாஸ் கூறுகையில், “சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக ‘பாப்புலர் சயின்ஸ்’ திட்டம் அமைந்துள்ளது.


9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இவை ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது.


மாணவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றி தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. 2026-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

 எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி  அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  

முதற்கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மார்ச் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 


மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




3 மாத அகவிலைப்படி நிலுவை தொகை எப்போது வழங்கப்படும்? - கருவூல அதிகாரி கடிதம்

 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் நிலுவை தொகை ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் வழங்கப்படும்





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

PM SHRI பள்ளி குறித்த தகவல்கள்


 

PM SHRI பள்ளி என்பது இந்திய அரசாங்கத்தால் மத்திய நிதியுதவி பெற்ற திட்டமாகும் . இந்த முன்முயற்சியானது மத்திய அரசு / மாநிலம் / யூனியன் பிரதேச அரசு / உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் 14500 PM SHRI பள்ளிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது , இதில் KVS மற்றும் NVS உட்பட , ஒவ்வொரு மாணவரும் வரவேற்கப்படுவார்கள் மற்றும் அக்கறை காட்டப்படுகிறார்கள் , அங்கு பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் சூழல் உள்ளது. கற்றல் அனுபவங்கள் வழங்கப்படுகின்றன , மேலும் நல்ல உள்கட்டமைப்பு மற்றும் கற்றலுக்கு உகந்த ஆதாரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.


Click Here to Download - PM SHRI பள்ளி குறித்த தகவல்கள் - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களை மீண்டும் தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு - Proceedings

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாகப்பட்டினம் மாவட்டம், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள 216 பகுதி நேர பயிற்றுநர்களின் மார்ச்- 2024 தொகுப்பூதியமானது ஊதிய கேட்புப் பட்டியல் பெறப்படாமல் EMIS வழியாக பெறப்படும் வருகை புரிந்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படவுள்ளது. 

எனவே மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் மாற்றுப் பணி ஆணை இரத்து செய்யப்பட்டு அவர்களின் EMIS Profile மற்றும் தொகுப்பூதியம் பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் அனைத்து பகுதி நேர பயிற்றுநர்களின் EMIS வருகையை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy

 Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued .

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?


⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,

⭕கர்ப்பிணிகள்,

 ⭕பாலூட்டும் தாய்மார்கள்,

⭕மாற்று திறனாளிகள்

 மற்றும்

⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு..






🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2024 பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்தில் எப்போது?

 Click Here to Download - MP Election Schedule 2024 - Pdf

நாடே தவமிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் சற்று முன் தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டது.


இதன்படி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அன்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் விஜய தாரணி அவர்கள் ராஜினாமா செய்ததால் காலியாகி உள்ள சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 எனவே தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் 

முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏப். 19ல் தேர்தல் நடக்கும்.

இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 20.03.24

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24

வேட்பு மனு பரிசீலனை- 28.03.24

வேட்பு மனு வாபஸ்- 30.03.24

தேர்தல் தேதி- 19.04.24

ஓட்டு எண்ணிக்கை 04.06.24


பிற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் பின்வருமாறு


முதல்கட்ட வாக்குப்பதிவு


முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.


ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.


இரண்டாம் கட்டம்


மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.


மூன்றாம் கட்டம்


நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.


நான்காம் கட்டம்


நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.


ஐந்தாம் கட்டம்


ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.


ஆறாம் கட்டம்


ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.


ஏழாம் கட்டம்


ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.


ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாள்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NILP Exam 17.03.2024 - Instructions

 IMG_20230317_074005

2023-2024 புதிய பாரத எழுத்தறிவு திட்டம்  - 17.03.2024 அன்று தேர்வு நடத்துவது சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் 


 NILP Exam Instructions - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக)

 


IMG_20240315_095957

தொடக்கக் கல்வி 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8


18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மதுரை மாவட்டம் , நாகமலைப்புதுக்கோட்டை , பில்லர் வளாகத்தில் நடைபெறுதல் கூடுதலாக 2 தொகுதிகளுக்கு ( Team C and Team D ) From Batches 31 to 40 - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 13-03-2024👇

Click Here to Download DEE Proceedings...


Click Here to Download Resource Persons List...


Click Here to Download Additional Participants List (Team C & Team D)...


Click Here to Download DEE Proceedings & List of HeadMasters to attend Madurai Pillar Center Training - Team A & Team B (District & Block wise)...

TRB - Asst.professor Exam Syllabus - 2024

 

images%20(51)

TRB மூலம் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான பாடத்திட்டம் (Syllabus) வெளியீடு!!!👇

TRB - Asst.professor Exam Syllabus - 2024 - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

விடியல் பயணத்திட்டம் - மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

 IMG_20240315_172103

விடியல் பயணத்திட்டம் - மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.11 - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

புதுமைப்பெண் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

 IMG_20240315_171547

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.16 - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

 

ரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

IMG_20240315_203630


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில் , அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீழ்க்காணும் அட்டவணைப்படி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிர்ணயிக்கவும் பணிநிரவல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது .

G.O.Ms.No.80 - Deployment of Lab Asst👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News