4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - காவல்காரர் - வினா - விடைகள்

 தமிழ் 

இரண்டாம் பருவம்

1. காவல்காரர் 

பக்கம் 3

பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.

விடை :  தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது. 

 காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

பக்கம் 4

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….

 அ) பெயர் + இலாத         ஆ) பெயர் + இல்லாத        இ) பெயரில் + இல்லாத                   ஈ) பெயரே + இல்லாத 

விடை: 

 ஆ) பெயர் + இல்லாத 

 2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்………………… 

அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்

அ) கீழே

 3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது…………………… 

அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது

ஆ) உயிரற்ற பொருள்

4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….

 அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை

விடை :  இ) அசையவில்லை 

 5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்……………………. 

அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும் 

விடை: அ) நாளும்

PREPARED BY THULIRKALVI TEAM

வினாக்களுக்கு விடையளிக்க

 1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்? 

விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

 2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?

விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

 4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை? 

விடைகாவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.


விடை : 

1. சரிகை வேட்டை 
2. கறுப்புக் கோட்டு 
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை 
5. கனத்த மழை.

பக்கம் 5
பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?

மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா 
குழந்தைச் செல்வம் யாவுமே
 கூடிஆடும் திருவிழா 
குமரிப் பெண்கள் யாவரும் 
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும் 
கலைகட்டும் திருவிழா.

பக்கம் 6
உரைப்ப குதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன? 

விடை:  பூ, காய், கனி, தண்டு 

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது? 

விடை: வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது. .

 3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

 விடை:  செவ்வாழை, பூவன் வாழை  

 4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை:  வாழை + இலை

 5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக. 

விடை:  சிலவகை.

PREPARED BY THULIRKALVI TEAM

செயல் திட்டம்
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும்
செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர் 

விடை: இயற்கைத் தோட்டம். 

 2. உரிமையாளர் பெயர். 

விடை: சிவராமன்.

 3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

விடை:பருத்திப்பட்டு 

4. நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம். 

விடை: கிணறு. 

5. தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.

 விடை:கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை. 

விடை: நன்றாக உள்ளது.

0 Comments:

Post a Comment